• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு! விண்ணப்பிப்பது எப்படி?

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு! விண்ணப்பிப்பது எப்படி?

Chief Minister Girl Child Protection Scheme : தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை கொடுக்கிறது. யார் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிக்கலாம்? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

Written ByKarthikeyan Sekar
Published: Aug 08, 2026, 09:09 AM IST|Updated: Aug 08, 2026, 09:14 AM IST
joinshare
பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் கொடுக்கும் தமிழ்நாடு அரசு! விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit: Tamil Nadu Government CM Girl Child Protection Scheme Latest Update

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Chief Minister Girl Child Protection Scheme : தமிழ்நாடு அரசு பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பெண் சிசுக் கொலையை தடுக்ககவும் ‘முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்’ என்ற பெயரில் நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் ஒரு வைப்புத் தொகை திட்டமாகும். புதிதாக பெண் குழந்தைகள் பிறந்தால், இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பெண் குழந்தை என்றால் ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் என்றால் தலா 25 ஆயிரம் ரூபாயும், மூன்று பெண் குழந்தைகள் என்றால் தலா 25 ஆயிரமும் அரசு டெபாசிட் செய்யும்.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் விதிமுறைகள்

புதிதாக பிறக்கும் பெண் குழந்தையின் பெயரில் இந்த தொகையானது தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் வைப்புத் தொகையாக சேமித்து வைக்கப்படும். அவ்வாறு சேமித்து வைக்கப்பட்ட நிதியின் முதிர்வு தொகையை பெற்றுக் கொள்ள சார்ந்த பெண் குழந்தை 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி மதிப்பெண் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இந்த விதிமுறை மிக மிக முக்கியமானது. குழந்தை பிறந்ததும் சிசுக் கொலையை தடுக்க அவர்களின் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் தமிழ்நாடு அரசு, அக்குழந்தையின் கல்வியை உறுதி செய்யும் பொருட்டு 10 ஆம் வகுப்பு வரை கட்டாயம் படித்திருந்தால் மட்டுமே இந்த முதிர்வுத் தொகையை பெற முடியும் என்ற விதிமுறையையும் இத்திட்டத்தில் வைத்துள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வருமான சான்று (ரூ.1,20,000க்குள்), பயனாளியின் சாதி சான்று, வயது சான்று (பிறப்பு சான்று அல்லது பள்ளிக் கல்வி சான்று), பயனாளியின் இருப்பிடச் சான்று, குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சான்று (40 வயதிற்குள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்க வேண்டும், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்று, குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அந்த பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் இரண்டாவது பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும், ஆதார் அட்டை, குடும்ப புகைப்படம் ஆகிய சான்றுகள் அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள பெற்றோர், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் அசல்கள் மற்றும் நகல்களுடன் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்திற்குச் சென்று உடனடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes