SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழக அரசு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள்: கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் விவரம்

ஹஜ் ஆய்வாளர், மகளிர் நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் பணிகள் ஆகியவற்றுக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முழு விவரம் குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Aug 25, 2026, 10:23 AM IST | Updated: Aug 25, 2026, 10:27 AM IST
Join

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கான இரண்டு முக்கியப் பணியிட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஒன்று, 2027 ஹஜ் பயணிகளுக்கான மாநில ஹஜ் ஆய்வாளர் தற்காலிகப் பணி, மற்றொன்று, திருவண்ணாமலை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பணியிடம் ஆகும். இந்த இரண்டு வேலைவாய்ப்புகள் குறித்த விரிவான தகவல்கள் இங்கே விரிவாக பார்க்கலாம்...

1. ஹஜ் ஆய்வாளர்கள் தற்காலிக நியமனம்

2027 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிற்குப் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்குத் தேவையான உதவிகளையும் வழிகாட்டுதலையும் வழங்குவதற்காக, தற்காலிக மாநில ஹஜ் ஆய்வாளர்கள் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தகவலை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.  

பணியின் தன்மை, காலம்: தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தற்காலிகமாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படுவர். பணிக்காலம் 03.04.2027 முதல் 25.06.2027 வரை சுமார் இரண்டு மாதங்கள் ஆகும்.  

பணிக்கால சலுகை: சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் முழுமையான பணிக் காலமாகவே கருதப்படும்.  

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய, மாநில அரசு ஊழியர்கள். துணை இராணுவப் படைகளில் பணியாற்றும் தகுதிவாய்ந்த அலுவலர்கள். தன்னாட்சி அமைப்புகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்கள்.  

விண்ணப்பிக்கும் முறை: மும்பை இந்திய ஹஜ் குழுவின் சுற்றறிக்கை எண்.07 (நாள்: 11.08.2026)-ன் படி இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முழு விவரங்களை www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.  

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 27.08.2026.  

2. திருவண்ணாமலை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் பணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்திற்கு சிறப்பு அரசு வழக்கறிஞர் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான திருத்தப்பட்ட அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ளார்.  

பதவியின் பெயர்: சிறப்பு அரசு வழக்கறிஞர் – 1 பணியிடம்.  

பணிபுரியும் இடம்: மகளிர் விரைவு நீதிமன்றம்  திருவண்ணாமலை.  

தகுதி: பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (BNSS) பிரிவு 18(8)-ன் கீழ், வழக்கறிஞராகக் குறைந்தது 10 ஆண்டுகள் நீதிமன்றப் பணி அனுபவம் (Bar Practice) கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் தேதியில் கட்டாயம் 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.  

விண்ணப்பிக்கும் முறை:

நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து 6 நகல்களில் சமர்ப்பிக்க வேண்டும்.  

வயது, கல்வி, சாதி, நீதிமன்றப் பணி அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை இணைக்க வேண்டும்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை "மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், திருவண்ணாமலை மாவட்டம்" என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சலில் அனுப்ப வேண்டும்.  

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29.08.2026 (மாலை 05:45 மணிக்குள்). (தாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது).  

முக்கிய தகவல்: முந்தைய அறிவிப்புகளின் கீழ் ஏற்கனவே விண்ணப்பித்த 10 ஆண்டுகள் அனுபவமுள்ள வழக்கறிஞர்கள் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES