SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மண்ணின் மகள் திட்டத்தில் நில உடமையாளர்களாக மாற விண்ணப்பிப்பது எப்படி?

Mannin Magal Scheme : மண்ணின் மகள் திட்டம், நில உடமையாளர்களாக விண்ணப்பிப்பது எப்படி? அதன் விதிமுறைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

Written By Karthikeyan Sekar
Published: Aug 07, 2026, 12:09 PM IST | Updated: Aug 16, 2026, 11:52 AM IST
Join

Mannin Magal Scheme : தமிழ்நாடு அரசு இப்போது மண்ணின் மகள் திட்டம் செயல்படுத்தப்படும் என 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பழங்குடியினர், ஆதிதிராவிடர் மக்களில் விவசாய கூலித் தொழிலாளர்களாக இருக்கும் பெண்களை நில உடமையாளர்களாக மாற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதேபோன்ற திட்டம் 2026 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்பதற்கு முன்பாக, திமுக தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சராக இருந்தபோது ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க | பெண்களே 5 ஏக்கர் சொந்த நிலம் வாங்க வேண்டுமா? தமிழ்நாடு அரசின் சூப்பர் அப்டேட்

கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் புதிய பெயரில் மற்றும் சில விதிமுறை மாற்றங்களுடன் தவெக ஆட்சியில் செயல்படுத்தப்படுவதால், இத்திட்டமும் அதே வரிசையில் செயல்படுத்தப்பட இருக்கிறது. எனவே, நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டத்தில் என்னென்ன விதிமுறைகள் உள்ளது என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்

யார் விண்ணப்பிக்கலாம்?

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (SC/ST) சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்திற்கு முதன்மையாக விண்ணப்பிக்கலாம்.

குடும்பத்தில் தகுதியான பெண்கள் யாரும் இல்லாத பட்சத்தில், முன்னுரிமை அடிப்படையில் கணவன் அல்லது மகன்கள் பெயரிலும் விண்ணப்பிக்க அனுமதி உண்டு.

மேலும் படிக்க | பெண்கள் 5 ஏக்கர் நிலம், ரூ.5 லட்சம் மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்னென்ன?

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 18 முதல் 65 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். (சில மாவட்ட அறிவிப்புகளில் 18-55 என்றும் குறிப்பிடப்படுகிறது).

வருமான வரம்பு: குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

நிலம் இல்லாமை: விண்ணப்பதாரர் அல்லது அவரது குடும்பத்தினர் பெயரில் எந்தவொரு விவசாய நிலமும் சொந்தமாக இருக்கக் கூடாது.

தொழில்: விண்ணப்பதாரரின் முக்கியத் தொழில் விவசாயம் சார்ந்ததாக (விவசாயத் தொழிலாளி) இருக்க வேண்டும்.

முந்தைய மானியம்: விண்ணப்பதாரரோ அல்லது அவரது குடும்பத்தினரோ இதற்கு முன்பு தாட்கோ மூலமாக எந்தவொரு திட்டத்திற்கும் மானியம் பெற்றிருக்கக் கூடாது.

நில பரிமாற்றம்: கடந்த 5 ஆண்டுகளில் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை மற்றவர்களுக்கு விற்கவோ அல்லது தானமாகவோ மாற்றியிருக்கக் கூடாது.

திட்டத்தின் முக்கிய நிபந்தனைகள்:

நிலத்தைத் தேர்ந்தெடுத்தல்: வாங்க உத்தேசித்துள்ள விவசாய நிலத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்ய வேண்டும்.

விற்பனையாளர் தகுதி: நிலத்தை விற்பவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியின (SC/ST) சமூகத்தைச் சேராதவராக (Non-SC/ST) இருக்க வேண்டும்.

நிலத்தின் அளவு: அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5.0 ஏக்கர் புஞ்சை நிலம் வரை வாங்கலாம்.

பதிவுக் கட்டண விலக்கு: இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு முத்திரைத் தாள் கட்டணம் (Stamp Duty) மற்றும் பதிவுக் கட்டணத்திலிருந்து (Registration Fees) 100% முழு விலக்கு அளிக்கப்படும்.

விற்பனைத் தடை: இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கிய நிலத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் விற்கக் கூடாது.

நிதி உதவி மற்றும் மானியம்:

திட்ட மதிப்பில் (நிலத்தின் சந்தை மதிப்பில்) அதிகபட்சமாக 50% அல்லது ரூ. 5.00 லட்சம் வரை தாட்கோ மூலம் மானியமாக (Subsidy) வழங்கப்படும். மீதமுள்ள தொகை பயனாளிகளுக்கு எவ்வித முன்வைப்புத் தொகையும் (Own Contribution) இன்றி, தேசிய பட்டியலின நிதி மேம்பாட்டுக் கழகம் அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் மிகக் குறைந்த வட்டியில் (சுமார் 6%) கடனாக வழங்கப்படும்.

இந்த ஆண்டு அறிவிப்பு எப்போது வரும்?


தாட்கோ இணையதளத்தில் நன்னிலம் மகளிர் நில உடமைத் திட்டத்திற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுத் தளம் செயல்பாட்டில் உள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மாவட்ட வாரியாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை காத்திருக்கத் தேவையில்லை. தகுதியுள்ள நபர்கள் எப்போது வேண்டுமானாலும் தாட்கோவின் பிரத்யேக இணையதளம் வாயிலாக நேரடியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் இணையதள முகவரி: newscheme.tahdco.com

தேவைப்படும் ஆவணங்கள் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை, நிலத்தின் விவரங்கள் ஆகியவற்றைக் கொண்டு இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவோ உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலும் படிக்க | பெண் குழந்தைகளின் பெற்றோர்களே! தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES