• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வீட்டுமனை பதிவு! ரியல் எஸ்டேட் துறையினருக்கான முக்கிய அப்டேட் Explained

வீட்டுமனை பதிவு! ரியல் எஸ்டேட் துறையினருக்கான முக்கிய அப்டேட் Explained

Tamil Nadu Government Plot Registration New Rules: மனைப்பிரிவு பதிவு தொடர்பாக TNRERA முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Written ByKarthikeyan Sekar
Published: Oct 04, 2026, 04:14 PM IST|Updated: Oct 04, 2026, 04:24 PM IST
joinshare
வீட்டுமனை பதிவு! ரியல் எஸ்டேட் துறையினருக்கான முக்கிய அப்டேட் Explained
Image Credit: Tamil Nadu Government Plot Registration New Rules

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கனும்.. இபிஎஸ் ஆவேசம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கனும்.. இபிஎஸ் ஆவேசம்!

2

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு அதிர்ச்சி தகவல்! அவசியமில்லா அரசு பணிகள் விரைவில் ரத்து

3

கோவை ரயில் பயணிகள் கவனத்திற்கு: அக்., 3, 4 தேதிகளில் முக்கிய ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்!

4

மதுரை நவராத்திரி திருவிழா: 10 நாட்கள் இந்த பூஜைகள் இருக்காது...

5

வீட்டுமனை பதிவு! ரியல் எஸ்டேட் துறையினருக்கான முக்கிய அப்டேட் Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Government Plot Registration New Rules: தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் (TNRERA) சமர்ப்பிக்கப்படும் திட்டப் பதிவு விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கவும், ஒப்புதல் பணிகளை விரைவுபடுத்தவும் திட்ட மேம்பாட்டாளர்களுக்கு (Real Estate Developers / Promoters) முக்கிய அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களின் பரிசீலனை காலம், சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் துல்லியம் மற்றும் முழுமையைப் பொறுத்தே அமையும் என்று TNRERA தெளிவுபடுத்தியுள்ளது.  

5,423 விண்ணப்பங்களில் 1,199 நிராகரிப்பு அல்லது திருப்பி ஒப்படைப்பு – புள்ளிவிவரம்

TNRERA வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 2026 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 15 வரை மொத்தம் 5,423 திட்டப் பதிவு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில்:  

3,251 விண்ணப்பங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.  

1,199 விண்ணப்பங்கள் முழுமையற்ற ஆவணங்கள் மற்றும் குறைபாடுகள் காரணமாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.  

மீதமுள்ள 973 விண்ணப்பங்கள் தற்போதைய நிலையில் பரிசீலனை, குறைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் மறுசமர்ப்பிப்பு ஆகிய பல்வேறு கட்டங்களில் நிலுவையில் உள்ளன.  

பட்டா மற்றும் DTCP நிலப் பரப்பளவு முரண்பாடுகளைத் தவிர்க்க எச்சரிக்கை'

விண்ணப்பங்களை ஆய்வு செய்ததில், பல திட்டங்களில் வருவாய்த்துறை ஆவணங்களான பட்டா, உரிமைப் பத்திரங்கள் (Title Deeds) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள நிலத்தின் பரப்பளவிற்கும், நகர் ஊரமைப்புத் துறை இயக்ககம் (DTCP) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பிற்கும் இடையே முரண்பாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.  

இத்தகைய வேறுபாடுகள் எதிர்காலத்தில் கடுமையான நில உரிமைப் பிரச்சனைகளை உருவாக்கி, வீடு மற்றும் மனை வாங்குவோரின் உரிமைகளைப் பாதிக்கக்கூடும். எனவே, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன் அனைத்து ஆவணங்களிலும் உள்ள நிலப் பரப்பளவை மிகக் கவனமாகச் சரிபார்த்து, முழுமையான ஒருமைப்பாடு இருப்பதை உறுதி செய்யுமாறு மேம்பாட்டாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

உள்கட்டமைப்புப் பணிகள் மற்றும் 'ஜியோ-டேக்கிங்' புகைப்படங்கள் கட்டாயம்

நகர் ஊரமைப்புத் துறை (DTCP) மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் அனுமதிகளின்படி, மனைப்பிரிவுகளில் கீழ்க்கண்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக அமைப்பது கட்டாயமாகும்:  

தார்/சிமெண்ட் சாலைகள்  

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (OHT)  

தெருவிளக்குகள் மற்றும் மழைநீர் வடிகால்கள்  

மரங்கள் மற்றும் மரக்கன்றுகள் நடுதல்  

இருப்பினும், பல திட்டங்களில் இவ்வசதிகள் முழுமையாகச் செய்யப்படாமலும், மேம்போக்கான புகைப்படங்களை இணைப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, அனைத்து வசதிகளும் முறையாக முடிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து, அவற்றை ஜிபிஎஸ் அமைவிடத்தைக் காட்டும் வகையில் தெளிவாக Geo-tagging செய்யப்பட்ட முழுமையான புகைப்படங்களாகப் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (OHT) அமைப்பதற்கான அரசாணை விதிமுறைகள்

ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரின் சுற்றறிக்கையின்படிமேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைப்பது குறித்துப் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்:  

10,000 சதுர மீட்டருக்கும் குறைவான பரப்பளவு: இத்தகைய மனைப்பிரிவுகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (OHT) அமைக்க வேண்டிய அவசியமில்லை.  

10,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு: மனைப்பிரிவின் உள்ளேயே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நேரடியாக அமைக்க வேண்டும் அல்லது அதற்கான நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செலுத்த வேண்டும்.  

மேலும் படிக்க | வெற்றி மகளிர் கடன் திட்டம்: ரூ.5 கோடி வரை கடனுதவி.. யாருக்கெல்லாம்? எப்படி பெறுவது? Explained

விண்ணப்பங்கள் விரைந்து ஒப்புதல் பெற TNRERA வேண்டுகோள்

விண்ணப்பப் படிவங்கள் மற்றும் பரிசீலனை நடைமுறைகளை எளிமைப்படுத்தி, காலதாமதத்தைக் குறைக்க TNRERA பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பில்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் தேவையான அனைத்து சட்டப்பூர்வ அனுமதிகள் மற்றும் முழுமையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஆரம்ப நிலையிலேயே சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பரிசீலனையின் போது கேட்கப்படும் சந்தேகங்களுக்கு உரிய காலத்திற்குள் தெளிவான பதில்களை வழங்கினால் மட்டுமே திட்டங்கள் தேவையற்ற தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் பெறும் என்றும் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | ஒப்பந்த செவிலியர் நியமனத்தில் முறைகேடு புகார்: அமைச்சர் அருண்ராஜ் தொகுதியில் வெடித்த சர்ச்சை

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer