• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /மதுரை
  • /மதுரை நவராத்திரி திருவிழா: 10 நாட்கள் இந்த பூஜைகள் இருக்காது...

மதுரை நவராத்திரி திருவிழா: 10 நாட்கள் இந்த பூஜைகள் இருக்காது...

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அக்டோபர் 11 முதல் அக்டோபர் 20 வரை நவராத்திரி திருவிழா நடைபெற இருக்கிறது. இதுகுறித்து விரிவாக காணலாம்.

Written BySudharsan G
Published: Oct 04, 2026, 04:19 PM IST|Updated: Oct 04, 2026, 04:24 PM IST
joinshare
மதுரை நவராத்திரி திருவிழா: 10 நாட்கள் இந்த பூஜைகள் இருக்காது...
Image Credit: Madurai Meenakshi Amman Temple | Image Source : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கனும்.. இபிஎஸ் ஆவேசம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கனும்.. இபிஎஸ் ஆவேசம்!

2

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு அதிர்ச்சி தகவல்! அவசியமில்லா அரசு பணிகள் விரைவில் ரத்து

3

கோவை ரயில் பயணிகள் கவனத்திற்கு: அக்., 3, 4 தேதிகளில் முக்கிய ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்!

4

மதுரை நவராத்திரி திருவிழா: 10 நாட்கள் இந்த பூஜைகள் இருக்காது...

5

வீட்டுமனை பதிவு! ரியல் எஸ்டேட் துறையினருக்கான முக்கிய அப்டேட் Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

உலக பிரசித்திப் பெற்ற ஆன்மீக திருத்தலங்களில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலும் ஒன்று. வரலாற்று சிறப்புமிக்க இந்த திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பின் கடந்த செப். 17ஆம் தேதி அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடந்த அக்டோபர் 2ஆம் தேதியுடன் மண்டல பூஜை நிறைவடைந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை நிறைவு பெற்றதை ஒட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அக். 2ஆம் தேதி ஒரே நாளில் 1 லட்சம் பேர் சாமி தரிசனம் மேற்கொண்டனர். கும்பாபிஷேகம் அன்றே 1.5 லட்சம் தரிசனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மதுரை இளைஞர்களே... அக். 10இல் வேலைவாய்ப்பு முகாம் - முன்பதிவு முக்கியம்

அக். 11 முதல் அக். 20 வரை

இந்நிலையில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் இந்தாண்டுக்கான நவராத்திரி உற்சவம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி (ஞாயிறு) முதல் அக்டோபர் 20ஆம் தேதி (செவ்வாய்) வரை விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. நவராத்திரி விழா குறித்து இங்கு விரிவாக காணலாம்.

நவராத்திரி திருவிழா நிகழ்வுகள்

மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் விரிவுபடுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோயிலில் நவராத்திரி நாட்களில் கொலு மண்டபமும் திருக்கல்யாண மண்டபமும் முக்கிய மையங்களாக விளங்கும்.

10 நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளும் கொலு மண்டபத்தில் மீனாட்சி அம்மன் புராண வரலாற்று நிகழ்வுகளை விளக்கும் வகையில் விதவிதமான தெய்வீகக் கோலங்களில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.

கோயில் வளாகத்தில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மாலை வேளைகளில் பரதநாட்டியம், கர்நாடக இசை, வீணைக் கச்சேரி மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவுகள் பக்தர்களை பரவசப்படுத்தும் வகையில் நடத்தப்பட இருக்கின்றன.

மேலும் படிக்க | இனி கவலை வேண்டாம்... மதுரை - சென்னை விமான சேவையில் முக்கிய மாற்றம்

சிறப்பு பூஜைகள் ரத்து

அதேநேரத்தில் இந்த நவராத்திரி திருவிழா நாட்களில் கொலு மண்டபத்தில் அம்மனுக்கு திரைச்சீலை இட்டு விசேஷ அபிஷேகங்கள் மற்றும் அலகாரங்கள் நடைபெறும் குறிப்பிட்ட நேரங்களில், மூலஸ்தானத்தில் தனிநபர் அர்ச்சனைகள் செய்வதற்கோ அல்லது தேங்காய் உடைப்பதற்கோ அனுமதி வழங்கப்படாது.

மேற்கண்ட நேரங்களில் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும் உற்சவ அம்பாளுக்கு மட்டுமே அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 நாட்கள் சில வழிபாடுகளும் இருக்காது

திருவிழா ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களின் தொடர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், நவராத்திரி திருவிழாவின் 10 நாட்களுக்கு சில வழிபாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. அவை:

  • மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாத்துதல்
  • அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவித்தல்
  • உபய திருக்கல்யாண நிகழ்வுகள்
  • தங்க ரத உலா

இவை வழிபாடுகள் அனைத்தும் நவராத்திரி விழா நிறைவடைந்த பின்னரே, அதாவது அக். 20ஆம் தேதிக்கு பின்னரே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.  லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நவராத்திரி விழாவுக்கு வருகை தருவார்கள் என்பதால் விரிவான பாதுகாப்பு மற்றும் வரிசை மேலாண்மை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | 8ம் வகுப்பு படித்தவரா? ரூ.58,000 வரை சம்பளம்.. தமிழக அரசின் சூப்பர் வேலை

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu