SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சர்க்கரை பதுக்கினால் இனி அதிரடி ரெய்டு: 15 நாட்களுக்கு மேல் இருப்பில் வைக்கத் தடை

Tamil Nadu government sugar rules : சர்க்கரையை பதுக்கினால் அதிரடி ரெய்டு நடத்தப்படும் தமிழ்நாடு அரசு எச்சரிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Nov 21, 2026, 09:31 IST | Updated: Nov 21, 2026, 09:39 IST
Image Credit: Tamil Nadu Government
Join

Tamil Nadu government sugar rules : தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னரும் தமிழ்நாட்டில் சர்க்கரையின் விலை குறையாமல் தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சர்க்கரையைப் பதுக்கி வைத்துச் செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் மொத்த வியாபாரிகளுக்குக் கடிவாளம் போடும் வகையில், இருப்பு வைப்பதற்கான கால அவகாசம் மற்றும் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பள்ளிக்கல்வித் துறையில் அதிரடி மாற்றம்: 3 ஆண்டுகள் முடிந்தால் கட்டாய பணியிட மாறுதல்

விலை உயர்வுக்குப் பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்தி மற்றும் வரத்து சீராக இருந்தபோதிலும், சில மொத்த வியாபாரிகள் சரக்குகளைக் குடோன்களில் பதுக்கி வைத்து வெளிச்சந்தைக்கு வரவிடாமல் தடுப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதனால், சில்லறை விற்பனைக் கடைகளில் சர்க்கரை விலை கிலோ ரூ.59.50-க்கும் மேல் விற்பனையாகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிலோ ரூ.46.50 ஆக இருந்த சர்க்கரை விலை, ஒரே ஆண்டில் கிலோவுக்கு சுமார் ரூ.12 முதல் ரூ.13 வரை உயர்ந்துள்ளது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சர்க்கரை போக, கூடுதல் தேவைக்காக வெளிச்சந்தையை நம்பியிருக்கும் சாமானிய மக்களும், தினசரிப் பயன்பாட்டிற்கு அதிக சர்க்கரை வாங்கும் டீக்கடை மற்றும் இனிப்பக உரிமையாளர்களும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசிதழில் வெளியான புதிய விதிமுறைகள்:

இந்நிலையை மாற்ற, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தால் கடந்த 06.10.2026 அன்று வெளியிடப்பட்ட 'சர்க்கரை (கட்டுப்பாடு) ஆணை 2025 - திருத்தம்', தமிழ்நாடு அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையால் 13.11.2026 அன்று தமிழ்நாடு அரசிதழில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955, பிரிவு 3-ன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு 15.10.2026 முதல் அமலுக்கு வந்துள்ளது.

பழைய விதி vs புதிய விதி:

முந்தைய நடைமுறை: ஒரு வியாபாரி சர்க்கரை கொள்முதல் செய்த நாளிலிருந்து 30 நாட்கள் வரை குடோனில் இருப்பு வைக்கலாம்; ஒரு இடத்தில் அதிகபட்சமாக 2,000 குவிண்டால் வரை சர்க்கரை சேமித்து வைக்க அனுமதி இருந்தது.

புதிய கட்டுப்பாடு: தற்போது இந்த வரம்பு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு வியாபாரி சர்க்கரை வந்த நாளிலிருந்து 15 நாட்களுக்கு மேல் குடோனில் வைத்திருக்கக் கூடாது. மேலும், ஒரு இடத்தில் 1,000 குவிண்டாலுக்கு (1,00,000 கிலோ அல்லது 100 டன்) மேல் இருப்பு வைக்கக் கூடாது எனக் கறாராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத இருப்பும் பறிமுதல் நடவடிக்கையும்:

இந்தப் புதிய விதிகளின்படி, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள குடோன்களில் எந்த நேரமும் திடீர் சோதனை நடத்தலாம். சோதனையின்போது 15 நாட்களுக்கு மேல் பழைய சரக்கு இருந்தாலோ அல்லது 1,000 குவிண்டாலுக்கு மேல் சர்க்கரை பதுக்கி வைக்கப்பட்டிருந்தாலோ, அது 'சட்டவிரோத இருப்பு' எனக் கருதப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்படுவதோடு, சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES