• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு.. எப்படி செய்யலாம்? தேவையான ஆவணங்கள் என்ன?

வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு.. எப்படி செய்யலாம்? தேவையான ஆவணங்கள் என்ன?

TN Govt Online Property Registration: தமிழக அரசு வருகையில்லா ஆவணப்பதிவு திட்டத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. எனவே, எப்படி ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Aug 07, 2026, 06:11 PM IST|Updated: Aug 07, 2026, 06:27 PM IST
joinshare
வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு.. எப்படி செய்யலாம்? தேவையான ஆவணங்கள் என்ன?
Image Credit: Image Source: TN Govt/X

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Govt Online Property Registration: சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் வருகையில்லா ஆவண பதிவு தொடக்கப்பட உள்ளது. பத்திரப்பதிவுத்துறையின் TNREGINET இணையதளம் வாயிலாக 'நேரடி வருகை தேவைப்படாத பதிவு முறையை' (Presence-less Registration System) தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.

இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம். முதற்கட்டமாக ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் கட்டமாக புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகளின் முதல் விற்பனைப் பதிவுகள் இந்த முறையில் மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வீட்டில் இருந்தே எப்படி பத்திரப்பதிவு செய்யலாம்?

  • பதிவுத்துறை இணையதளத்தில் https://tnreginet.gov.in/portal/ கட்டுமான நிறுவனங்கள் மற்றும் நிலவிற்பனையாளர்கள் தங்களுக்கான பிரத்யேக உள்நுழைவினை (Login) தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.

  • ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் விபரங்கள் மற்றும் ஆதார் அட்டை மேலேற்றம் செய்ய வேண்டும்.

  • ஆவணதாரர்கள் மற்றும் சாட்சிகளின் புகைப்படம் எடுக்கப்பட்டு, கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.

  • இணையவழி கட்டணம் செலுத்தி இணையவழியிலேயே சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல் ஆவணத்தை தாக்கல் செய்யலாம்.

  • ஏதேனும் கூடுதல் தகவல் தேவைப்படின், சார்பதிவாளர் இணையவழியில் கோரும் தகவலுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கலாம்.

  • சமர்ப்பிக்கப்பட்ட அன்றே அல்லது அடுத்த வேலை நாளுக்குள் பதிவுசெய்யப்பட்ட ஆவணம் மற்றும் கட்டண இரசீது சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் மின்கையொப்பத்துடன் ஆவணதாரருக்கு இணையவழியில் அனுப்பி வைக்கப்படும்.

  • பதிவு செய்யப்பட்ட 60 நாட்கள் வரை பதிவுசெய்யப்பட்ட ஆவணத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • பதிவுச்சட்டம், 1908-ல் விதி 32,52 மற்றும் 69-ல் உரிய திருத்தம் மேற்கொண்டு புதிதாக இணைய வழி பதிவு விதிகள் உருவாக்கப்பட்டு, இணையவழி பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்கு உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

  • இதுதொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள பிரத்யேகமாக ஒர் உதவி மையம் செயல்படும்.

 நேரில் பதிவு செய்யக் கூடிய ஆவணங்கள் என்னென்ன?

  1. முதல் விற்பனை மனை (First Sale Of Plot)
  2. முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு (First Sale Of Plot)
  3. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள்
  4. வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள்

என்னென்ன தொழில்நுட்ப சேவைகள் உள்ளன?

இணைய இணைப்பு, ஆதார் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப் படலம் கவரும் கருவி, புகைப்படக்கருவி (Webcam) உள்ளன.  கைரேகை அல்லது கருவிழிச் சரிபார்ப்பு மூலம் ஆவணப்பதிவின்போது சரிபார்க்கப்படும்.

இந்த புதிய நடைமுறை மூலம் பொதுமக்கள் தங்களுக்கு வசதியான நேரத்தில் ஆவணங்களைச் சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள முடியும். இதனால் குறிப்பிட்ட சில சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் கணிசமாகக் குறையும். 

மேலும், அலுவலகங்களுக்கிடையேயான பணிச்சுமை சமநிலைப்படுத்தப்பட்டு பதிவுப் பணிகள் விரைவாக நடைபெறும். அதேவேளையில் பொதுமக்களின் காத்திருப்பு நேரம் குறைவதுடன் பதிவுச் சேவைகளின் தரம் செயல்திறன் மற்றும் சேவை வழங்கும் திறனும் மேம்படும்

இச்சேவைகளைத் தடையின்றிப் பெறுவதையும், பதிவுச் செயல்முறையை வெற்றிகரமாக நிறைவு செய்வதையும் உறுதிசெய்ய அனைத்த சார்பதிவாளர்களும் தயாராக இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடையற்ற பயோமெட்ரிக் அங்கீகாரம், நேரடி புகைப்படம் எடுத்தல், ஆவணப் பதிவேற்றம் மற்றும் பதிவுச் செயல்பாடுகளை உறுதிசெய்ய, குறைந்தபட்சம் 100 Mbps வேகமுள்ள நிலையான பிராட்பேண்ட் இணைய இணைப்பு இருக்க வேண்டும். 

நேரில் வருகை தேவையில்லாத பதிவுச் சேவைகளைப்' (Presence-less Registration Services) பெறுவதற்கு முன்னதாக, அனைத்து சார்பதிவாளர்களும் TNREGINET இணையதளத்தில் தங்கள் உள்நுழைவு விவரங்களை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes