• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை.. எவ்வளவு? எப்படி பெறலாம்? தமிழக அரசு அறிவிப்பு

வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை.. எவ்வளவு? எப்படி பெறலாம்? தமிழக அரசு அறிவிப்பு

TN Govt Unemployment Assistance Scheme: இளங்கலை பட்டம் வரை படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் குறித்து முழுமையாக இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

Written ByUmabarkavi K
Published: Aug 07, 2026, 09:58 PM IST|Updated: Aug 07, 2026, 10:13 PM IST
joinshare
வேலை இல்லாதவர்களுக்கு உதவித்தொகை.. எவ்வளவு? எப்படி பெறலாம்? தமிழக அரசு அறிவிப்பு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Govt Unemployment Assistance Scheme: தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. இளங்கலை, முதுகலை பட்டம் வரை படித்துவிட்டு ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வருகின்றனர். இதனால், அவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கி வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. தற்போது இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம், எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்

தமிழக அரசு வேலையில்லாதவர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை வழங்கி வருகிறது. தகுதியுள்ள அனைத்து வேலையற்ற இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் எளிதாக அவர்களுக்கு வேலை கிடைக்க வழிவகுக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து மாதந்தோறும் தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. மேலும், இந்த திட்டம் மூலம் நிதியுதவி பெறும் பயனாளிகளுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் வேலைகளை எளிதாக பெற முடியும்.

இளைஞர்களுக்கு எவ்வளவு உதவித்தொகை கிடைக்கும்?

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில் பயனாளிகளின் கல்வித்தகுதியை பொறுத்து உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி,

  • 9ம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.200 வழங்கப்படும்.
  • பத்தாம் வகுப்பு தோல்விக்கு ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300 வழங்கப்படும்.
  • மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.600 உதவித்தொகை வழங்கப்படும்.
  • டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.400 வழங்கப்படும்.
  • மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பத்தாம்வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600 வழங்கப்படும்.
  • மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மேல்நிலைக்கல்வி தேர்ச்சிக்கு ரூ.750 வழங்கப்படும்.
  • மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000 வழங்கப்படும்.

உதவித்தொகை யாரெல்லாம் பெறலாம்?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும்.

பத்தாம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து, ஐந்தாண்டுகள் நிறைவடைந்த பின்னர் வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழங்கப்படும்.

மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் தமிழ்நாடு அரசால் உதவித்தொகை வழங்கப்படும். இந்த உதவித்தொக  காலாண்டு வாரியாக கணக்கீட்டு, காலாண்டு முடிந்த  பிறகு, வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

யாரெல்லாம் உதவித்தொகை பெற முடியாது?

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகையை பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப்படிப்புகள் படித்தவர்கள் மற்றும் அரசின் பிறதுறை சார்ந்த நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகளுக்கு வழங்கப்படாது. மேலும், ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படாது.

உதவித்தொகை பெறுவது எப்படி?

உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்பெற்றவர்கள் மீள விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவார்கள். 

மேலும், அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் வந்து விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes