• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வீடு, மனை வாங்குவோருக்கு அதிர்ச்சி: தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 15% வரை உயர்கிறது!

வீடு, மனை வாங்குவோருக்கு அதிர்ச்சி: தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 15% வரை உயர்கிறது!

Tamil Nadu Government : தமிழ்நாடில் வீடு, மனை வாங்குவோருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்த திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. முழு விவரம் இங்கே

Written ByKarthikeyan Sekar
Published: Oct 10, 2026, 02:50 PM IST|Updated: Oct 10, 2026, 02:57 PM IST
joinshare
வீடு, மனை வாங்குவோருக்கு அதிர்ச்சி: தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 15% வரை உயர்கிறது!
Image Credit: Tamil Nadu Land Guideline Value

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
வீடு, மனை வாங்குவோருக்கு அதிர்ச்சி: தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 15% வரை உயர்கிறது!

வீடு, மனை வாங்குவோருக்கு அதிர்ச்சி: தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு 15% வரை உயர்கிறது!

2

குரு பெயர்ச்சி: அக்டோபர் 31 முதல் பல உச்சங்களை எட்டப்போகும் 3 ராசிகள் இவைதான்

3

பிரதமர் மோடி வருகை... சென்னை முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்

4

தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கப்போகுது: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

5

பழைய கடனைப் புதுப்பித்தாலும் ரூ.10,000 கிடைக்குமா? கூட்டுறவு வங்கியின் புதிய விதிகள் சொல்வது என்ன?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Government : தமிழகத்தில் நிலங்களுக்கான அரசு வழிகாட்டி மதிப்பீடு வழக்கத்தை விட 15 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான வரைவு அறிக்கையை மாவட்ட அளவிலான குழுக்கள் தயாரித்து, மாவட்ட அளவில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளன. மாநில மையக் குழுவின் முறையான ஒப்புதல் கிடைத்ததும் இந்தப் புதிய வழிகாட்டி மதிப்புகள் முழுமையாக நடைமுறைக்கு வரும் என பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

10 ஆண்டுகளுக்குப் பின் முழுமையான சீரமைப்பு

பொதுவாக தமிழகத்தில் வீடு, மனை விற்பனை பத்திரப்பதிவின் போது, பதிவுத்துறையால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பின் அடிப்படையிலேயே சொத்தின் மதிப்பு கணக்கிடப்பட்டு பத்திரப்பதிவு கட்டணம் மற்றும் முத்திரைத்தாள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சர்வே எண்கள் மற்றும் தெரு வாரியாக நில வழிகாட்டி மதிப்புகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன.  

இருப்பினும், இந்த வழிகாட்டி மதிப்புகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையாகச் சீரமைக்கப்படாமல் இருந்து வருகின்றன. இதன் காரணமாகப் பல பகுதிகளில் கள நிலவரத்திற்கும் பதிவுத்துறை பதிவேடுகளுக்கும் இடையே பெரும் முரண்பாடுகள் நீடித்து வருகின்றன.  

முரண்பாடுகளும் சிக்கல்களும்

தற்போதைய நடைமுறையில் பல்வேறு இடங்களில் சர்வே எண்களுக்கு முறையான மதிப்பீடு இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஒரே பகுதியில் குடியிருப்புக்கு மத்தியில் ஒரு வணிகக் கடை அமைந்திருந்தால், அங்கு வணிகப் பகுதிக்கான வழிகாட்டி மதிப்பைச் செயல்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. பல இடங்களில் நில வகைப்பாடு மாற்றம் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றில் பெரிய அளவில் குழப்பங்களும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன.  

வரைவு அறிக்கை வெளியீடு, அமல்படுத்தும் திட்டம்

இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்யும் நோக்கில், கிராமங்கள் மற்றும் சார் பதிவாளர் அலுவலக எல்லை வாரியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரிவான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இவ்வாறு முரண்பாடுகளைக் களைந்து புதிதாக நிர்ணயிக்கப்படும் வழிகாட்டி மதிப்புகள் தற்போதைய அளவை விட சுமார் 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  

பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் மீதான தாக்கம்

நிலங்களுக்கான அரசு வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படும் பட்சத்தில், அதற்கேற்ப சொத்து பரிமாற்றங்களுக்கான முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணங்களும் கணிசமாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வீடு, மனை வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தர மக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினர் கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu