SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

School Leave: கனமழை எதிரொலி.. தமிழகத்தின் இந்த 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

School Leave: கனமழை காரணமாக கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (அக்டோபர் 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Written By R Balaji
Published: Oct 26, 2026, 07:04 AM IST | Updated: Oct 26, 2026, 07:08 AM IST
Join

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக்டோபர் 26, திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்திலும் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மூன்று மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையானது தொடர்ந்து பெய்யக்கூடும் என வானிலை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயம், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், தென் தமிழகப் பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES