• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வடகிழக்கு பருவமழை: நாளை (அக்டோபர் 17) சென்னை மற்றும் 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை: நாளை (அக்டோபர் 17) சென்னை மற்றும் 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Tamil Nadu Weather: சனிக்கிழமையன்று சென்னை மற்றும் பல மாவட்டங்களில் கனமழை, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வியாழக்கிழமையன்று சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவலான மழை பெய்தது. நகரின் சில பகுதிகளில் லேசான மழையும், புறநகர்ப் பகுதிகளில் மிதமான முதல் கனமழையும் பதிவாகியுள்ளது.

Written BySripriya Sambathkumar
Published: Oct 16, 2026, 11:13 AM IST|Updated: Oct 16, 2026, 11:23 AM IST
joinshare
வடகிழக்கு பருவமழை: நாளை (அக்டோபர் 17) சென்னை மற்றும் 25 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Image Credit: Tamil Nadu Weather

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambathkumar

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

சென்னையில் மேக வெடிப்பு? மிக்ஜாம் புயலுக்கு பின் அதி கனமழை - உதவி எண் அறிவிப்பு

2

கொல்கத்தாவில் பயங்கரம்.. துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 17 பேர் பலி! என்ன நடந்தது?

3

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

4

அஞ்சல் துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: எவ்வளவு கிடைக்கும்? கணக்கீடு இதோ

5

ADMK-வில் நடிகர் தனுஷ்? அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி சொன்ன மேட்டர்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Weather Update: வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் இயல்பான மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது. இதற்கிடையில், சனிக்கிழமையன்று சென்னை மற்றும் பல மாவட்டங்களில் கனமழை, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வியாழக்கிழமையன்று சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவலான மழை பெய்தது. நகரின் சில பகுதிகளில் லேசான மழையும், புறநகர்ப் பகுதிகளில் மிதமான முதல் கனமழையும் பதிவாகியுள்ளது.

தமிழகத்திற்கான வடகிழக்கு பருவமழை முன்னறிவிப்பு

மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு மாறுபட்டு இருக்கக்கூடும்.

  • வட மாவட்டங்களில் இயல்பை விடக் குறைவான மழை இருக்கும்.
  • தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிகமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 
  • கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் 20% மழைப்பற்றாக்குறை நிலவியது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இயல்பை விடக் குறைவான மழையே பதிவானதுடன், பல பகுதிகளில் கடுமையான வெப்பமும் நிலவியது.

தென்மேற்கு பருவமழை வியாழக்கிழமையன்று நாடு முழுவதிலும் இருந்து முழுமையாக விலகிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வடகிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று தென்னிந்திய தீபகற்பப் பகுதியை பாதிக்கத் தொடங்கியுள்ளது. இது தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் பிற பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதைக் குறிக்கிறது.

மேலும் படிக்க | Preventive Detention : முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல் என்றால் என்ன? Explained

சென்னை வானிலை

வெள்ளிக்கிழமையன்று சென்னையின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சனிக்கிழமையன்று சென்னையின் சில இடங்களில் கனமழை, இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இடி, மின்னலின் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், வானிலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து கவனிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கான கனமழை எச்சரிக்கை

வெள்ளிக்கிழமையன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் மதுரை மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழையுடன் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், கரூர், புதுச்சேரி, அரியலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | Tamil Nadu Live : கோவையில் முதலமைச்சர், பெரியார் நூலகம் திறப்பு, வடக்கிழக்கு பருவமழை தொடக்கம் - இன்றைய அப்டேட்ஸ்

சனிக்கிழமைக்கான மழை முன்னறிவிப்பு

சனிக்கிழமையன்று, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

எல் நினோ மற்றும் வடகிழக்கு பருவமழை

எல் நினோ (El Niño) குறித்து கருத்து தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மைடம், இத்தகைய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டார். இருப்பினும், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாவது குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல் நினோ சூழல் அடுத்த ஆண்டு ஜனவரி–பிப்ரவரி வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒட்டுமொத்த வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; இருப்பினும், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு இடையே மழைப்பொளவில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருக்கலாம்.

மேலும் படிக்க | தமிழக அரசு வேலைவாய்ப்பு: பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu
Weather