• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வீட்டுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் + ரூ.1 லட்சம் மானியம்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அப்டேட்

வீட்டுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் + ரூ.1 லட்சம் மானியம்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அப்டேட்

Tamil Nadu Solar Scheme Subsidy : வீட்டுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் ரூ.1 லட்சம் மானியம் கொடுக்கும் பிஎம் சூர்யா கர் மற்றும் தமிழக அரசின் சோலார் திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Written ByKarthikeyan Sekar
Published: Aug 08, 2026, 12:57 PM IST|Updated: Aug 08, 2026, 01:08 PM IST
joinshare
வீட்டுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் + ரூ.1 லட்சம் மானியம்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அப்டேட்
Image Credit: Tamil Nadu Solar Scheme Subsidy Update

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

திருச்சி : ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்

2

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

3

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

4

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

5

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Solar Scheme Subsidy : தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவும், பொதுமக்களின் மாதாந்திர மின் கட்டணச் சுமையைக் கணிசமாகக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பிஎம் சூர்யா கர்: இலவச மின்சாரத் திட்டம் (PM Surya Ghar: Muft Bijli Yojana) உடன் இணைந்து, தமிழக அரசு தனியாகக் கூடுதல் மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.

நிதி அமைச்சர் மரிய வில்சன் இது குறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் 3 கிலோவாட் திறனுள்ள கூரை சோலார் அமைக்கும் வீடுகளுக்கு மொத்தமாக ரூ.1 லட்சம் வரை மானியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நன்மைகள், மானிய விவரங்கள், மின் கட்டணச் சேமிப்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறையைக் கீழே விரிவாகக் காண்போம்.

மானியத் தொகை எவ்வாறு பிரித்து வழங்கப்படுகிறது?

வீட்டின் கூரையில் சோலார் பேனல் அமைப்போருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நிதி உதவி வழங்குகின்றன.

1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை: ஒரு கிலோவாட்டிற்கு தலா ரூ.30,000 வீதம் மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதனுடன் தமிழக அரசின் தகுதி அடிப்படையிலான கூடுதல் மானியமும் சேரும்.

3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல்: 3 கிலோவாட் திறனுள்ள சோலார் அமைப்போருக்கு மத்திய அரசு நிலையான மானியத் தொகையாக ரூ.78,000 வழங்குகிறது. இதனுடன், தமிழக அரசு தனது பங்காக ரூ.22,000 கூடுதல் மானியமாக இணைத்து வழங்குகிறது. இதன் மூலம் 3 கிலோவாட் சோலார் அமைக்கும் ஒரு குடும்பத்திற்கு மொத்த மானியத் தொகை ரூ.1 லட்சமாக உயர்கிறது.

தமிழக அரசின் இந்த முடிவுக்குக் காரணம் என்ன?

இந்திய அளவில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் கூரை சோலார் அமைப்பதில் மிகவேகமாக முன்னேறி வருகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளில் இம்மாநிலங்கள் ஒவ்வொன்றும் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு சோலார் இணைப்புகளைப் பெற்று சாதனை படைத்துள்ளன.

ஆனால், அதிக சூரிய ஒளி திறனும் மின் நுகர்வும் கொண்ட தமிழ்நாட்டில் இதுவரை கூரை சோலார் இணைப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கூடத் தாண்டவில்லை. மாநில அரசின் தனிக் கூடுதல் மானியம் இல்லாததே இதற்குக் காரணமாக இருந்த நிலையில், பொதுமக்களின் மின் கட்டணத்தைக் பூஜ்ஜியமாக்கவும் சோலார் பயன்பாட்டை அதிகரிக்கவும் தமிழக அரசு இக்கூடுதல் மானியத்தை அறிவித்துள்ளது.

மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம்

கூரை சோலார் அமைப்பில் நெட் மீட்டரிங் என்ற தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படுகிறது. 1 கிலோவாட் திறன் கொண்ட சோலார் சிஸ்டம் நாளொன்றுக்குச் சராசரியாக 4 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அதன்படி, 3 கிலோவாட் சிஸ்டம் அமைத்தால் நாளொன்றுக்கு 12 யூனிட் வீதம், மாதத்திற்குச் சராசரியாக 360 யூனிட் வரை இலவச மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

பகல் நேரத்தில் சோலார் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தில், உங்கள் வீட்டின் பயன்பாட்டிற்குப் போக மீதமுள்ள உபரி மின்சாரம் மின்வாரியத்தின் மின் கட்டமைப்பிற்குத் தானாகச் சென்றுவிடும். மாத இறுதியில், நீங்கள் பயன்படுத்திய மொத்த மின்சாரத்தில் இருந்து, மின்வாரியத்திற்கு நீங்கள் கொடுத்த சோலார் மின்சார யூனிட்டுகள் கழிக்கப்படும். பயன்பாட்டை விட உற்பத்தி அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்களது மின் கட்டணம் முழுமையாகப் பூஜ்ஜியமாக மாறிவிடும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

* மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதமான pmsuryaghar.gov.in என்ற முகவரிக்குச் செல்லவும்.

* உங்கள் மாநிலமாக Tamil Nadu என்பதைத் தேர்வு செய்யவும்.

* மின் விநியோக நிறுவனமாக TANGEDCO என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

* உங்கள் மின் நுகர்வோர் கணக்கு எண் மற்றும் கைபேசி எண்ணைப் பதிவிட்டுப் பதிவு செய்யவும்.

* பதிவு முடிந்ததும், லாக்இன் செய்து கூரை சோலார் அமைப்பிற்கான விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

* அரசு மூலம் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் வாயிலாக உங்கள் வீட்டின் கூரையில் சோலார் பேனல்கள் நிறுவப்படும்.

மின்வாரிய அதிகாரிகள் நேரில் வந்து சோலார் இணைப்பை ஆய்வு செய்து நெட் மீட்டர் பொருத்திய பிறகு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டம் குறித்த கூடுதல் சந்தேகங்களுக்கு 15555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து விவரங்களைப் பெறலாம்.

Add Zee News as a Preferred Source
TAGS:
Central Govt Schemes