தமிழ்நாட்டில் தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கடந்த சில மாதங்களாகவே மின்சாரம் குறித்த பேச்சுதான் அனைத்து பக்கமும் இருக்கிறது. மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, மின்சார தட்டுப்பாடு, மின் கொள்முதல் என தொடர்ச்சியாக மின்சாரத்துறை தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக இருந்து வருகிறது.
இந்நிலையில், ஆடு மேய்க்கும் தொழிலாளியின் வீட்டில் 10,451 ரூபாய் மின் கட்டணம் வந்திருக்கிறது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து தொழிலாளி அளித்த புகார் ஊடகங்களிடம் செய்தியாக வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது, இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன் (51). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு கடந்த காலங்களில் மிக சொற்பமான அளவிலேயே மின் கட்டணம் வந்துள்ளது. கடந்த மாதம் கூட அவருக்கு ரூ.700 கட்டணம் வந்துள்ளது. உடனே அவர் புகார் அளித்துள்ளார்.
அந்த வகையில், கடந்த மாத மின் கட்டணத்தொகை 10,451 ரூபாய் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் மீண்டும் மின்வாரிய அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளார். மேலும் அளவுக்கு அதிகமாக மின் கட்டணம் வந்ததை தொடர்ந்து அவரால் அந்த கட்டணத்தை செலுத்த இயலவில்லை. மின் கட்டணம் செலுத்தாத காரணத்தால் அவரது இணைப்பும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
ஊடகங்களிடம் ராஜேந்திரன் கூறியதாவது, "நான் இப்போதுகுடியிருக்கும் வீட்டில் 50 வருடமாக நான் வசித்து வருகிறேன். என் வீட்டில் தொலைக்காட்சியும், மின்விசிறியும் மட்டுமே உள்ளது. கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் ஏதுமில்லை.
நான் வீட்டுக்கு சென்ற முறை 710 ரூபாய் மின் கட்டணமாக வந்தது. உடனே சென்று புகார் அளித்தேன். ஆய்வு செய்ய வருகிறேன் என சொன்னார்கள், ஆனால் வரவில்லை.
இந்த முறை ரூ.10,500 கட்டணம் என கூறினார்கள். எனக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டுவதற்கான தகுதி இல்லை. அதனால் 20 நாட்களுக்கு முன் மின் இணைப்பை துண்டிவிட்டு சென்றார்கள்.
தவெக அரசின் மறைமுக கட்டணத்தால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 100 ரூபாய் கூட மின்கட்டணம் வராத வீட்டுக்கும் தவெக அரசு ரூ.10,000-க்கும் மேல் மின் கட்டணம் போட்டுள்ளது. வெறும் டிவி, ஃபேன் மட்டுமே இருக்கும் ஆடு மேய்க்கும் தொழிலாளியின் குடிசை வீட்டின் மின்கட்டணம் செலுத்தவில்லை என மின் இணைப்பையும் துண்டித்துள்ளது டம்மி அரசு. இப்படிப்பட்ட பல மக்களுக்கு அதிக கட்டணத்தை செலுத்தச் சொல்லி அவர்களின் மின் இணைப்பை வேறு துண்டிப்பதுதான் மக்களிடம் மறைமுகமாக கொள்ளை அடிக்கும் அரசின் லட்சணமா? #TVKFailsTN
— DMK IT WING (@DMKITwing) October 14, 2026
எனது மகன் அரசு கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்து வருகிறார். வீட்டில் மின்சாரம் இல்லாத காரணத்தால் அவரால் செமஸ்டர் தேர்வுக்கு கூட படிக்க வழியில்லாமல், தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து வருகிறார். நாங்களும் எங்களது வீட்டில் வாழ முடியாமல் ஆட்டு கொட்டகையில் படுத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம்.
எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேணடும். எங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். எனவே, வீட்டிற்கு உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.
| ஜூலை, 2026 | ரூ.710 |
| செப்டம்பர், 2026 | ரூ.10,415 |
| செப்டம்பர், 2026 | மின் கட்டணம் செலுத்தவில்லை |
| செப்டம்பர் 24 | மின் சேவை துண்டிப்பு |
இதுகுறித்து பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்ட சூழலில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் முறையிடப்பட்டது. மின் கட்டணம் தொடர்பான புகார் ஆய்வு செய்யப்பட்டு, மின் அளவீடுகள் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, மின் கட்டணம் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அளித்த விளக்க குறிப்பில், "விருதுநகர் மின் பகிர்மான வட்டம், திருவில்லிபுத்துார் கோட்டம், ஊரகம் உபகோட்டம், மல்லிப்புதுார் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட இராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆடு மேய்த்திடும் தொழிலாளி வீட்டிற்கு செப்டம்பர் மாத மின்கட்டணமாக ரூ.10,451 கணக்கிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அது குறித்து புகார் செய்தும், மின் கட்டணத்தை செலுத்தக் கோரியதால், மின் கட்டணம் செலுத்த இயலாததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு அறிக்கை சமர்பிக்கப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளது.
மின் கட்டணம் தொடர்பான புகார் ஆய்வு செய்யப்பட்டது. மின் அளவீடுகள் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, மின் கட்டணம் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விரிவான விளக்கத்திற்கு, இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தைப் பார்க்கவும். https://t.co/GtvqG2ELuQ
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) October 14, 2026