SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழ்நாடு அரசின் யுபிஎஸ்சி உதவித்தொகைக்கான தேர்வில் முறைகேடா? அப்டேட்

Tamil Nadu Government UPSC scholarship exam : தமிழ்நாடு அரசு நடத்தும் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான உவித்தொகை தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதா? என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Written By Karthikeyan Sekar
Published: Oct 04, 2026, 02:20 PM IST | Updated: Oct 04, 2026, 02:31 PM IST
Join

Tamil Nadu Government UPSC scholarship exam : தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (TN Skills - முன்பு ‘நான் முதல்வன்’) சார்பில் யுபிஎஸ்சி (UPSC) குடிமைப் பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கான தேர்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற்ற இத்தேர்வின் முடிவுகள் செப்டம்பர் 26 அன்று வெளியிடப்பட்ட நிலையில், முதல் மதிப்பெண் விவரங்கள் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும் படிக்க | கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கான உதவித்தொகை அப்டேட்! இறுதி வாய்ப்பு

வெளியாகியுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளின்படி, முதலிடம் பிடித்த தேர்வர் 200 மதிப்பெண்களுக்கு 197.33 (98.67%) மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதே சமயம், இரண்டாம் இடம் பிடித்த தேர்வர் 144.62 மதிப்பெண்களே பெற்றுள்ளார். முதல் இரண்டு இடங்களுக்கு இடையே சுமார் 52.71 மதிப்பெண்கள் வித்தியாசம் நிலவுவது UPSC போன்ற போட்டித் தேர்வுகளில் வரலாறு காணாத ஒன்று எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

 கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்களை ஒப்பிடுகையில் இந்த முரண்பாடு மேலும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது:

 

2023: முதல் மதிப்பெண் – 172.00; இரண்டாம் மதிப்பெண் – 170.00 (வித்தியாசம்: 2 மதிப்பெண்கள்).

2024: முதல் மதிப்பெண் – 167.30; இரண்டாம் மதிப்பெண் – 162.63 (வித்தியாசம்: 4.67 மதிப்பெண்கள்).

2025: முதல் மதிப்பெண் – 139.94; இரண்டாம் மதிப்பெண் – 139.26 (வித்தியாசம்: 0.68 மதிப்பெண்).

2026: முதல் மதிப்பெண் – 197.33; இரண்டாம் மதிப்பெண் – 144.62 (வித்தியாசம்: 52.71 மதிப்பெண்கள்).

கடந்த மூன்று ஆண்டுகளிலும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களுக்கு இடையேயான இடைவெளி மிகக் குறைந்த ஒற்றை இலக்க எண்களிலேயே இருந்து வந்துள்ள நிலையில், இம்முறை சுமார் 50-க்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் வித்தியாசமும், 98%க்கும் அதிகமான மதிப்பெண்ணும் பதிவாகியுள்ளது வழக்கத்திற்கு மாறாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்துத் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவின் முன்னாள் இயக்குநர் ஐயன் கார்த்திகேயன் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். குடிமைப் பணித் தேர்வர்களுக்குக் கைகொடுக்கும் இத்தகைய முக்கியத் திட்டத்தில், சந்தேகத்திற்குரிய தேர்வு முடிவுகள் மாணவர்களின் கடின உழைப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும், நிர்வாகம் இதுகுறித்து வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | படித்த பெண்களே! சொந்த தொழில் தொடங்க ஆசையா? அரசின் 5 முக்கிய திட்டங்கள்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES