• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /மக்களே உஷார்! அக்., 4 முதல் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

மக்களே உஷார்! அக்., 4 முதல் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

Tamil Nadu Weather: தமிழகத்தில் அக்டோபர் 4ஆம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அக்டோபர் 5, 6ஆம் தேதிகளில் நீலகிரி, கோவையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Written ByR Balaji
Published: Oct 02, 2026, 04:28 PM IST|Updated: Oct 02, 2026, 04:30 PM IST
joinshare
மக்களே உஷார்! அக்., 4 முதல் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
பொதுமக்களுக்கு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி: கங்கா மருத்துவமனை அறிவிப்பு!

பொதுமக்களுக்கு மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கண்காட்சி: கங்கா மருத்துவமனை அறிவிப்பு!

2

ICC புதிய விதிகள்: ஓடிஐ, டி20ஐ, டெஸ்ட் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள்? Explained

3

EPS ஓய்வூதியத்திற்கான பங்களிப்பை நிறுவனம் செய்யவில்லையென்றால் எப்படி புகார் அளிப்பது?

4

சுகாதாரத்துறையில் வேலை! 44 பணியிடங்கள்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

5

மக்களே உஷார்! அக்., 4 முதல் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து கேரளம்-கர்நாடகா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதையும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும் நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று (அக்டோபர் 02) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை அக்டோபர் 3ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அக்டோபர் 4ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்டோபர் 5 & 6 ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் 7 & 8 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 6ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை

சென்னையை பொருத்தவரையில், இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Weather