SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு: ரூ.50 லட்சம் வரை விபத்து காப்பீடு - முக்கிய அப்டேட்

TASMAC Employees Get Diwali Gift: TASMAC ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக மெகா அறிவிப்பு. SBI கார்ப்பரேட் சேலரி பேக்கேஜ் அமலுக்கு வர உள்ள நிலையில் யாருக்கு எவ்வளவு காப்பீடு? என்ற முழு விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 11, 2026, 02:39 PM IST | Updated: Oct 11, 2026, 02:46 PM IST
Join

TASMAC Employees Get Diwali Gift:  தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியுடன் இணைந்து கார்ப்பரேட் சம்பள பேக்கேஜ் (Corporate Salary Package - CSP) திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் விரிவான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.  

22,877 ஊழியர்களுக்குப் பலன்

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 22,877 ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். எஸ்பிஐ வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் அனைவரும் இந்த சலுகைகளைப் பெற தகுதி உடையவர்கள் ஆவர்.  

பிரிவுகள் மற்றும் காப்பீட்டு வரம்பு

ஊழியர்களின் மாதாந்திர நிகர சம்பளத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது:  

தங்கப் பிரிவு:

மேற்பார்வையாளர்: நிகர மாத சம்பளம் ரூ.28,750.   
விற்பனையாளர்: நிகர மாத சம்பளம் ரூ.26,340.   
காப்பீட்டுத் தொகை: விபத்து மரண காப்பீடாக ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது.  

வெள்ளிப் பிரிவு:

உதவி விற்பனையாளர்: நிகர மாத சம்பளம் ரூ.24,928.   
காப்பீட்டுத் தொகை: விபத்து மரண காப்பீடாகரூ.30 லட்சம் வழங்கப்படுகிறது.  

கூடுதல் காப்பீட்டுச் சலுகைகள்

விபத்து மரண இழப்பீடு மட்டுமின்றி, பணியின் போது ஏற்படும் விபத்துகளால் நிரந்தர முழு ஊனம் மற்றும் நிரந்தர பகுதி ஊனம் அடைந்தாலும் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். அத்துடன் விபத்து மரண காப்பீட்டுடன் இணைந்த 10 வகையான கூடுதல் இணைப்புக் காப்பீடுகளும், இந்த சம்பள திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு வழங்கப்படும் எஸ்பிஐ டெபிட் கார்டுக்கான தனி விபத்துக் காப்பீடும் இலவசமாக வழங்கப்படுகின்றன.  

அக்டோபர் 15க்குள் விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்திற்கும் எஸ்பிஐ வங்கிக்கும் இடையே விரைவில் முறையான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தாகவுள்ளது. எனவே, அனைத்து மாவட்ட மேலாளர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தகுதியான கடை ஊழியர்களின் பெயர், பதவி மற்றும் வங்கி சம்பள கணக்கு எண்கள் போன்ற விவரங்களை எஸ்பிஐ வங்கி ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து, www.tasmace2e.in என்ற இணையதளத்தில் 15.10.2026-க்குள் தவறின்றி பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES