• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /TASMAC Transfer Order: டாஸ்மாக் ஊழியர்களுக்கு கட்டாய இடமாற்றம் கலந்தாய்வு தொடங்கியது!

TASMAC Transfer Order: டாஸ்மாக் ஊழியர்களுக்கு கட்டாய இடமாற்றம் கலந்தாய்வு தொடங்கியது!

TASMAC Counselling 2026: சென்னை தெற்கு மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளை பணியிட மாற்ற கலந்தாய்வு நடக்க உள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 17, 2026, 13:46 IST|Updated: Nov 17, 2026, 13:51 IST
joinshare
TASMAC Transfer Order: டாஸ்மாக் ஊழியர்களுக்கு கட்டாய இடமாற்றம் கலந்தாய்வு தொடங்கியது!
Image Credit: TASMAC Transfer Order 2026

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
புதுச்சேரியில் அச்சுறுத்தும் டெங்கு: சிறப்பு வாா்டு அமைக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் அச்சுறுத்தும் டெங்கு: சிறப்பு வாா்டு அமைக்கப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

2

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! கணினி பட்டதாரிகளுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை

3

2026ல் அதிக வசூல் செய்த டாப் 6 இந்திய திரைப்படங்கள்! லிஸ்ட்ல ஒரே ஒரு தமிழ் படம்..

4

இலவச மென்பொருள் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?

5

சென்னை: இந்த பகுதிகளில் நாளை (நவம்பர் 25) குடிநீர் விநியோகம் நிறுத்தம்... உங்க ஏரியாவில் தண்ணீர் வருமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TASMAC Counselling 2026: தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், ஒரே கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களைப் பணியிட மாற்றம் செய்வதற்கான கலந்தாய்வை (Counselling) டாஸ்மாக் நிர்வாகம் தொடங்கியுள்ளது.  

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். விருப்ப மாறுதல் கோரியும் கிடைக்காமல் இருந்த சூழலில், ஒரே கடையில் நீண்ட காலம் பணியாற்றுவதால் ஏற்படும் நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கும் நோக்கில், பணியிட மாற்றக் கொள்கையை அமல்படுத்த தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) முடிவு செய்துள்ளது.

மேலும் படிக்க | 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி - மாதம் 9000 உதவித்தொகை : விண்ணப்பிப்பது கொள்வது எப்படி?

தலைமை அலுவலக சுற்றறிக்கை:

இதன்படி, கடந்த 07.11.2026 அன்று டாஸ்மாக் தலைமை அலுவலகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், 'பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனக் கொள்கை 2026'-ன் கீழ் ஒரு குறிப்பிட்ட கடையில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்த கடைப் பணியாளர்களுக்கு மாவட்ட அளவில் கலந்தாய்வு நடத்தி இடமாறுதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

சென்னை தெற்கு மாவட்டத்தில் நாளை கலந்தாய்வு:

இதன் ஒரு பகுதியாக, சென்னை தெற்கு மாவட்ட மேலாளர் மற்றும் துணை ஆட்சியர் ஆர். ஜஸ்வந்த் கண்ணன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, சென்னை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கடைகளில் 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்த உதவி விற்பனையாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கான மாவட்ட கலந்தாய்வு 18.11.2026 (நாளை) காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது.  

கலந்துகொள்ளாவிட்டால் என்ன நடக்கும்?

கலந்தாய்வு குறித்த விவரங்களைத் தங்களது கடையில் பணிபுரியும் உதவி விற்பனையாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்குத் தெரிவித்து, அவர்கள் தவறாமல் கலந்துகொள்வதை கடை மேற்பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கலந்தாய்வில் கலந்துகொள்ளாத பணியாளர்களுக்கு, நிர்வாக நலன் கருதி கலந்தாய்வுக் குழு ஒதுக்கீடு செய்யும் கடையே இறுதியானது என்றும் மாவட்ட மேலாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  

இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 3 ஆண்டுகள் நிறைவு செய்த ஊழியர்களுக்கான கலந்தாய்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu