SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தஞ்சாவூர் விசிக போராட்டம்: போலீசை அறைந்த இளைஞன்..... தேவையின்றி தாக்கினோமா? காவல்துறை விளக்கம்

Thanjavur Incident: தஞ்சாவூரில் நடந்த மோதலை கலைக்க சென்ற போலீசாருக்கும் இளைஞருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இளைஞரை காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறைந்தது 'குறைந்தபட்ச பல பிரயோகம்' என தஞ்சாவூர் போலீசார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.

Written By Sripriya Sambathkumar
Published: Aug 18, 2026, 10:10 AM IST | Updated: Aug 18, 2026, 11:46 AM IST
Join

Thanjavur Incident: தஞ்சாவூரில், கட்சியின் டிஜிட்டல் பேனர் அகற்றப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விசிக (VCK) கட்சியினருக்கும், இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, ​​சிறப்பு உதவி ஆய்வாளரை (SSI) அறைந்த இளைஞர் ஒருவரைத் தஞ்சாவூர் காவல்துறையினர் கைது செய்தனர். காவல்துறையினரை அவதூறாகப் பேசியதற்காக மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டார்.

காவல் துறைக்கும் இளைஞருக்கும் இடையில் நடந்த வாக்குவாதத்தின் வீடியோவும், அந்த இளைஞரை காவல்துறை குண்டுகட்டாக போலீஸ் ஜீப்பில் ஏற்றும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன. 

 

தற்போது, இளைஞர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தஞ்சாவூர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

தஞ்சாவூரில் நடந்த மோதலை கலைக்க சென்ற போலீசாருக்கும் இளைஞருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது இளைஞரை காவல்துறை அதிகாரி கன்னத்தில் அறைந்தது 'குறைந்தபட்ச பல பிரயோகம்' என தஞ்சாவூர் போலீசார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க | Tamil News Live Today : தொடங்கியது சட்டப்பேரவை - சிறப்பு கவன ஈர்ப்பு விவாதம்; கனமழை Alert

தஞ்சாவூர் போலீசார் விளக்கம்

தஞ்சாவூர் போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'மறுப்பு செய்தி: சாலை மறியலின் போது காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராறு குறித்த உண்மை நிலை

இன்று (17-8-2026) காலை 12 மணி அளவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியில் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. அப்போது ஆகாஷ் (25) என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தபோது தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார். இதனால், அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் மேலும் முற்றி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணியில் இருந்த SSI 928 ரஹீம் அவர்கள் தலையிட்டு ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது, ஆகாஷ் போலீசாரை நோக்கி தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து வாக்குவாதத்தில் அந்த நபர் ஈடுபட்டதாலும் நிலைமை மேலும் மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை SSI ரஹீம் பயன்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த நபர் உடனடியாக SSI ரஹிமை கன்னத்தில் அறைந்துள்ளார். உடனடியாக போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த நபரின் செயல் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்காமல் தடுக்கும் வகையில் குறைந்தபட்ச பல பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆகாஷ் மீது ஏற்கனவே நஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வருகிறது.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுறியும் இடத்தில் தனது மேற்பார்வையாளரிடம் தகாத மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக அவருடைய மேற்பார்வையாளர் மூலம் புகார் அளிக்கப்பட்டு, பின்னர் இருதரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.

போலீசார் ஆகாஷை தேவையில்லாமல் தாக்கியதாகக் கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது. அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மேலும் முற்றி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாறாமல் தடுப்பதே போலீசாரின் முதன்மையான நோக்கமாக இருந்தது. சம்பவத்தின் போது போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.'

மேலும் படிக்க | நோ சொன்ன ராமதாஸ்.. முடிவை மாற்றிய விஜய்.. கை மாறிய தகைசால் விருது!

விசிக சாலை மறியல் போராட்டத்தில் நடந்தது என்ன?

மாநில மாநாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த தங்கள் கட்சியின் டிஜிட்டல் பேனரை தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைக் கண்டித்து விசிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகம் விசிகவின் பேனரை மட்டுமே அகற்றியதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், அதை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ​​அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்; அப்போது அவருக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசிகவினரும் அந்த இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த இளைஞர் தஞ்சாவூர் அருகே உள்ள விலார் கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) என அடையாளம் காணப்பட்டார். அங்கிருந்த மற்ற காவலர்கள் தலையிட்டு ஆகாஷை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால், அவர் தொடர்ந்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திடீரென, சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) அப்துல் ரஹீம் ஆகாஷைத் தாக்கியதாகவும், அதற்குப் பதிலடியாக ஆகாஷ் அவரை அறைந்ததாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஆகாஷை வலுக்கட்டாயமாகத் தங்கள் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

காவல்துறையினரை அவதூறாகப் பேசியதற்காக ஐயப்பன் (27) என்ற மற்றொரு இளைஞரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையில், மாநகராட்சி நிர்வாகம் அதே இடத்தில் பேனரை மீண்டும் வைத்ததைத் தொடர்ந்து, விசிகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க | லீவுக்கு ஊருக்கு போகும் மக்கள்... சிறப்பு பேருந்துகள் ரெடி - உடனே முன்பதிவு செய்யுங்க!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES