SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

திருப்பரங்குன்றத்தில் தீபம்: தவெக அரசு செய்ய வேண்டியது இதுதான் - வழக்கறிஞர் வலியுறுத்தல்

Thiruparankundram Deepam Issue: திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்ற வலியுறுத்த வேண்டும் என்று கோயில் பூசாரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.

Written By Sudharsan G
Published: Nov 28, 2026, 08:08 IST | Updated: Nov 28, 2026, 08:14 IST
Image Credit: Thiruparankundram Case, Advocate Vanchinathan | AI Generated Image : ChatGPT
Join

Thiruparankundram Deepam Issue: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவுக்கு அருகே உள்ள கல் தூணில் இன்றைய தினம் (நவ. 28) தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று (நவ. 27) உத்தரவு பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றம் கடந்த நவ. 20ஆம் தேதி அன்று கொடுத்த உத்தரவை செயல்படுத்தாததை தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கின் விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தனர்.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம்.. பக்தர்களுக்கு அனுமதி.. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள்

உச்ச நீதிமன்றம் தீபம் ஏற்ற உத்தரவு

மேலும், மதுரை மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. கோவில் அறங்காவலர் குழுவை மொத்தமாக கலைத்து உத்தரவிட்டது. உத்தரவை அமல்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை முழுவதும் சிஆர்பிஎப் கட்டுப்பாட்டில் எடுக்க உத்தரவிட்டுள்ளது.

தீபம் ஏற்ற சில வழிகாட்டுதல்களையும் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பும், அதிருப்தியும் எழுந்திருக்கிறது. தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.

அதிருப்தி தெரிவித்த வழக்கறிஞர்

இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கோயில் பூசாரிகள் சார்பில் எதிர்வாதிகளாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் அவர் பேசியிருந்தார்.

நேற்றைய தினம் (நவ. 27) உச்ச நீதிமன்ற வளாகத்தில் அவர் அளித்த பேட்டியில், "கடந்த நவ. 20ஆம் தேதி உத்தரவு போட்டு, நவ. 26ஆம் தேதி, நவ. 27ஆம் தேதி நிறைவேற்றவில்லை என உச்ச நீதிமன்றம் இவ்வளவு கடினமான உத்தரவுகளை போடுகிறார்கள்.

சபரிமலையில் இதை செய்தார்களா...?

இதே சபரிமலை வழக்கில் என்ன செய்தார்கள்...? சபரிமலை வழக்கில் 2018ஆம் ஆண்டில் அரசியலமைப்பு அமர்வு, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு கொடுத்தது. இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை. கேரள அரசின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது...?, ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தார்களா...?

இதேபோல், சிஆர்பிஎப் படையை வைத்து நீங்கள் சபரிமலை கோயிலில் நடவடிக்கை எடுக்கலாமே, பெண்களை அனுமதியுங்கள் என சொல்லியிருக்கலாமே, தேவஸ்வம் போர்டை கலைத்திருக்கலாமே, அதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்திருக்கலாமே, அதையெல்லாம் உச்ச நீதிமன்றம் ஏன் செய்யவில்லை?" என சபரிமலை தீர்ப்பை உதாரணம் காட்டி பேசியிருந்தார்.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

'தமிழ்நாடு என்ற மாநிலம் வீழ்த்தப்பட்டுள்ளது'

மேலும் காவிரி விவாகரத்தை குறிப்பிட்டு பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "காவிரி பிரச்னையில் எத்தனையோ தீர்ப்புகளை கர்நாடக அரசு அமல்படுத்தவில்லை. இங்கே பாபர் மசூதிக்கு வாக்குறுதி அளித்துவிட்டு நேரடியாக அதை மீறி செயல்பட்டார்கள். என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

இப்போது உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைத்து மாநிலங்களுக்கும் சமமான நீதியை வழங்க வேண்டும். ஆனால் இன்று தமிழ்நாடு என்ற மாநிலம் வீழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவின் மூலமாக, இது முழுக்க முழுக்க அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறுகள், ஏற்கெனவே வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது" என கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தமிழக அரசுக்கு வேண்டுகோள்

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இதுகுறித்து தலைமை நீதிபதியிடம் முறையிட்டு, இந்த வழக்கு அரசியலமைப்பு அமர்வுக்கு, ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுவதற்கான ஏற்பாட்டு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார்.

இன்றுதான் அவமதிப்பு மனு தொடுத்தார்கிறார்கள், இடைக்கால அறிக்கை போட்டுள்ளார்கள், இன்றுதான் முழு அறிக்கை போடுவார்கள். முழு அறிக்கை வரும் முன்னரே இவ்வளவு அவசரமாக நீதிமன்றம் இதை செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் நேற்றைய உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தலைமை நீதிபதியை அணுகி இந்த வழக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றுவதற்கான ஏற்பாட்டை செய்ய வலியுறுத்த உள்ளதா...? தமிழ்நாடு அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...? என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றத்தில் CRPF... பிரதமர் பதிவு முதல் கம்யூனிஸ்ட்களின் பேரணி வரை - பரபரக்கும் அரசியல் களம்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES