SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Pre Kg மாணவன் கையை கட்டி தாக்குதல்... ஆசிரியரின் ஷாக் செயல் - திருவாரூர் நடந்தது என்ன?

திருத்துறைப்பூண்டியில் உள்ள சாய்ராம் பள்ளியில் Pre KG வகுப்பில் படிக்கும் மாணவன் ஒருவனை கைகளை கட்டி, கொடூரமாக பள்ளி ஊழியர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written By Sudharsan G
Published: Nov 18, 2026, 16:21 IST | Updated: Nov 18, 2026, 16:35 IST
Image Credit: Thiruthuraipoondi School Boy Attack | Screen Grab: CCTV / Bureau
Join

Thiruvarur Latest News: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள கச்சேரி சாலையை சேர்ந்தவர் கோபிநாத். இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு 3 வயதில் ஷர்வின் என்ற மகன் உள்ளார்.

ஷர்வின் திருத்துறைப்பூண்டி சாய்ராம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் Pre KG படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது மாணவன் உடம்பில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: இடைக்கால தடை கோரும் தமிழக அரசு, இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

சிசிடிவியை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி

இதுகுறித்து பெற்றோர் குழந்தையிடம் கேட்டபோது, ஆசிரியர் மற்றும் பள்ளியில் பணியாற்றும் பெண் உதவியாளர் தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளியில் விசாரித்தபோது அப்படி ஒரு சம்பவமே நிகழவில்லை என மறுத்த பள்ளி நிர்வாகத்தினரிடம் சிசிடிவி காட்சிகளை பார்க்க வேண்டும் என பெற்றோர் கேட்டுள்ளனர்.

வகுப்பறையில் இருந்த சிசிடிவி காட்சியை குழந்தையின் தந்தை கோபிநாத் பார்த்தபோது குழந்தையின் கைகளை கட்டி, குழந்தையை பேனருக்குள் வைத்து ஊழியர் தாக்கும் காட்சிகளை பார்த்துள்ளார். இதனைப்பார்த்து அரண்டு போன அவர் அந்த வீடியோவை தனது போனில் ரெக்கார்ட் செய்துகொண்டார்.

பள்ளி  நிர்வாகத்தின் சமாதான பேச்சுவார்த்தை

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தந்தை புகார் மனு அளிக்க முடிவெடுத்த நிலையில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மேலும் படிக்க | தற்குறித்தனமான செயல்களில் ஈடுபடும் தவெக அமைச்சர்கள் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

கடந்த மாதம் இதே பள்ளியில் படித்த 12ஆம் வகுப்பு மாணவன் பள்ளி நிர்வாகத்தினரின் தொடர் தொந்தரவு மற்றும் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இருவர் மீது வழக்குப்பதிவு

இது குறித்து திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை புகார் மனு அளித்துள்ளார் .

புகாரைத் தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட  பள்ளி ஆசிரியை  பாக்கியலட்சுமி மற்றும் ஆயாம்மா வேலை செய்யும் செல்வி ஆகிய இருவர் மீதும் ஐந்து பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பள்ளியில் மாணவனை கொடூரமாக ஊழியர்கள் தாக்கும்  சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெற்றோர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | “ராகுல் காந்தியின் போன் கால்-ஐ ரிஜெக்ட் செய்தேனா?” மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

ZEENEWS TRENDING STORIES