• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தற்குறித்தனமான செயல்களில் ஈடுபடும் தவெக அமைச்சர்கள் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

தற்குறித்தனமான செயல்களில் ஈடுபடும் தவெக அமைச்சர்கள் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்

TTV Dhinakaran News: தேனி மாவட்ட சோத்துப்பாறை அணையில் நீர்வளத்துறை அதிகாரிகள் இல்லாமல் தவெக நிர்வாகிகள் தண்ணீர் திறந்ததாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன், காவல் நிலையத்தில் அமைச்சர் நடத்தியதாக கூறப்படும் இரவு நேர ஆய்வு மற்றும் அதன் வீடியோ வெளியீடும் எதிர்ப்புகளை தூண்டியுள்ளது. அரசு நிர்வாகத்தின் அதிகார வரம்புகளை மீறிய செயல்களுக்கு கட்சி தலைமையே பொறுப்பேற்க வேண்டும் என விமர்சகர்கள் வலியுறுத்துகின்றனர்.

Written ByShiva Murugesan
Published: Nov 18, 2026, 14:34 IST|Updated: Nov 18, 2026, 14:42 IST
joinshare
தற்குறித்தனமான செயல்களில் ஈடுபடும் தவெக அமைச்சர்கள் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்
Image Credit: File @TTVDhinakaran

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TTV Dhinakaran News: தேனி சோத்துப்பாறை அணையில் அதிகாரிகளின் அனுமதியின்றி தண்ணீர் திறக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை மற்றும் காவல் நிலையத்தில் அமைச்சர் நடத்தியதாக கூறப்படும் ரீல்ஸ் அரசியல் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதுக்குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், "எல்லை மீறும் தவெக நிர்வாகிகளின் தற்குறித்தனம்" எனக் கடுமையாக விமர்சனம் செய்து, சமூக வலைத்தளத்தில் "Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் படிக்க - ‘தமிழக முதல்வருக்கு அரோகரா..’ திருச்செந்தூர் கோயிலில் முழக்கமிட்டதால் சர்ச்சை! வலுக்கும் கண்டனம்..

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையிலிருந்து, எந்தவொரு அரசு அதிகாரியும் இல்லாத நிலையில், தவெக நிர்வாகிகளே பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட்டதோடு, அதனை ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேபோல், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களை மிரட்டும் வகையில் ஆய்வு என்ற பெயரில் வீடியோ எடுத்து, அதனை ரீல்ஸாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் ரீல்ஸ் வெறி, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடும், பொதுமக்களின் பாதுகாப்போடும் நேரடியாகத் தொடர்புடைய சோத்துப்பாறை அணையை, நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றித் தவெக நிர்வாகிகளே திறப்பதற்கும், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, ஆய்வு என்ற பெயரில் அங்குப் பணியிலிருந்த காவலர்களை மிரட்டி அமைச்சர் வீடியோ எடுப்பதற்கும் அனுமதி அளித்தது யார்?

நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ் என ரீல்ஸ் மூலமாகவே ஆட்சிக்காலத்தை ஓட்டிவிடலாம் என்ற எண்ணத்திலிருக்கும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட தவெகவில் உள்ள நிர்வாகிகளின் இதுபோன்ற செயல்பாடுகள், ரீல்ஸ் மோகம் அக்கட்சியினரின் ரத்தத்திலேயே எந்த அளவிற்கு ஊறிப்போயிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

உள்ளூர் பிரச்சினைகளுக்குக் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டங்கள் வரை அதிகார வரம்பை மீறிப் பங்கேற்கும் தவெக நிர்வாகிகளைக் கண்டிக்கத் தவறிய அக்கட்சித் தலைமையின் அலட்சியத்தால் தான் நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அணையிலிருந்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, முன்னறிவிப்புகளோ இன்றி, தண்ணீரைத் திறந்துவிடும் அளவிற்கான பொறுப்பற்ற செயல்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன.

எனவே அரசு நிர்வாகம் என்பது அவரவர் நினைத்ததைச் செய்யும் சினிமா படப்பிடிப்புத் தளமல்ல என்பதையும், காவல் நிலையங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் சமூக வலைதளங்களில் புகழ் தேடுவதற்கான மேடைகள் அல்ல என்பதையும் உணர்ந்து, இதுபோன்ற தற்குறித்தனமான செயல்களில் ஈடுபடும் தனது கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தவெக தலைவரும் முதலமைச்சருமான திரு. ஜோசப் விஜய் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லை மீறும் தவெக நிர்வாகிகளின் தற்குறித்தனம் – Reels முதலமைச்சர், Real முதலமைச்சராவது எப்போது? தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையிலிருந்து, எந்தவொரு அரசு அதிகாரியும் இல்லாத நிலையில், தவெக நிர்வாகிகளே பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட்டதோடு, அதனை ரீல்ஸ் எடுத்து வெளியிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அதேபோல், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களை மிரட்டும் வகையில் ஆய்வு என்ற பெயரில் வீடியோ எடுத்து, அதனை ரீல்ஸாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் ரீல்ஸ் வெறி, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடும், பொதுமக்களின் பாதுகாப்போடும் நேரடியாகத் தொடர்புடைய சோத்துப்பாறை அணையை, நீர்வளத்துறை அதிகாரிகளின் உத்தரவின்றித் தவெக நிர்வாகிகளே திறப்பதற்கும், நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் நுழைந்து, ஆய்வு என்ற பெயரில் அங்குப் பணியிலிருந்த காவலர்களை மிரட்டி அமைச்சர் வீடியோ எடுப்பதற்கும் அனுமதி அளித்தது யார்? நின்றால் ரீல்ஸ், நடந்தால் ரீல்ஸ் என ரீல்ஸ் மூலமாகவே ஆட்சிக்காலத்தை ஓட்டிவிடலாம் என்ற எண்ணத்திலிருக்கும் முதலமைச்சரைத் தலைவராகக் கொண்ட தவெகவில் உள்ள நிர்வாகிகளின் இதுபோன்ற செயல்பாடுகள், ரீல்ஸ் மோகம் அக்கட்சியினரின் ரத்தத்திலேயே எந்த அளவிற்கு ஊறிப்போயிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. உள்ளூர் பிரச்சினைகளுக்குக் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் தொடங்கி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டங்கள் வரை அதிகார வரம்பை மீறிப் பங்கேற்கும் தவெக நிர்வாகிகளைக் கண்டிக்கத் தவறிய அக்கட்சித் தலைமையின் அலட்சியத்தால் தான் நீர்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள அணையிலிருந்து, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளோ, முன்னறிவிப்புகளோ இன்றி, தண்ணீரைத் திறந்துவிடும் அளவிற்கான பொறுப்பற்ற செயல்கள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. எனவே, அரசு நிர்வாகம் என்பது அவரவர் நினைத்ததைச் செய்யும் சினிமா படப்பிடிப்புத் தளமல்ல என்பதையும், காவல் நிலையங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் சமூக வலைதளங்களில் புகழ் தேடுவதற்கான மேடைகள் அல்ல என்பதையும் உணர்ந்து, இதுபோன்ற தற்குறித்தனமான செயல்களில் ஈடுபடும் தனது கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தவெக தலைவரும் முதலமைச்சருமான திரு. ஜோசப் விஜய் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ

— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 18, 2026

மேலும் படிக்க - அமைச்சருக்கு மட்டும் தனிச்சட்டமா? முதுமலையில் புலியை துரத்தி ரீல்ஸ்.. வன்னி அரசு செயலால் வெடித்த சர்ச்சை

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu