SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

தமிழ்நாட்டிற்கு பருவமழை சரியாக வரவில்லை என்றால், நாம் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க நேரிடலாம் என கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written By Yuvashree M
Published: Nov 12, 2026, 06:10 PM IST | Updated: Nov 12, 2026, 06:27 PM IST
Image Credit: TN Water Scarcity | X Page
Join

தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் எங்கு சென்றாலும் நாம் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்க நேரிடலாம். அதிலும், வெயில் காலம் ஆரம்பித்து விட்டால் தாய்மார்கள் இடுப்பிலும் தலையிலும் குடங்கள் மற்றும் பானைகளில் தண்ணீர் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு செல்வதை பார்க்க இயலும். அந்த நிலை, கூடிய விரைவில் மழை பெய்யவில்லை என்றால் வரும் என கூறப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை:

நம் எதிர்கால தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் ஒரே பலமாக வடகிழக்கு பருவமழைதான் உள்ளது. இந்த வடகிழக்கு பருவமழையானது பெரும்பாலும், அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யலாம். இந்த மழைப்பொழிவானது, அக்டோபர் 15ஆம் தேதி ஆரம்பித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. தென்மேற்குப் பருவமழை பின்வாங்கும் அதே வேளையில், சென்னையில் உள்ள மண்டல வானிலை மையம் (RMC) வெளியிட்ட தகவல் இது. தற்போதைய வடகிழக்கு பருவமழை கைகொடுக்க தவறினால், தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் நெல் உற்பத்தி குறைவு ஏற்படும் சூழல் உருவாகலாம்.

தற்போதைய நிலவரத்தின் படி, நம் மாநிலத்தின் 15 முக்கிய நீர்ப்பாசன அணைகளில் இருக்கும் மொத்த நீர் இருப்பு, அவற்றின் கொள்ளளவில் இருந்து சுமார் 35 சதவீதமாக இர்ருக்கிறது. ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இதே கட்டத்தில் மொத்த நீர் இருப்பு சுமார் 88 சதவீதமாக இருந்தது.

தமிழ்நட்டின் பெரிய அணையாக கருதப்படும் மேட்டூர் அணையில், 24.7 ஆயிரம் கியூபிக் அளவு தண்ணீரே இருக்கிறதாம். ஆனால், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்குத் தினமும் ஒரு டி.எம்.சி. (tmcft) வீதம் நீரைத் தொடர்ந்து வழங்குவதற்கு, ஒரு வாரத்திற்கு மேல் இந்த அளவு நீர் போதுமானதாக இருக்காது என்றும் அஞ்சப்படுகிறது.

கணிப்புகள் சொல்வது என்ன?

வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழ்நாட்டில் பெய்த மழை சுமாரானதாகவே இருந்தது. அக்டோபர் 1 முதல், நவம்பர் 8ஆம் தேதி கணக்குபடி, மழைப்பொழிவு 248 மில்லி மீட்டராக இருபப்தாக கூறப்படுகிறது. இதைத்தாண்டி, 260 மில்லி மீட்டர் மழை பொழிவு ஏற்பட்டால்தான் நாம் தண்ணீர் பஞ்சம் குறித்த பயம் இன்றி இருக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கான மழைப்பொழிவு நவம்பரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில், பருவமழையின் மொத்த மழையளவில் சுமார் 20% மட்டுமே கிடைக்கிறது.

இதுவரை பெய்து வரும் மழைப்பொழிவை வைத்து பார்க்கும் போது இது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்த மழைப்பொழிவுடன் ஒத்துப்போகிறது. இந்த பல்கலைக்கழகம், கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு 438 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இருக்கும் என குறிப்பிட்டிருந்தது.

மேலும் படிக்க | செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

புவி வளிமண்டல கள ஆய்வுத்துறை, அக்டோபர் மாதத்தில் வெளியிட்ட முன்னறிவிப்பில் நாட்டின் தென் பெனிசுலார் பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட மழை 88%-112%க்கும் இடையில் இருக்கும் என காணப்படுவதாக தெரிவித்திருக்கிறது.

வேளாண் பல்கலைக்கழகம், வானிலைத் துறையை விட துல்லியமாக மழைப்பொழிவை கணிக்கும் என கூறப்படுகிறது. இதன்படி, டெல்டா மாவட்டங்களில்தான் அதிக மழை பொழியும் என தெரிவித்திருக்கிறது. அதாவது, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மைலாடுதுரை ஆகியவை.

மேட்டூரில் போதிய நீர் இருப்பு இல்லாத சூழலிலும், மழைப்பொழிவு குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலும், சம்பா-தாளடி சாகுபடி பருவத்தில் விவசாயிகள் சுமார் 3.62 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் நெல் பயிரிட்டிருக்கின்றனர். இதில் ஏரத்தாழ 50 சதவீத பரப்பளவில், ‘நேரடி விதைப்பு’ முறையில் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, நாற்று நடும் முறைக்கு மாற்றாக விதைகள் நேரடியாக நிலத்தில் விதைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் இம்முறை, நீர் பற்றாக்குறை காலங்களில்தான் பின்பற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்சாகுபடி..

நம் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நீர் கிடைப்பதில் இருக்கும் சிக்கல் இன்னும் தீவிரமாக இருக்கிறது. இது, விவசாயிகள் இம்முறை நெல் சாகுபடியை மேற்கொண்ட விதத்தில் வெளிப்படுகிறது.

டெல்டா இல்லாத பகுதிகளில் நெல் சாகுபடி பரப்பளவு, கடந்த ஆண்டை விட சுமார் 1.3 லட்சம் ஹெக்டர் குறைவாக இருக்கிறது. கடந்த ஆண்டு மொத்த நெல் சாகுபடி பரப்பளவில் 3.88% ஆக இருந்த நேரடி விதைப்பு முறையானது, இந்த முறை சுமார் 57% ஆக அதிகரித்திருக்கிறது. 2025-26ஆம் ஆண்டில், மாநிலத்தில் அரிசி உற்பத்தி 77.5 லட்சம் டன்களாக இருந்தது. இது, 2021-22ஆம் ஆண்டில் பதிவான முந்தைய உச்ச அளவான 79.07 லட்சம் டன்களை விட சுமார் ஒரு லட்சம் டன்கள் குறைவாகும்.

டெல்டா பகுதிகளில், பயிர்களை பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, சமீபத்தில் நடைப்பெற்றா காவிரி நீர் ஒழுங்குமுறை குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டங்களில் கர்நாடகா சுமார் 20.7 டி.எம்.சி அடி நீரை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி இருக்கிறது.

இதில், நிலுவகையில் இருக்கும் சுமார் 16.9 டி.எம்.சி அடி தண்ணீரும் அடங்கும். இருப்பினும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம், ஒழுங்குமுறை குழுஇவ்ன் முடிவை உறுதிப்படுத்துகிறது. இதன்படி, கடந்த நவம்பர்  7ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதம் மொத்தம் 3.88 டி.எம்.சி அடி நீரை கர்நாடகா தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் படிக்க | CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

ZEENEWS TRENDING STORIES