SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

TNPSC தேர்வு எழுத நினைப்போருக்கு குட் நியூஸ்... வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.

Written By Sudharsan G
Published: Oct 30, 2026, 03:43 PM IST | Updated: Oct 30, 2026, 05:33 PM IST
Join

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்பது போட்டித் தேர்வர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். அந்த வகையில், அரசின் தற்போதைய விதிகளில் உள்ளதை விட வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வயது வரம்பு உயர்வு என்பது BC, BC(M), MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகள் ஏற்கெனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய வயது உச்சவரம்பு விவரங்கள்

குரூப் - 1

தற்போதைய விதிப்படி,  வயது உச்சவரம்பு பொதுப் பிரிவினருக்கு 32 ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவுக்கு 37 ஆகவும் இருந்தது. இதில் 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளன.அதேபோல் மாற்றுத் திறனாளிகளில் குரூப்-1 தேர்வுக்கு வயது உச்ச வரம்பு பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 47 ஆகவும் இருந்தது. தற்போது இதுவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ

இதில் வயது உச்ச வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், மாற்றுத்திறனாளி பொதுப்பிரிவினருக்கு 40 ஆகவும் இருந்தது. இதுவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒதுக்கீட்டுப் பிரிவுக்கு இதில் உச்ச வயது வரம்பு கிடையாது. அதுவே தொடர்கிறது.

குரூப்-4

குரூப்-4 (உயர் கல்வித் தகுதி உடையோர்) இதில் எவ்வித மாற்றமும் கிடையாது. குரூப்-4 (உயர் கல்வித் தகுதி இல்லாதோர்) வயது உச்ச வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 32 ஆகவும் இருந்தது. அது 5 ஆண்டுகள் உயர்ந்து. அதேபோல், மாற்றுத்திறனாளிகளின் பொதுப் பிரிவினருக்கு 40 ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42 ஆவும் இருந்ததும் உயர்ந்துள்ளது.

SC, ST, ஆதரவற்ற விதவை

இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 45 ஆகவும், மாற்றுத்திறனாளி அல்லாதோருக்கு 35 ஆகவும் வயது உச்ச வரம்பு இருந்தது. இதுவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட வயது உச்சவரம்பு விவரம்

தேர்வுபொதுப் பிரிவினர் வயது வரம்புஒதுக்கீட்டுப் பிரிவு வயது
குரூப் - 1  37 42
குரூப்-2, 2ஏ35உச்ச வயது வரம்பு இல்லை
குரூப்-4 (அதிக கல்வித்தகுதி)  -உச்ச வயது வரம்பில்லை
குரூப்-4 (அதிக கல்வித்தகுதி இல்லாதவர்களுக்கு)  35   37
SC, ST, ஆதரவற்ற விதவை- 40

மாற்றுத்திறனாளிகள்

தேர்வு   பொதுப் பிரிவினர் வயது வரம்புஒதுக்கீட்டுப் பிரிவு வயது
குரூப்-1  47  52
குரூப்-2, 2ஏ  45 உச்ச வயது வரம்பில்லை
குரூப்-4 (அதிக கல்வித்தகுதி) - உச்ச வயது வரம்பில்லை
குரூப்-4 (அதிக கல்வித்தகுதி இல்லாதவர்களுக்கு)  4547
SC, ST, ஆதரவற்ற விதவை  - 50

தமிழ்நாடு அரசின் இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (அக். 30, 2026) முதல் அடுத்து ஐந்து ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் வயது வரம்பு நிறைவடையும் சூழலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பெரியளவில் பயனளிக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES