SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

கறவை மாடு கடன் திட்டம்: ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி.. விவசாயிகள் எப்படி பெறலாம்?

Dairy Cow Loan Scheme: தமிழக அரசு கறவை மாடு கடன் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், இந்த திட்டத்தின் கீழ் ரூ.1.20 லட்சம் வரை எப்படி கடனுதவி பெறலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Written By Umabarkavi K
Published: Aug 08, 2026, 02:38 PM IST | Updated: Aug 08, 2026, 02:59 PM IST
Join

Dairy Cow Loan Scheme: தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. குறிப்பாக, விவசாயிகள் பொருளாதார ரீதியாக வலுவாக இருப்பதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு மானியம், உதவித்தொகை, கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழக அரசு கறவை மாடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  இதன் மூலம் கறவை மாடு வாங்க தமிழக அரசு கடன் வழங்குகிறது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம்

கால்நடை வளர்ப்போர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகறிது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் லிமிடெட் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்)/மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் ரூ.1.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

ரூ.1.20 லட்சம் கடனுதவி

கறவை மாடு கடன் திட்டத்தில் தமிழக அரசு ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி வழங்குகிறது.  பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு  உயர்ந்தபட்சமாக  ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ.1,20,000 வழங்கப்படுகிறது. கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 வழங்கப்படுகிறது.

வட்டி விதிதம் எவ்வளவு?

கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.1,20,000 கடனுக்கு ஆண்டு வட்டி விகிதம் 7 சதவீதம் விதிக்கப்படுகிறது. பயனாளியின் பங்கு 5 சதவீதமாகும். பெறப்படும் கடனை பயனாளிகள் மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரெல்லாம் கடன் பெறலாம்?

கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கான வயது வரம்பானது 18 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிறப்படுத்தப்பட்டோர் சீர்மரபினரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.  

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்

கறவை மாடு கடன் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சாதிச் சான்றிதழ், பிறப்பிடத் சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விவரங்களை வைத்திருக்க வேண்டும்.

கறவை மாடு கடன் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?

இந்த திட்டத்தில் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்)/ மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES