• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /தினமும் 8 லிட்டர் பால்.. இலவச கறவை மாடுகள் திட்டம்.. பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

தினமும் 8 லிட்டர் பால்.. இலவச கறவை மாடுகள் திட்டம்.. பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

TN Govt Free Cow Scheme: தமிழகத்தில் 10,000 ஊரகப் பெண்களுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்க ரூ.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயனாளிக்கும் நாளொன்றுக்கு 8 லிட்டர் பால் கறக்கும் திறனுள்ள மாடு வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

Written ByUmabarkavi K
Published: Oct 27, 2026, 06:31 PM IST|Updated: Oct 27, 2026, 06:51 PM IST
joinshare
தினமும் 8 லிட்டர் பால்.. இலவச கறவை மாடுகள் திட்டம்.. பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தினமும் 8 லிட்டர் பால்.. இலவச கறவை மாடுகள் திட்டம்.. பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

தினமும் 8 லிட்டர் பால்.. இலவச கறவை மாடுகள் திட்டம்.. பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

2

ஹைதராபாத்தில் வற்றிப்போன தண்ணீர்! எமர்ஜென்சி நிலை அறிவிப்பு..8 மாசத்திற்கு கஷ்டம்..

3

இஸ்ரேல் தேர்தல் 2026: உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா... ஏன்? காரணம் என்ன? -Explained

4

60000 உழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கும் மைக்ரோசாஃப்ட்! வெளியான அதிரடி அறிவிப்பு..

5

YouTube-க்கு நேரடி போட்டி... 90 நிமிட Podcast வீடியோக்களை சோதிக்கும் Instagram!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

TN Govt Free Cow Scheme: தமிழக அரசு பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நடந்த முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலும் விஜய் தலைமையிலான தவெக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தது. அதனை செயல்படுத்தும் விதமாக அந்தந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கி வருகிறது. அந்த வகையில், கறவை மாடுகள் வழங்கும் திட்டம் குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.

கறவை மாடு வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

அதன்படி, 2026-27ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு பால் உற்பத்தியிலும், பால் கொள்முதல் செய்வதிலும், தேசிய அளவில் முன்னிலையில் உள்ளது. பால் உற்பத்தியினை மேலும் அதிகரிக்கவும், ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தினை உறுதிசெய்திடவும், ஒவ்வொரு ஆண்டும் 10,000 தகுதிவாய்ந்த பெண்களுக்கு கறவைமாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும் என நிதி அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

அந்த செயல்படுத்திடும் வகையில், அறிவிப்பினைச் ஊரகப் பகுதிகளில் வாழும் தகுதிவாய்ந்த 10.000 பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் வழங்குவதற்காக 2026-27ஆம் நிதி ஆண்டிற்கு 57 கோடி ரூபாய்க்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரூ.500க்கு மேல் மதுபானம் வாங்குவோருக்கு கட்டுப்பாடு.. நவம்பர் 1 முதல் டாஸ்மாக்கில் புதிய நடைமுறை!
 

ஊரகப் பகுதி பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள்! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople https://t.co/trH8zesO58

— TN DIPR (@TNDIPRNEWS) October 27, 2026

திட்டத்தின் நோக்கம்

  • ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு விலையில்லாக் கறவை மாடுகளை வழங்கும்
  • சிறப்பான உற்பத்தித் திறன்கொண்ட பால் சொத்துகளை உருவாக்குவதன் மூலம் ஊரகப் பெண்களின் வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்தும்.
  • மாநிலத்தில் பால் உற்பத்தியை அதிகரித்தல்
  • பால் கூட்டுறவு நிறுவனங்களை வலுப்படுத்துதல்
  • அறிவியல்பூர்வமான பால் பண்ணை முறைகளை ஊக்குவித்தல்
  • குடும்ப ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துதல்
  • நிலையான வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதை ஊக்குவித்தல்

மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. யாருக்கு எவ்வளவு? முதல்வர் விஜய் அறிவிப்பு

தினமும் 8 லிட்டர் பால் கறக்கும் மாடு

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 8 லிட்டர் பால் கறக்கும் திறனுள்ள ஒரு ஆரோக்கியமான, அதிக பால் தரும் கலப்பினக் கறவை மாடு வழங்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் பயனாளி குடும்பத்திற்கு வழக்கமான வருமான ஆதாரம் உறுதி செய்வதுடன், முறையான கால்நடை பராமரிப்பு மற்றும் அறிவியல் மேலாண்மை ஆகியவற்றின் மூலம், ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மாடும் மூன்று முதல் நான்கு கன்றுகளை ஈனும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இது நீண்ட காலச் சொத்து உருவாக்கம் மற்றும் நிலையான பொருளாதார நன்மைகளுக்கும் வழிவகுக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் கீழ் கறவை மாடுகளை பெற எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Aavin பால் பொருட்களின் விலை உயர்வு ஏன்? ஆவின் நிர்வாகம் விளக்கம்!
 

Add Zee News as a Preferred Source
TAGS:
TN Govt Schemes