• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /இந்தியா
  • /ஹைதராபாத்தில் வற்றிப்போன தண்ணீர்! எமர்ஜென்சி நிலை அறிவிப்பு..8 மாசத்திற்கு கஷ்டம்..

ஹைதராபாத்தில் வற்றிப்போன தண்ணீர்! எமர்ஜென்சி நிலை அறிவிப்பு..8 மாசத்திற்கு கஷ்டம்..

ஹைதராபாத்தில், நிலத்தடி நீர் வற்றியிருப்பதால் அம்மாநில மக்கள், குடிநீர் பற்றாக்குறையை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 27, 2026, 05:58 PM IST|Updated: Oct 27, 2026, 06:04 PM IST
joinshare
ஹைதராபாத்தில் வற்றிப்போன தண்ணீர்! எமர்ஜென்சி நிலை அறிவிப்பு..8 மாசத்திற்கு கஷ்டம்..
Image Credit: Hyderabad Water Emergency | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தினமும் 8 லிட்டர் பால்.. இலவச கறவை மாடுகள் திட்டம்.. பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

தினமும் 8 லிட்டர் பால்.. இலவச கறவை மாடுகள் திட்டம்.. பெண்களுக்கு தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

2

ஹைதராபாத்தில் வற்றிப்போன தண்ணீர்! எமர்ஜென்சி நிலை அறிவிப்பு..8 மாசத்திற்கு கஷ்டம்..

3

இஸ்ரேல் தேர்தல் 2026: உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா... ஏன்? காரணம் என்ன? -Explained

4

60000 உழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கும் மைக்ரோசாஃப்ட்! வெளியான அதிரடி அறிவிப்பு..

5

YouTube-க்கு நேரடி போட்டி... 90 நிமிட Podcast வீடியோக்களை சோதிக்கும் Instagram!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

எல்-நினோவின் தாக்கம், உலகளவில் பல்வேறு நாடுகளை பாதித்திருக்கிறது. அதில், இந்தியாவிற்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் எனும் கணிப்பும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் ஏற்பட்டிருக்கும் குடிநீர் தட்டுப்பாடே இதற்கு சான்றாக இருக்கிறது.

குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் ஹைதராபாத்!

கடந்த ஜூன் மாதம், ஹைதராபாத் நகரில் குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டியிருந்தது. அந்த சமயத்தில், கோடை வெயில் அந்த மாநிலத்தை கொளுத்தி எடுத்தது. அந்த காலம் முடிந்தாலும், வெயிலின் தாக்கம் தணியாமல், பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

எல் நினோவால், பருவமழை தாமதித்தது. இதனால், நிலத்தடி நீர் மட்ட்ம குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இந்த மாநிலத்தில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளும் வற்றி இருக்கின்றன.

இந்த வறட்சியால், பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பல்வேறு பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக குடிநீர், 4-5 நாட்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

மக்கள், இதனால் அன்றாட தேவைகளுக்காக கூட தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதிலும் குறிப்பாக, ஹைதராபாத்தின் மேற்கு பகுதிகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீர் மிக மோசமான நிலையில் இருப்பது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

டேங்கர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்கள்..

ஹைதராபாத்தின் குடிநீர் பற்றாக்குறை பற்றி பேசும் நிபுணர்கள், அடுத்த பருவமழைக்காலம் வரை இந்த குடிநீர் பற்றாக்குறை பிரச்சனை இருக்கும் என்று கூறுகின்றனர். இதில் பிரச்சனையே என்னவென்றால், மழைநீரை சேகரிப்புக்கான தொட்டிகள் இருந்தும், ஆழ்துளை கிணறுகள் வறண்டு போயுள்ளன.

இதனால், மக்கள் அரசு கொண்டு வரும் டேங்கர் லாரி தண்ணீரை எதிர்பார்த்து, குடத்துடன் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தின் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் 2-3 நாட்களுக்கு ஒரு முறை வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. மக்கள், இந்த குடிநீர் பற்றாக்குறையால் தங்களிடம் இருக்கும் தண்ணீரை மிகவும் பார்த்து பார்த்து செலவு செய்யும் நிலைக்கு  ஆளாகி இருக்கின்றனர்.

அடுத்த எட்டு மாதங்கள் என்ன ஆகும்?

இந்த வறட்சி காரணமாக, இருக்கும் 6000 ஏரிகளில், 500ல் மட்டும்தான் இப்போதைக்கு தண்ணீர் இருப்பதாக தெரிகிறது. ஹைதராபாத்தில் இருக்கும் மக்கள் தொகையில் சுமார் 1.5 கோடி பேர், குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தில் இருக்கும் 16 மண்டலங்களில், 3ல் மட்டுமே தேவையான மழை பெய்துள்ளது இந்த வறட்சிக்கு இன்னொரு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த பகுதியில் வாழ்பவர்கள், டேங்கர் லாரிகளில் பணம் கொடுத்து தங்களின் தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

ஒரு நாளைக்கு, சுமார் 6000 முதல் 8000 வரை டேங்கர்ஸ் புக் செய்யப்படுவதாக அந்த நகரின் குடிநீர் வழங்கல் வாரியம் தெரிவிக்கிறது. ஹைதராபாத்தின் முக்கிய பகுதிகளான செகந்தரா பாத் கண்டோன்மெண்ட், தலைநகரின் புறநகர் பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. இதே நிலை, வரும் 8-10 மாதங்களுக்கு தொடரவும் வாய்ப்பிருப்பதாக அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

தண்ணீரை வீணாக்கினால் அபராதம்..!

தண்ணீர் வீணாவதை கட்டுப்படுத்த, ஹைதரபாத் அரசு இன்னொரு முயற்சியையும் கையில் எடுத்துள்ளது. குடிநீரை வீணாக்குபவர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதாவது, தண்ணீரை கொண்டு வண்டியை கழுவுவது, வீட்டின் வெளிப்புறம் மற்றும் ரோட்டை சுத்தம் செய்வது, டேங்குகளையோ அல்லது ஆழ்த்துளை கிணறுகளிலோ தண்ணீரை வழியவிடுவது போன்றவற்றிற்கு அபராதம் விதிக்கப்படுமாம்.

அதே போல, தொழில் நடக்கும் இடங்களான உணவகம் போன்ற பகுதிகளில், குடிநீரை தவறாக பயன்படுத்தினால், அவர்களுக்கு ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

டேங்கர் லாரிகளை எடுத்துச்செல்லும் போது அதிலிருந்து தண்ணீர் வழிந்தாலோ, அளவுக்கு மீறி தண்ணீர் கொண்டு சென்றாலோ, கண்டைனர் லீக் ஆனாலோ, அதை ஓட்டும் ஓட்டுநருக்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

சட்டத்திற்கு புறம்பாக, மோட்டார் அமைத்து தண்ணீர் நிரப்புபவர்களுக்கும் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் படிக்க | இஸ்ரேல் தேர்தல் 2026: உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா... ஏன்? காரணம் என்ன? -Explained

அதிகாரிகள் சொல்வது என்ன?

இது குறித்து நீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் ரெட்டி ஒரு ஆய்வுக் கூட்டத்தின் போது பேசினார். அப்போது, "குறைந்த மழைப்பொழிவின் காரணமாக சிங்கூர் அணை மற்றும் நாகார்ஜுன சாகர் அணையில் நீர்மட்டம் அபாயகரமான நிலைக்குச் சரிந்து வருவதால், எஞ்சியிருக்கும் நீரைச் சேமிக்கும் பொருட்டு, நகரின் முக்கியப் பகுதிகளுக்கு வழக்கமான ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் வழங்கும் முறையை, மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்ற கட்டுப்படுத்தப்பட்ட வழக்கமாக இந்து நீர் வழங்கல் வாரியம் தீவிரமாக மாற்றி வருகிறது" என்று தெரிவித்தார்.

குடிநீர் பற்றாக்குறை குறித்து நீர் அவசரநிலையை அறிவித்துள்ள நீர் வாரியம், டிசம்பர் இடையிலோ, அல்லது இறுதியிலோ சில நீர்த்தேக்கங்களில் பயன்படுத்தக்கூடிய நீர் வற்றிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மாற்று வழியை யோசிக்கும் அரசு!

குடிநீர் பற்றாக்குறையை தடுக்க, அரசு பல்வேறு வழிகலை ஆலோசனை செய்து வருகிறது. 16 மண்டலங்களிலும் உள்ள நிலத்தடி நீர் மட்டங்களை மதிப்பிடுவதற்காக, நீர் தணிக்கையையும் அரசு நடத்தி வருகிறது. இதற்கிடையில், நீர் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டையும் சேமிப்பதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்துமாறு ஹைதராபாத் பெருநகரப் பகுதி சிறப்பு தலைமைச் செயலாளர் ஜெயேஷ் ரஞ்சன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.

கோதாவரி குடிநீர் திட்டம், கிருஷ்ணா நதியில் இருந்து இன்னும் அதிக தண்ணீர் எடுப்பது போன்ற மாற்று வழிகளை தாங்கள் ஆலோசனை செய்து வருவதாக, அசோக் ரெட்டி தெரிவித்திருக்கிறார். ஹிமயாத் சாகர், ஓஸ்மான் சாகர் உள்ளிட்ட நதிகளில் இருந்து தண்ணீர் எடுக்கும் யோசனையும் இருப்பதாக கூறினார். இந்த நீர்நிலைகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் குடிநீராக இருக்காது. ஆனால் அவற்றை சுத்திகரித்து உபயோகிக்கும் வழிகளை செய்வது குறித்தும் ஆலோசனை நடைப்பெற்று வருகிறது.

மேலும் படிக்க | 60000 உழியர்களுக்கு விருப்ப ஓய்வு கொடுக்கும் மைக்ரோசாஃப்ட்! வெளியான அதிரடி அறிவிப்பு..

Add Zee News as a Preferred Source
TAGS:
India