• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /கந்த சஷ்டி விழா: திருச்செந்தூர் முருகன் கோயில் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கந்த சஷ்டி விழா: திருச்செந்தூர் முருகன் கோயில் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Tiruchendur Murugan Temple: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை (நவம்பர் 10) தொடங்க உள்ள நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். திருச்செந்தூர் கோயிலில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 09, 2026, 02:28 PM IST|Updated: Nov 09, 2026, 02:35 PM IST
joinshare
கந்த சஷ்டி விழா: திருச்செந்தூர் முருகன் கோயில் போறீங்களா? பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
விலகினார் ஜென்சன் ஹுவாங்... Nvidia அடுத்த சிஇஓ யார்? ரேஸில் இருக்கும் ஜெய் பூரி யார்?

விலகினார் ஜென்சன் ஹுவாங்... Nvidia அடுத்த சிஇஓ யார்? ரேஸில் இருக்கும் ஜெய் பூரி யார்?

2

ரூ.600 கோடி மதிப்பிலான பங்குகள்... திரும்பப் பெற Zee Entertainment நிறுவனம் முடிவு

3

Explained : தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வரப்போகுதா? மழை பொய்த்தால் இதுதான் நிலை..

4

CM விஜய்யின் சிறப்பு வட்டி தள்ளுபடி... வீடு, மனை ஒதுக்கீடுதாரர்களுக்கு ஜாக்பாட்

5

செஞ்சியில் மீண்டும் அதிர்ச்சி! 7 வயது சிறுமியை கடத்த முயற்சி.. தப்பித்தது எப்படி? இருவர் கைது

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Kandha Sasti Tiruchendur Murugan Temple: தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு உலகெங்கிலும் ஏராளமான பக்தர்கள் இருக்கின்றனர். தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நவம்பர் 10ஆம் தேதி கந்த சஷ்டி விரதம் துவங்கப்பட உள்ளது. 

தொடர்ந்து, நவம்பர் 15ஆம் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், நவம்பர் 16ஆம் தேதி முருகன் - தெய்வாணை திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. இதனால், முருகன் கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வார்கள். அந்த வகையில், அறுபைடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கந்த சஷ்டி திருவிழா

இது தொடர்பாக வெளியான அறிவிப்பின்படி, முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, தமிழ்கடவுள் முருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய கோயில்களில் 2026 ஆம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அன்னதானத் திட்டத்தை விரிவுப்படுத்துதல், கல்வி நிறுவனங்களை மேம்படுத்துதல், பக்தர்கள் நலன் மற்றும் பணியாளர் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் துறையின் மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

அதனைத் தொடர்ந்து, திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு கந்தசஷ்டி பெருவிழா நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 15ஆம் தேதி முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரமும், 16 ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில்  சிறப்பு ஏற்பாடுகள்

கந்த சஷ்டி விரதம் தொடங்கும் முதல் ஐந்து நாட்களுக்கு தினம் ஒரு லட்சம் பக்தர்களும், சூரசம்ஹார தினத்தன்று சுமார் ஆறு லட்சம் பக்தர்களும், திருக்கல்யாணத்திற்கு சுமார் இரண்டு லட்சம் பக்தர்களும் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவதால் அவர்களின் தேவைக்கேற்ப சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக /இடங்களில் ஒரு லட்சத்து 1,02,673 சதுரடி பரப்பளவில் நிழற் கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தங்கும் கொட்டகைகளில் அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்றவை முழுமையாக நிறைவேற்றி தரப்படும். திருக்கோயில் வளாகத்திலுள்ள நிரந்தர கழிவறைகளுடன் 300 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கந்த சஷ்டி திருவிழா போது 15,000 பக்தர்களுக்கு நாள் முழுவதும் அறுசுவை உணவு வழங்கப்படவுள்ளது.

திருக்கோயிலுக்கு முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக திருக்கோயில் சார்பாசு கட்டணமில்லா நான்கு சுற்றுப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. திருக்கோயில் வளாகங்களில் குடிநீர் வழங்கிட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட உள்ளது. பொது தரிசனம் மற்றும் முதியோர்கள் தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு 6 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் ஒரு லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட உள்ளன.

திருக்கோயில் கந்தசஷ்டி நிகழ்வுகளை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் 26 இடங்களில் அமைக்கப்படுகின்றன. விழா நாட்களில் திருக்கோயில் மற்றும் அதன் சுற்றுபுறங்களில் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் சுமார் 400 தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படும். திருக்கோயில் சார்ந்த பாதுகாப்பு பணியில் வெளிமுகமையின் மூலம் சுமார் 789 நபர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகள்

திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கிடவும், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கவும், விரைவாக தரிசனம் மேற்கொள்ளவும், தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மருத்துவத்துறை போன்ற அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்கின்றன.

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் தங்கி விரதமிருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதால் பக்தர்களும் தங்கி விரதமிருக்கும் வகையில் புதிய சஷ்டி மண்டபம் இந்தாண்டு முதல் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu