SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

உள்கட்டமைப்பு பணிகளுக்கு புதிய நிறுவனம்! தமிழ்நாடு அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு

Tamil Nadu government : ரூ.200 கோடிக்கு மேற்பட்ட அரசு கட்டுமான பணிகளுக்கு TNICC என்ற புதிய நிறுவனம் உருவாக்கி தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Nov 09, 2026, 15:36 IST | Updated: Nov 09, 2026, 15:46 IST
Image Credit: Tamil Nadu Infrastructure and Construction Corporation
Join

Tamil Nadu government : தமிழ்நாட்டில் ரூ.200 கோடிக்கு மேல் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் பெருந்திட்டப் பணிகளைத் திறம்படவும், உலகத்தரம் வாய்ந்த தொழில்முறை மேலாண்மையுடனும் செயல்படுத்த "தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம்" என்ற புதிய அரசு நிறுவனத்தை அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை செயலாளர் இதற்கான அரசாணை அதிகாரப்பூர்வமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | அண்ணன் சீர் திட்டம் முக்கிய அறிவிப்பு! டெண்டர் வெளியீடு - முக்கிய தேதிகள், நிபந்தனைகள் முழு விவரம்

சட்டமன்ற அறிவிப்பு செயல்வடிவம் பெற்றது

சட்டமன்றத்தில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் 2026-2027-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டிருந்தார். மாநிலத்தில் ரூ.200 கோடிக்கும் அதிகமான அரசுப் பணிகளை மேற்கொள்ளுதல், பயன்படுத்தப்படாத அரசு நிலங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தி அரசுக்கு வருவாய் உருவாக்குதல், தேசிய மற்றும் சர்வதேச தனியார் கட்டுமான டெண்டர்களில் பங்கேற்றல் போன்ற நோக்கங்களுக்காக ஒரு புதிய கழகம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து முதன்மைத் தலைமைப் பொறியாளர் (பொது) சமர்ப்பித்த கருத்துருவை ஏற்று இப்புதிய நிறுவனம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.  

TNICC மேற்கொள்ளும் முதன்மைப் பணிகள்

மத்திய அரசின் என்.பி.சி.சி நிறுவனத்தின் செயல்பாட்டு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்நிறுவனம் கீழ்வரும் முக்கியப் பணிகளைக் கையாளும்:  

மெகா உள்கட்டமைப்பு: ரூ.200 கோடிக்கு மேற்பட்ட பெரிய அரசு கட்டடங்கள் மற்றும் பெருந்திட்டங்களை மேற்கொள்ளுதல்.  

வருவாய் ஈட்டுதல்: அரசு வசம் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்களை முறைப்படுத்தி, அரசுக்குத் தொடர் வருவாய் ஈட்டும் வகையிலான கட்டுமானங்களை உருவாக்குதல்.  

வணிகக் கூட்டமைப்புகள்: நகரியங்கள் , தொழில்துறை மையங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் வணிகப் பூங்காக்கள் ஆகியவற்றை அமைத்தல்.  

ஆலோசனை மற்றும் வடிவமைப்பு: திட்ட மேலாண்மை ஆலோசனை, தரமான கட்டடக்கலை வரைபடங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த தரக்கட்டுப்பாட்டு சேவைகளை வழங்குதல்.  

முக்கிய நிபந்தனைகள்

இந்நிறுவனத்தின் செயல்பாடுகளுக்காக அரசு குறிப்பிட்ட சில நிபந்தனைகளையும் வரையறுத்துள்ளது:  

பங்கு மூலதனம்: நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ.15 லட்சமாகவும், ஆரம்பக்கட்ட செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.10 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

தொகுப்பு நிதி: அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடி தொகுப்பு நிதியானது, வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட விரிவான வணிகத் திட்டம் மற்றும் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப பின்னர் பரிசீலிக்கப்படும்.  

தனி நிதி ஒதுக்கீடு: TNICC மேற்கொள்ளும் ஒவ்வொரு பணிக்கும் சம்பந்தப்பட்ட பயனாளி துறையே முழு நிதியையும் குறிப்பிட்ட நிறுவன கட்டணத்துடன் வழங்கும்.  

மெட்ரோ நிலங்களுக்கு விலக்கு: சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் அதிகார வரம்பிற்குள் வரும் நிலங்களின் வணிக ரீதியான வளர்ச்சிகளை TNICC மேற்கொள்ளாது.  

வெளிப்படையான நிர்வாகம்: நிறுவனத்தின் விரிவாக்கம் அல்லது புதிய பணியாளர்கள் நியமனம் ஆகியவை தனியாகப் பரிசீலிக்கப்படும் என நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வேகமாக வளர்ந்து வரும் நவீன உள்கட்டமைப்புத் தேவைகளை கார்ப்பரேட் அணுகுமுறையோடு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றவும், தமிழக அரசுக்கு கூடுதல் சொத்து மற்றும் வருவாய் மதிப்பை உருவாக்கவும் இந்நிறுவனம் பெரும் பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES