SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC Group 4 Free Coaching 2026: டிஎன்பிஎஸ்சி Group 4 தேர்வு 2026-க்கு அரசு சார்பில் இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனியில் நடக்க உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Oct 10, 2026, 05:24 PM IST | Updated: Oct 10, 2026, 05:30 PM IST
Join

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) குரூப்-4 பணிகளுக்கான 6,574 காலிப் பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கான குரூப்-4 தேர்வு வரும் 10.01.2027 அன்று நடைபெற உள்ளது. குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.11.2026 ஆகும். தேர்வு தொடர்பான கூடுதல் தகவல்களைத் தேர்வர்கள் [https://www.tnpsc.gov.in/](https://www.tnpsc.gov.in/) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.  

அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள்

TNPSC, TNUSRB, SSC மற்றும் RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகத் தொடர்ச்சியாக இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 4 தேர்வை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்காக தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.  

இப்பயிற்சி வகுப்புகள் குத்துக்கல்வலசையில் அமைந்துள்ள தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் வியாழக்கிழமை (15.10.2026) காலை 10.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாகத் துவங்கப்பட உள்ளது.  

வாராந்திர மாதிரித் தேர்வுகள்

பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நவீன ஸ்மார்ட் போர்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட உள்ளன. பாடங்கள் கற்பிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், தேர்வர்களின் தயாரிப்பை மதிப்பீடு செய்யும் வகையில் வாரம் தோறும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும்.  

மேலும், இத்தேர்வுக்குத் தேவையான முக்கியப் புத்தகங்கள் அனைத்தும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் தேர்வர்களின் பயன்பாட்டிற்காகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தேர்வர்கள் தங்களுக்குத் தேவையான குறிப்புகள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை வேலைவாய்ப்புத்துறையின் மெய்நிகர் கற்றல் வலைதளமான www.tamilnaducareerservices.tn.gov.in மூலமும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.  

பயிற்சியில் இணைவது எப்படி?

இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள், Tenkasi Employment Office என்ற டெலிகிராம் (Telegram) சேனலில் வழங்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.  

மாற்று வழியாக, 04633-213179 என்ற தொலைபேசி எண் வழியாகத் தொடர்பு கொண்டோ அல்லது தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாகச் சென்றோ தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். அரசுப் பணி கனவுடன் தயாராகும் தேர்வர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திப் பயனடையுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.  

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES