• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வி.எஸ். பாபு மறைவு: 'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - திருச்சி பயணத்தை ரத்து செய்த CM விஜய்

வி.எஸ். பாபு மறைவு: 'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - திருச்சி பயணத்தை ரத்து செய்த CM விஜய்

பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என குறிப்பிட்டு வி.எஸ். பாபுவின் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Written BySudharsan G
Published: Nov 19, 2026, 16:18 IST|Updated: Nov 19, 2026, 16:57 IST
joinshare
வி.எஸ். பாபு மறைவு: 'ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு' - திருச்சி பயணத்தை ரத்து செய்த CM விஜய்
Image Credit: Late VS Babu with CM Vijay | File Image : X

About the Author

Sudharsan G

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

VS Babu Passed Away, Political Leaders Condolences: தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவுக்கு ஆளுநர் ஆர். வி. அர்லேகர், முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆளுநர் இரங்கல்

ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் வெளியிட்ட இரங்கல் பதிவில், "கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன்.

"கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையும் துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். " -ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு ஆளுநர் (Rajendra Vishwanath Arlekar, Governor of Tamil Nadu)

— LOK BHAVAN, TAMIL NADU (@lokbhavan_tn) November 19, 2026

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் இரங்கல்

இதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவரது அதிகாரப்பூர்வ X தளத்தில், "கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.

பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்" என பதிவிட்டுள்ளார்.

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

— CMOTamilNadu (@CMOTamilnadu) November 19, 2026

வி.எஸ்.பாபுவின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ரத்து

மேலும், வி.எஸ்.பாபுவின் மறைவையொட்டி, முதலமைச்சர் விஜய்யின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் நாளை திருச்சி செல்ல இருந்த நிலையில், அந்த பயணமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது X பதிவில், "கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

— M.K.Stalin (@mkstalin) November 19, 2026

பாபுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் இபிஎஸ் இரங்கல்

கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். @AIADMKOfficial

— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 19, 2026

அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் இரங்கல்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும், கொளத்தூர் தொகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) November 19, 2026

அண்ணாமலை இரங்கல்

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. வி.எஸ். பாபு அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!

— K.Annamalai (@annamalai_k) November 19, 2026

முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் இரங்கல்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி திரு வி எஸ் பாபு அவர்கள் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்!.. அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அவரை இழந்து வாடும் @TVKVijayHQ இயக்கத்திற்கும், குடும்பத்திற்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்!... https://t.co/iI6EV2jNiW

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) November 19, 2026

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu