• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /35 நாட்களாக தொடரும் மர்மம்! செஞ்சி சிறுமி எங்கே? செங்கல் சூளையில் கிடைத்த சாம்பல் - லேட்டஸ்ட் அப்டேட்

35 நாட்களாக தொடரும் மர்மம்! செஞ்சி சிறுமி எங்கே? செங்கல் சூளையில் கிடைத்த சாம்பல் - லேட்டஸ்ட் அப்டேட்

Gingee Child Missing Case: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாகியும் மர்மம் நீடிக்கிறது. சிறுமியை கண்டுபிடிக்க சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 17, 2026, 09:55 IST|Updated: Nov 17, 2026, 10:05 IST
joinshare
35 நாட்களாக தொடரும் மர்மம்! செஞ்சி சிறுமி எங்கே? செங்கல் சூளையில் கிடைத்த சாம்பல் - லேட்டஸ்ட் அப்டேட்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

2

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

3

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

4

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

5

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Gingee Child Missing Case: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கி வருகிறது. 35 நாட்களுக்கு மேலாகியும் சிறுமியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த 11ஆம் தேதி காணாமல் போன சிறுமி ஹேமலதாவைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி வசம் சென்றதும் இப்போது என்ன நடக்கிறது என்பதை காணலாம்.

செஞ்சியில் மாயமான சிறுமி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியை சேர்ந்த வடிவேலு மற்றும் பவானி தம்பதியின் இரண்டாவது பெண் குழந்தையான ஹேமலதா இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தான் காணாமல் போனவர். சிறுமி காணாமல் போவதற்கு முந்தைய நாள் இரவு, ஹேமலதாவுக்கு குடும்பத்தினர் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். பின்னர் அனைவரும் தூங்கச் சென்றுவிட்டனர்.

மேலும், ஹேமலதாவின் தாய் தான் அவரைத் தூங்க வைத்திருக்கிறார்.  அனைவரும் தூங்கச் சென்ற போது, வீட்டை பூட்டாமலேயே தூங்கியிருக்கின்றனர். இந்தச் சூழலில், அதிகாலை நேரத்தில் வீட்டின் வெளியே, சிறுமியின் அழுகுரல் கேட்டதாக அவரது எதிர்வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் கூறுயதாக சொல்லப்படுகிறது. இதனால் சிறுமி கடத்தப்பட்டாரா எனவும் போலீசார் விசாரணையை வேகப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: சென்னைக்கு கிழக்கே அக்வான் புயல்.. எங்கு, எப்போது கரையை கடக்கும்? வானிலை மையம் அப்டேட்

வீட்டின் அருகில் இருக்கக்கூடிய விவசாயக் கிணறுகள், வயல்வெளிகள், மலைகள் எனப் பல்வேறு இடங்களில் போலீசார் தேடியும் இதுவரை ஹேமலதாவைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சூழலில், சிறுமி காணாமல் போன அன்று இரவு பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஒருமுறைகூட அவரது பிறந்தநாள் கொண்டாடப்படவில்லை என்பது குடும்பத்தினர் மீது போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், குழந்தையின் தாய்க்கு உண்மை அறியும் பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமியின் வீடு, பள்ளி, வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் தடயங்கள் கிடைக்குமா என சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.  35 நாட்களுக்கு மேலாகியும் சிறுமியை கண்டுபிடிக்கவில்லை.  சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல் சூளையில் ஆய்வு

இதற்கிடையில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள செங்கல் சூளை பகுதியில் சிபிசிஐடி ஏற்கனவே விசாரணை மேற்கொண்டனர்.  செங்கல் சூளை உரிமையாளர் உள்ளிட்டோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், தற்போது விழுப்புரத்தில் இருந்து தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ராஜு தலைமையிலான தடய அறிவியில் துறையில் வரவழைக்கப்ட்டுள்ளனர்.  அவர்கள் செங்கல் சூளையின் பல்வேறு பகுதிகளிலும் நுணுக்கமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செங்கல் சூளையின் உட்பகுதியில் மோப்ப நாய்களை பயன்படுத்தி சோதனை நடத்துகின்றனர். இந்த சோதனையில் அங்கு அதிகாரிகளுக்கு சாம்பல் கிடைத்துள்ளது. இந்த சாம்பலை சேகரித்து தடய அறவியில் துறையினர் ஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. சேரிக்கரிக்கப்ப்டட சாம்பலில் ஏதேனும் முக்கிய தடயங்கள் கிடைக்குமா என்ற கோணத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: கன்னியாகுமரி: டிசம்பர் 3ம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

35 நாட்களாகியும் தொடரும் மரமம்

7 வயது சிறுமி மாயமாகி 35 நாட்களை கடந்தும் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்தவர்கள், கிராம பொதுமக்கள், கோயில் பூசாரிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோரிடம் தொடர்ந்து துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.  சிறுமி விரைவில் கிடைக்க வேண்டும் என ஒட்டுமொத்த தமிழக மக்கள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: தமிழக கால்நடை வளர்ப்போருக்கு டபுள் ஜாக்பாட்! எருமை + பன்றி வளர்க்க மானியம் - Explained
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime