• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /POCSO வழக்குகளில் தாமதமாக கிடைக்கும் நீதி.. சிஸ்டத்தில் இத்தனை பிரச்னைகளா? சரி செய்வாரா CM விஜய்

POCSO வழக்குகளில் தாமதமாக கிடைக்கும் நீதி.. சிஸ்டத்தில் இத்தனை பிரச்னைகளா? சரி செய்வாரா CM விஜய்

Tamil Nadu Prosecution Directorate: தமிழகத்தில் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்கத்தில் கிட்டதட்ட 23 சதவீதம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், போக்சோ வழக்குகளுக்கு நீதி கிடைப்பது தாமதம் ஏற்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Oct 21, 2026, 12:38 PM IST|Updated: Oct 21, 2026, 01:48 PM IST
joinshare
POCSO வழக்குகளில் தாமதமாக கிடைக்கும் நீதி.. சிஸ்டத்தில் இத்தனை பிரச்னைகளா? சரி செய்வாரா CM விஜய்
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? தீபாவளிக்கு முன் டிஏ உயர்வு குறித்து முக்கிய அப்டேட்!

அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? தீபாவளிக்கு முன் டிஏ உயர்வு குறித்து முக்கிய அப்டேட்!

2

TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஹால் டிக்கெட் வெளியீடூ! டவுன்லோட் செய்வது எப்படி?

3

IND vs NZ: வைபவ், வருண் விளையாடுவார்களா? போட்டியை எங்கு, எதில் பார்க்கலாம்?

4

POCSO வழக்குகளில் தாமதமாக கிடைக்கும் நீதி.. சிஸ்டத்தில் இத்தனை பிரச்னைகளா? சரி செய்வாரா CM விஜய்

5

Virtual Warriors இல்லை..Virtual Abusers! தன்னை ஆபாசமாக சித்தரிப்பதாக மேயர் பிரியா புகார்..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Prosecution Directorate:  தமிழகத்தில் சிறார்கள் பாலியல் ரீதியாக தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். சிறார்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும் அது நின்றபாடில்லை. இது ஒருபுறம் இருக்க, போக்சோ வழக்குகளுக்கு நீதி கிடைப்பது என்பது நீண்ட ஆண்டுகளை எடுத்து கொள்கிறது. 'உரிய காலத்தில் கிடைக்காத நீதி.. அநீதியே' (Justice delayed is justice denied) என்று கூற்று இங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

பாதிக்கப்படும் ஒவ்வொரு சிறுமிக்கும் சரியான நேரத்தில் நீதி கிடைக்க வேண்டும். இதற்கு நீதித்துறை அமைப்புகள் சரியாக இயங்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் நீதித்துறையில் பல குளறுபடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கிடைப்பது என்பது நீண்ட ஆண்டுகளாகிறது. நிதித்துறையில் உள்ள சிக்கல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

தமிழக அரசு வழக்கறிஞர் துறையில் தொடரும் காலிப் பணியிடங்கள்

குற்ற வழக்குத் தொடர்வுத் துறை இயக்ககம் குற்றவியல் வழக்குகளில் அரசு தரப்பு வாதங்களை நீதிமன்றங்களில் முறையாக எடுத்துரைக்க செயல்படுகிறது. குற்ற வழக்குத் தொடர்வுத்துறையில் பல்று காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும், இதனால், வழக்குகளை விரைந்து முடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  குற்ற வழக்குத் தொடர்வுத்துறையில் இணை இயக்குநர், உதவி இயக்குநர் (நிர்வாகம்), கூடுதல் அரசு வழக்கறிஞர் (Additional Public Prosecutor), மற்றும் நிலை-I, நிலை-II உதவி அரசு வழக்கறிஞர்கள் (Assistant Public Prosecutors grade 1,2) ஆகிய முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளன. 

இந்த பணியிடங்கள் கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.  தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், தமிழ்நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட கூடுதல் மற்றும் உதவி அரசு வழக்கறிஞர்களுக்கான  பணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாமல் இருப்பதாக   தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்ககத்தில் 23 சதவீதம் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. அதாவது, 116 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • செப்டம்பர் 1, 2026 நிலவரப்படி, மொத்தமுள்ள 505 பணியிடங்களில் 116 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • இதில், அரசு வழக்கறிஞர் பிரிவில் உள்ள 426 பணியிடங்களில் 103 இடங்களும், பிற துறைகளில் உள்ள 79 பணியிடங்களில் 13 இடங்களும் காலியாக உள்ளன.
  • கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் பதவிகளில் 100க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

மேலும் படிக்க: பைனான்ஸ் வித் ஹரிஷ் தற்கொலை: சைபர் புல்லியிங் காரணமா? நடந்தது என்ன?

போக்சோ வழக்குகளுக்கு நீதி கிடைப்பதில் தாமதம்

இது தொடர்பாக வழக்கறிஞர்கள் பேசியதாவது, "குற்ற வழக்குத் தொடர்வுத் துறை இயக்ககத்தில் உள்ள காலிப் பணியிடங்கள், சீறார் நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள், போக்சோ வழக்குகள் உட்பட பல வழக்களை விரைவாக விசாரித்து முடிப்பதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது வழக்கறிஞர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பல வழக்கறிஞர்கள் உடல்நிலை சரியில்லாதபோதும் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. போக்சோ உள்ளிட்ட வழக்குகளின் விசாரணையின்போது அரசு வழக்கறிஞர்கள் இல்லாத நேரங்களில் நீதிமன்ற வழக்கு விசாரணை அடுத்தடுத்த தேதிகளுக்கு ஒத்திவைக்கப்படும் சூழல் உருவாகிறது.

ஒரு அரசு வழக்கறிஞர் இல்லாதபோது, ​​பொறுப்பு அரசு வழக்கறிஞர்கள் அந்த வழக்கில் நியமிக்கப்படுகிறார்கள். வழக்கமான வழக்கறிஞர் இல்லாத பட்சத்தில், அவருக்குப் பதிலாக வேறு ஒரு அரசு வழக்கறிஞர் கூடுதல் பொறுப்பாக (In-charge) நியமிக்கப்படுகிறார். இவ்வாறு கூடுதல் பொறுப்பாக வரும் வழக்கறிஞர்களுக்கு, அந்த வழக்கின் பின்னணி மற்றும் முந்தைய விசாரணைகள் பற்றிய முழுமையான தொடர்ச்சி இருப்பதில்லை. இதனால், அவர்கள் வழக்கை முழு ஈடுபாட்டுடன் நடத்த முடியாமல், ஒரு கடமைக்காக இயந்திரத்தனமாக மட்டுமே பணியாற்ற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

சிறார் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள்

சீறார் நீதிமன்றங்களில் (Juvenile Justice Boards)  நிலுவையில் உள்ள 1655 போக்சோ வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. சென்னையில் மட்டுமே சிறார் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் இருக்கின்றனார். மற்ற மாவட்டங்களில் நீதித்துறை நடுவர்ககளே கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.  

மாவட்டங்களில் கூடுதல் பொறுப்பு வகிக்கும் நீதித்துறை நடுவர்கள், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே சிறுவர் நீதிமன்றத்திற்கு வந்து செல்வதாகவும், இதனால், வழக்குகளை விரைந்து முடிப்பதில் கடும் தாமதம் ஏற்படுவதாக அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். மேலும், தமிழகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் 425 நீதிமன்றங்களை நிரந்தர நீதிமன்றங்களாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தனது பரிசீலனையில் எடுத்துக்கொண்டுள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகளில் பிரச்னை

தமிழகத்திலுள்ள வட்டார நீதிமன்றங்களில் (Taluk courts) முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது வழக்கறிஞர்களுக்கு பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பல வட்டார நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள் என தனி அறை இல்லாததால், பாதிக்கப்பட்டவர்களிடம் தனியாகப் பேசி விவரங்களைச் சேகரிக்க முடியவில்லை என்று அரசு வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். வழக்கறிஞர்கள் ஓய்வெடுப்பதற்கான இடவசதிகளும் பல நீதிமன்றங்களில் இல்லை. குறிப்பாக, ஒரு பெண் வழக்கறிஞர் தனது மாதவிடாய் நாட்களில் நீதிமன்றத்தில் கழிப்பறை வசதி இல்லாத காரணத்தினால் தற்செயல் விடுப்பு எடுக்க நேர்ந்ததாகவும் கூறுகின்றனர். இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க: வடகிழக்கு பருவமழை: கனமழையில் சிக்கப்போகும் தென் மாவட்டங்கள்.. அப்போ சென்னை கதி? Explained

குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்ககம் எப்படி செயல்படுகிறது?

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று புதிதாக பணியில் சேர்நத் இரண்டாம் நிலை உதவி அரசு வழக்கறிஞர்கள் சிறார் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்படுகின்றனர். இதற்கு வழக்கறிஞராக குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சிறப்பு அரசு வழக்கறிஞர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்பது விதி. இதனை மீறுவது போக்சோ சட்டத்தை மீறுவதாகும்.

BNSS-இன் பிரிவு 20-இன் கீழ், 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை, ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கண்காணிப்பது, நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது, மற்றும் மேல்முறையீடுகள் தாக்கல் செய்வது குறித்துக் கருத்துகளை வழங்குவது ஆகியவை குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்ககத்தின் பொறுப்புகளாகும்.

குற்றவியல் துணை இயக்குநர் -  காவல் துறை அறிக்கைகளை ஆய்வு செய்து கூர்ந்து கவனிப்பதோடு, ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக ஆனால் 10 ஆண்டுகளுக்குக் குறைவாகச் சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக முடித்து வைப்பதை உறுதி செய்வதாகும்.

உதவி அரசுத் தரப்பு இயக்குநர் பணி -  ஏழு ஆண்டுகளுக்குக் குறைவான சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கண்காணிப்பவர்.

அரசு தரப்பு வழக்கறிஞர் - அரசின் சார்பில் ஆஜராகி, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆகிய இருவரின் உரிமைகளையும் பாதுகாக்கப் பணியாற்றுபவர். ஒரு வழக்கில் உண்மையைக் கண்டறிய நீதிமன்றத்திற்கு உதவுவதே அவரது கடமையாகும்.

மேற்கண்ட பணியிடங்கள்  தமிழகத்தில் காலியாக இருப்பதே போக்சோ வழக்குகளுக்கு நீதி கிடைப்பது தாமதம் ஏற்படுகிறது. இயக்குநரகத்தில் உள்ள அனைத்து நிர்வாகப் பணியிடங்களையும் மற்றும் பல்வேறு அரசு வழக்கறிஞர் பதவிகளையும் விரைவில் நிரப்புவதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.  மேலும், அரசுத் தரப்பு இயக்குநரகம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் மறுஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் உள்ள உள்கட்டமைபுகளுக்க நிதி ஒதுக்கீடு செய்து வருகிறோம் என்றும் காலிப் பணியடங்கள் நிரப்பப்படும் என்றும் கூறினார்.

மேலும் படிக்க: Explainer: ஏற்றுமதி மூலம் உலகளாவிய பட்டாசுச் சந்தையை குறிவைக்கும் சிவகாசி!!
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer