• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /சென்னை
  • /Virtual Warriors இல்லை..Virtual Abusers! தன்னை ஆபாசமாக சித்தரிப்பதாக மேயர் பிரியா புகார்..

Virtual Warriors இல்லை..Virtual Abusers! தன்னை ஆபாசமாக சித்தரிப்பதாக மேயர் பிரியா புகார்..

சென்னை மாநகர மேயர் பிரியா, தன்னை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பலர் வெளியிடுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் மாநில சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்திருக்கிறார். இது குறித்த ஒரு வீடியோவையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

Written ByYuvashree M
Published: Oct 21, 2026, 12:34 PM IST|Updated: Oct 21, 2026, 12:57 PM IST
joinshare
Virtual Warriors இல்லை..Virtual Abusers! தன்னை ஆபாசமாக சித்தரிப்பதாக மேயர் பிரியா புகார்..
Image Credit: Mayor Priya | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? தீபாவளிக்கு முன் டிஏ உயர்வு குறித்து முக்கிய அப்டேட்!

அரசு ஊழியர்களுக்கு விரைவில் குட் நியூஸ்? தீபாவளிக்கு முன் டிஏ உயர்வு குறித்து முக்கிய அப்டேட்!

2

TNPSC குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஹால் டிக்கெட் வெளியீடூ! டவுன்லோட் செய்வது எப்படி?

3

IND vs NZ: வைபவ், வருண் விளையாடுவார்களா? போட்டியை எங்கு, எதில் பார்க்கலாம்?

4

POCSO வழக்குகளில் தாமதமாக கிடைக்கும் நீதி.. சிஸ்டத்தில் இத்தனை பிரச்னைகளா? சரி செய்வாரா CM விஜய்

5

Virtual Warriors இல்லை..Virtual Abusers! தன்னை ஆபாசமாக சித்தரிப்பதாக மேயர் பிரியா புகார்..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

சென்னை மேயர் பிரியா, தன்னுடைய படத்தை ஆபாசமாக சித்தரித்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மேயர் பிரியா புகார் கொடுத்திருக்கிறார்.

மேயர் பிரியா வீடியோ..

மேயர் பிரியா, இது குறித்து கொடுத்திருக்கும் புகாரில், சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

“பொது வாழ்வில், நான் மக்களின் பிரதிநிதி எனும் முறையில், என் மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். ஆனால், மர்ம நபர்கள் என் படத்தை பாலியல் ரீதியாக ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இத்தகைய பதிவுகள் ஆரோக்கியமான விமர்சனங்கள் அல்ல, பெண்களை பாலியல் ரீதியாக இழிவுப்படுத்தும் நோக்கிலேயே வெளியிடப்பட்டவை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், இந்த சம்பவம் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்பு இல்லை என்றும், பொது வாழ்வுக்கு வர விரும்பும் இளம் பெண்களுக்கும், தலித் சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல் என தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, இது போன்ற அவதூறு பதிவுகளுக்கு பின், அரசியல் எதிரிகளின் கூட்டுச்சதி இருக்கலாம் எனும் சந்தேகமும் எழலாம் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

https://t.co/DkCzEdt6Et

— Priya (@PriyarajanDMK) October 20, 2026

ஆபாச பதிவுக்ளை வெளியிட்டவர்கள், அவற்றை ரீ-போஸ்ட் செய்தார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

வீடியோ வெளியிட்டுள்ளார்…

மேயர் பிரியா, தற்போது ஒரு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். அதில், 2022ஆம் ஆண்டு அன்று மேயராக பொறுப்பேற்று பணியில் இருக்கும் தான் கடந்த 4 ஆண்டுகளாக ஒவொரு அரசு நிகழ்ச்சியிலும் மாநகராட்சி நிகழ்ச்சியிலும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் அருகில் தனக்கு இருக்கை போட்டு ஒரு பெண் மற்றும் மேயர் எனும் முறையில் தன் வளர்ச்சிக்கு வழிகாட்டியதாகவும், ஒரு தங்கைக்கு எப்படி வழிகாட்டுவார்களோ அப்படி தனக்கு வழி காட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இன்றைய தவெக அரசு ஆட்சியமைத்த முதலே மாநகராட்சி சார்பாக மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகளை நிறுத்தி வைத்திருப்பதாகவும் இதற்கு பலமுறை கண்டனம் தெரிவித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

virtual warriors எனப்படுபவர்கள், தற்போது virtual abusers-ஆக மாறியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் என்றெல்லாம் தவெக அரசை கண்டித்து பேசினாலும் அதற்கு மறுநாளே தன்னை தவறாக சித்தரித்து எடிட் செய்து வெளியிடுகிறார்கள் என தெரிவித்தார்.

இது தன்னை தனிப்பட்ட முறையில் பாதித்திருப்பதாக கூறும் அவர், புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என கூறி ஆட்சிக்கு வந்த அவர்கள், ஒரு மேயரான தான் இது குறித்து சமூக வலைதளங்களில் பேசியும், முதல்வர் விஜய் இது குறித்து மவுனம் காத்து வருவதாக கூறியிருந்தார்.

விஜய் குறித்து அவதூறாக பேசிய விவகாரம்..

சமீபத்தில் ஒரு கட்சி விழாவில் திமுக உறுப்பினராக இருக்கும் ஒரு பெண், முதல்வர் குறித்து தவறாக பேசிய போது அதனை கழக துணை பொது செயலாளரான கனிமொழி அங்கேயே கண்டித்ததாகவும், மாவட்டக்கழக செயலாளரான சேகர் பாபு கண்டித்ததாகவும் குறிப்பிட்டு, இது போல தவெக ஒரு இடத்திலாவது நடந்து கொள்கிறார்களா? என்று கேட்டிருந்தார்.

மேலும் படிக்க | POCSO வழக்குகளில் தாமதமாக கிடைக்கும் நீதி.. சிஸ்டத்தில் இத்தனை பிரச்னைகளா? சரி செய்வாரா CM விஜய்

Add Zee News as a Preferred Source
TAGS:
Chennai