அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி இளைஞர் உயிரிழப்பு.. நடந்தது என்ன? ஷாக் சம்பவம்
Minister Jegatheeswari Car Accident: சென்னையை அடுத்த காட்டங்குளத்தூர் பகுதியில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை அமைச்சர் ஜெகதீஸ்வரி சென்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Minister Jegatheeswari Car Accident: சமூக நலன் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி இன்று (செப்டம்பர் 7) சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக காரில் சென்றுக் கொண்டிருந்தார். அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசு வாகனத்தில் வந்துள்ளார். அவருக்கு பின்னல் ஒரு எஸ்கார்ட் வண்டியும், அதற்கு பின்னல் அவரது சொந்த வாகனமும் வந்துள்ளது.
அமைச்சர் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு
காட்டாங்குளத்தூர் சந்திப்பில் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த காரான மாருதி எர்டிகா கார் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனே இளைஞரின் உடலை மீட்டுள்ளனர். தொடர்ந்து, மறைமலைநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்து ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எப்படி விபத்து நடந்தது, உயிரிழந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தகவலின்படி, அமைச்சர் ஜெகதீஸ்வரி அரசு வாகனத்தில் அமர்ந்து தலைமைச் செயலகம் வந்த நிலையில், அவருக்கு சொந்தமான மாருதி கார் பின்தொடர்ந்து வந்துள்ளது. அப்போது, அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த காரின் முன்பக்கம் இளைஞர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
நடந்தது என்ன?
அப்போது, கார் கட்டுப்பாட்டை மீறி, இளைஞரின் இருசக்கர வாகனத்தில் விபந்தது. இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இளைஞர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக உடனே போலீசாருக்கு ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, படுகாயம் அடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மறைமலைநகர் போக்குவரத்து புலனாய்வு போலுசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அமைச்சர் ஜெகதீஸ்வரி காரை பறிமுதல் செய்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த இளைஞர் 29 வயதான இறையன்பு என்பது தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க: செப்டம்பர், அக்டோபரில் எந்தெந்த ரயில் சேவைகளில் மாற்றம்...? தெற்கு ரயில்வே அறிவிப்பு