Tamil Nadu Live Update : வடகிழக்கு பருவமழை, வானிலை நிலவரம் அப்டேட், சரஸ்வதி பூஜை - இன்றைய முக்கிய செய்திகள்
Tamil Nadu Latest news Live : தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கனமழை எச்சரிக்கை, சரஸ்வதி பூஜை என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Live Update Today : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் லேசான மழை பெய்து வரும் நிலையில், பல இடங்கள் வானம் மேகமூட்டத்துடனே காணப்படுகிறது. வானிலை ஆய்வு மையமும் மழை எச்சரிக்கை கொடுத்துள்ளது. சரஸ்வதி பூஜை இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதுதவிர இன்றைய நாளின் அரசின் முக்கிய செய்திகள், அறிவிப்புகள், திட்டங்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டுகள், பென்சன் அப்டேட் ஆகியவை குறித்து இங்கே உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்
20 Oct 2026, 11:37 AM
டிகிரி / டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு
சென்னையிலுள்ள தமிழ்நாடு வாகன பராமரிப்புத் துறை (TNMVMD), 2 பிரிவுகளின் கீழ் மொத்தம் 79 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதில் இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) / வாகனப் பொறியியல் (Automobile Engineering) துறைகளில் பட்டதாரி பயிற்சிப் பணியாளர் மற்றும் டிப்ளோமா பெற்ற தொழில்நுட்பப் பயிற்சிப் பணியாளர் ஆகிய பதவிகள் அடங்கும்... (மேலும் படிக்க)
20 Oct 2026, 10:08 AM
Tamil Nadu Live Update : தீவிரமாக கனமழை பெய்யும்
தமிழகத்தில் இன்று (அக்டோபர் 20) எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
20 Oct 2026, 10:05 AM
Tamil Nadu Live Update : திமுக கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக திமுக மகளிர் அணி நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவெக நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். (மேலும் படிக்க)
20 Oct 2026, 9:50 AM
RTI மனுக்களுக்கு அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை
ஆர்டிஐ மனுக்களுக்கு பதில் கொடுக்காமல் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. (மேலும் படிக்க)
20 Oct 2026, 9:49 AM
நீதிபதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக தகுதி மதிப்பெண்
தமிழ்நாடு நீதித்துறை பணியில் மாவட்ட நீதிபதி மற்றும் உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கான நேரடி நியமனத் தேர்வுகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. (மேலும் படிக்க)
20 Oct 2026, 9:48 AM
100 நாள் வேலை திட்ட பெண்களுக்கு குட் நியூஸ்! 150 நாட்களாக உயர்வு
தமிழ்நாடு அரசு, ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்தி அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
20 Oct 2026, 9:43 AM
ஆட்டம் காட்டும் Underworld
லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்புடைய அனில் பண்டிட் என்ற நபர், பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீதான தாக்குதலுக்குத் தான் பொறுப்பேற்பதாகத் தெரிவித்துள்ளார். லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத்தின் சபர்மதி சிறையில் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், அவரது கும்பல் எப்படி உலகளவில் தொடர்ந்து இயங்குகிறது என்ற கேள்வி எழுகிறது... (மேலும் படிக்க)
20 Oct 2026, 9:39 AM
அக்டோபர் 22, 23 மும்பையில் முக்கிய கூட்டம்
8வது ஊதியக் குழுவின் மும்பை கூட்டத்தில், ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்கள் மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பான சிக்கல்கள் குறித்து ஊழியர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பிரதிநிதிகளுடன் ஊதியக் குழு ஆலோசனை நடத்தவுள்ளது... (மேலும் படிக்க)
I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.