SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State
LIVE NOW

Tamil News LIVE: இசையமைப்பாளர் தேவா காலமானார்; கனமழை அலர்ட்; IND vs WI - லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

Tamil News LIVE Updates: தவெக நிர்வாகி போதைப்பொருள் வழக்கில் கைது; தமிழ்நாட்டின் வானிலை அப்டேட்ஸ்; இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான 5வது டி20ஐ போட்டி உள்ளிட்ட இன்றைய செய்திகளின் முக்கிய அப்டேட்ஸ் இதோ

Written By Sudharsan G
Published: Oct 17, 2026, 10:15 AM IST | Updated: Oct 17, 2026, 03:30 PM IST
Join

தவெக நிர்வாகி கைது: 135 கிலோ மெத்தம்பெட்டமைனை வைத்திருந்ததாக நாகப்பட்டினம் தவெக மாவட்ட நிர்வாகி பூபாபலன் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தவெக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

தமிழ்நாடு வானிலை: தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IND vs WI: இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான டி20ஐ தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் கடைசி மற்றும் 5வது டி20ஐ போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற இருக்கிறது. போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கும்.

17 Oct 2026, 3:28 PM

Tamil News Live : சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் - காரைக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில் அட்டவணை, பெட்டிகள், முன்பதிவு விவரம் (மேலும் படிக்க)

17 Oct 2026, 3:10 PM

இந்தியன் ரயில்வே விதிகளில் மாற்றம்

உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அக்டோபர் 27, 2026 முதல், ரயில் நிலைய முன்பதிவு கவுண்டர்களில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கும் காப்பீடு வழங்கப்பட உள்ளது... (மேலும் படிக்க)

17 Oct 2026, 1:28 PM

Tamil News Live : தேவா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி

சென்னை நுங்கம்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். ரஜினி நடித்த அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். ரஜினி - தேவா காம்போ தமிழ் திரையுலகில் பெரும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

17 Oct 2026, 1:20 PM

பிஎம் கிசான் 24வது தவணை

பிஎம் கிசான் பயனாளிகள், தங்கள் தவணைத் தொகை விடுவிக்கப்படுவதற்கு முன்பாகவே தங்கள் ஆவணங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தும் சரியாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. ஒவ்வொரு முறையும், சிறிய தவறுகளால் லட்சக்கணக்கான விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய பணம் முடங்கிவிடுகிறது... (மேலும் படிக்க)

17 Oct 2026, 12:30 PM

Tamil News Live : முதலமைச்சர் விஜய் இரங்கல்

இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். 

 

17 Oct 2026, 11:17 AM

Tamil News LIVE: இசையமைப்பாளர் தேவா காலமானார்

தேனிசைத் தென்றல் என அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா காலமானார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையல் தேவா (76) காலமானார். தமிழ், தெலங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களக்கு பாடல்கள், பின்னணி இசையை வழங்கி இருக்கிறார். (மேலும் படிக்க)

17 Oct 2026, 11:18 AM

8வது ஊதியக் குழு முக்கிய அப்டேட்

மத்திய அரசு ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட 8-வது ஊதியக் குழுவின் கூட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, ஊதியக் குழுவின் கூட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. அடுத்த முக்கியமான கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது... (மேலும் படிக்க)

17 Oct 2026, 11:16 AM

கணவர் மீது அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!!

 உத்தரகண்ட் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா, தனது கணவர் கிரிதாரி லால் சாஹு மீது காவல் நிலையத்தில் புகார் (FIR) அளித்துள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்தியது, சாதி ரீதியாக அவதூறாகப் பேசியது மற்றும் தன்னைக் கொல்லச் சதி செய்தது போன்ற குற்றச்சாட்டுகளை ரேகா ஆர்யா முன்வைத்துள்ளார்.... (மேலும் படிக்க

17 Oct 2026, 11:03 AM

தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் திருத்தம்

சர்ச்சைக்குரிய சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பான பெரும் சர்ச்சை நிலவி வரும் நிலையில், புதிய வாக்காளர்களையும், அந்தத் திருத்தத்தால் விடுபட்டவர்களையும் உள்ளடக்கும் நோக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வியாழக்கிழமை 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் பட்டியல்களில் சிறப்புச் சுருக்கத் திருத்தம் (SSR) செய்ய உத்தரவிட்டது... (மேலும் படிக்க)

17 Oct 2026, 10:29 AM

Tamil News Live : Breaking Bad Party தவெக...

"ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்த கட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது. "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்" என 135 கிலோ மெத்தம்பெட்டமைன் வைத்திருந்ததாக தவெக நிர்வாகி கைதானதை விமர்சித்து முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்த பதிவில் இருந்து...

17 Oct 2026, 10:24 AM

Tamil News LIVE: கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

கிளாம்பாக்கம் நோக்கி வரும் வாகனங்களுக்கு அக்டோபர் 21ஆம் தேதி வரை தாம்பரம் போக்குவரத்து போலீசார், ஐந்து இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் இதற்கு ஏற்ப தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

17 Oct 2026, 10:18 AM

Tamil News Live : தமிழ்நாடு வெதர்மேன் வானிலை அப்டேட்

"கவனம் வட தமிழ்நாட்டின் பக்கம் திரும்புவதால், சென்னை அதிக மழை பெய்யும் மண்டலத்திற்குள் வருகிறது என்றும் அக்டோபர் 17-18, அக்டோபர் 21-22 ஆகிய நாட்கள் மிக நல்ல மழையை எதிர்பார்க்க வேண்டிய முக்கிய நாட்களாகும். பகல் நேரங்களில் வெயில் நிலவக்கூடும், ஆனால் திடீரென எதிர்பாராத விதமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடல் அருகே உள்ள பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழை உச்சத்தில் இருக்க வாய்ப்புள்ளது" என தமிழ்நாடு வெதர்மேன் அவரது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES