)
தென்கிழக்கு-தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தமிழக-புதுச்சேரி கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனப் பணிவோடு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பான கரைப்பகுதிகள் அல்லது துறைமுகங்களுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'அர்னாப்' புயலாக தீவிரமடைந்துள்ளது. இது ஆந்திரா - ஒடிசா கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புயல் உருவாக்கம்: மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து 'அர்னாப்' புயலாக மாறியுள்ளது.
புயலின் நகர்வு: இப்புயல் மேலும் பலமடைந்து, ஆந்திரம் - ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை கூண்டு: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 முக்கிய துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து ரூ. 1,04,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக கிராமுக்கு ரூ. 15 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 13085க்கு விற்கப்படுகிறது.
பிரேசில் அதிபர் தேர்தலில் லூலா டா சில்வா 51.8% வாக்குகளுடன் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார். தேர்தல் சர்ச்சைகள், போல்சோனாரோவின் எதிர்ப்பு மற்றும் உலக அரசியல் தாக்கம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். (மேலும் படிக்க)
ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தம் குறித்த செய்திகள் முற்றிலும் தவறானவை என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பால், நெய், வெண்ணெய், பனீர், குக்கீஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு, தடையின்றி விநியோகிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
கனமழை காரணமாக கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (அக்டோபர் 26) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் மழையின் தாக்கம் குறைந்து, நாளை முதல் நவம்பர் 1 வரை வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது வங்கக்கடலில் ‘அர்னாப்’ புயல் உருவாகியுள்ளது. கனமழை காரணமாக கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் ஒரே நாளில் 62 இடங்களில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், ராட்சத பாறைகளை அகற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.