SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பிறப்புச் சான்றிதழ் : இன்னும் 4 நாட்கள்தான் பாக்கி! திருச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

Birth Certificate Update: வரும் 26 ஆம் தேதிக்குள் பிறப்புச் சான்றிதழில் திருத்தம், பெயர் சேர்ப்பு உள்ளிட்டவைகளை செய்ய முடியும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தலைக் கொடுத்துள்ளார்.

Written By Karthikeyan Sekar
Published: Sep 22, 2026, 19:32 IST | Updated: Sep 22, 2026, 19:35 IST
Join

Birth Certificate Update: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறப்புப் பதிவேடுகளில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்யாமல் விடுபட்டவர்கள், அதனைப் பதிவு செய்வதற்காக அரசு வழங்கியுள்ள கால அவகாசம் முடிவடைய இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ளன. வரும் செப்டம்பர் 26 ஆம் தேதிக்குள் இந்தப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுவே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி வாய்ப்பு என்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீக் தயாள் பொதுமக்களுக்கு எச்சரிக்கையுடனான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  

பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவின் அவசியம்: பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரை முறையாகப் பதிவு செய்தால் மட்டுமே அது சட்டப்பூர்வமான முழுமையான ஆவணமாகக் கருதப்படும். ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்குத் தேவையான அனைத்து முக்கிய ஆவணங்களுக்கும் இப்பெயர் பதிவு இன்றியமையாததாகும். குறிப்பாக குடும்ப அட்டையில் குழந்தையின் பெயரைச் சேர்க்க, ஆதார் அட்டை பெற, பள்ளி சேர்க்கை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற, வெளிநாட்டுப் பயணங்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் விசா உரிமம் பெற, அனைத்து வகையான அரசு மற்றும் கல்வி சார்ந்த வயதுச் சான்றுகளுக்கும் குழந்தையின் பெயர் பதிவான பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாகும்.  

இறுதி வாய்ப்பு:

திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000-ன்படி, 01.01.2000-க்கு முன்பு அல்லது 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் வரையிலான குழந்தைகளின் பெயரைப் பிறப்புப் பதிவேடுகளில் குறிப்பிடாமல் பதிவு செய்தவர்களுக்கு, பெயரைச் சேர்க்க அரசு ஏற்கனவே 31.12.2014 வரை அவகாசம் வழங்கி இருந்தது. அதன்பின்னர் பொதுமக்களின் நலன் கருதி, 2 முறை தலா 5 ஆண்டுகள் என முறையே 31.12.2019 மற்றும் 31.12.2024 வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசமும் முடிந்துவிட்ட நிலையில், பெயர் பதிவு செய்யாமல் இன்னும் விடுபட்டுள்ள அனைத்து பிறப்புப் பதிவுகளுக்கும் பெயர் சேர்க்கும் பொருட்டு, வரும் 26.09.2026 வரை அரசு கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.  

எங்கு சென்று பதிவு செய்வது?

திருச்சிராப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்கள்  ஆகியவற்றில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பின்வரும் அரசு அலுவலகங்களை அணுகி விடுபட்ட குழந்தை பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

தாமதிக்க வேண்டாம்:

தற்போது நடைமுறையில் உள்ள இந்தக் காலக்கெடு முடிவடைய இன்னும் 4 நாட்களே எஞ்சியுள்ளதால், இதுவரை குழந்தையின் பெயரைப் பதிவு செய்யாத பெற்றோர்கள் கடைசி நேரம் வரை காத்திராமல் உடனடியாக உரிய சான்றுகளுடன் தொடர்புடைய அலுவலகங்களுக்குச் சென்று உடனடியாகப் பெயரைப் பதிவு செய்து முழுமையான பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீக் தயாள் கேட்டுக்கொண்டுள்ளார். இக்கால அவகாசத்திற்குப் பிறகு பெயர் சேர்ப்பதில் கடுமையான சட்ட நடைமுறைகளும் காலதாமதமும் ஏற்பட வாய்ப்புள்ளதால், அரசு தந்துள்ள இந்த அறிய வாய்ப்பைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES