SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

திருச்சி வேலைவாய்ப்பு: டிப்ளமோ, பி.எஸ்சி நர்சிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்

Trichy district jobs : திருச்சி மாவட்டத்தில் நர்சிங் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Written By Karthikeyan Sekar
Published: Sep 20, 2026, 15:51 IST | Updated: Sep 20, 2026, 15:55 IST
Image Credit: Trichy district jobs
Join

Trichy district jobs : தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் கீழ் இயங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் சார்பில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார அலுவலக நிர்வாகத்திற்குட்பட்ட மருத்துவமனைகள் மற்றும் நல மையங்களில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 205 செவிலியர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு

கல்வித்தகுதி: இந்திய செவிலியர் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங் அண்ட் மிட்வைஃபரி அல்லது பிஎஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். அத்துடன், தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் மன்றத்தில் பதிவு செய்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் மற்றும் பணி நிபந்தனைகள்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.21,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும். இப்பணியிடங்கள் 11 மாத காலத்திற்கு முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகின்றன. எந்தவொரு சூழலிலும் இப்பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது எனவும், பணியில் சேரும்போது இதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள்

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tiruchirappalli.nic.in/notice_category/announcements/ என்ற முகவரியில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி சான்றிதழ்களான 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, DGNM / B.Sc Nursing மதிப்பெண் சான்றிதழ்கள், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவுச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சமூகம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், அடையாள அட்டை நகல் மாற்றுத்திறனாளி / கணவரால் கைவிடப்பட்டோர் / முன்னாள் ராணுவத்தினர் / ஆதரவற்ற விதவை ஆகிய பிரிவுகளுக்குரிய உரிய சான்றுகள் ஆகிய சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் கடைசி நாள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்களுடன் நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ மட்டுமே அனுப்ப வேண்டும். ண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லூரி அருகில், T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி – 620 020.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 25.09.2026, வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதால் தகுதியான செவிலியர்கள் உடனே விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES