SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சென்னையில் 8வது ஊதியக் குழு கூட்டம்: அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

8th Pay Commission: பல நகரங்களில் 8வது ஊதியக் குழு உறுப்பினர்கள் நடத்தி வரும் சந்திப்புகளின் ஒரு பகுதியாக சென்னையில் இரண்டு நாள் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் செப்டம்பர் 7 அன்று தொடங்கியது.

Written By Sripriya Sambathkumar
Published: Sep 09, 2026, 05:38 PM IST | Updated: Sep 09, 2026, 05:46 PM IST
Join

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வுதியதாரர்களும் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்காக காத்திருக்கிறார்கள். பல நகரங்களில் 8வது ஊதியக் குழு உறுப்பினர்கள் நடத்தி வரும் சந்திப்புகளின் ஒரு பகுதியாக சென்னையில் இரண்டு நாள் மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் செப்டம்பர் 7 அன்று தொடங்கியது.

8வது ஊதியக் குழு: இடைக்கால அறிக்கை

8வது ஊதியக் குழு தனது பரிந்துரைகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இக்குழு நவம்பர் 3, 2025 அன்று அமைக்கப்பட்டது தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க இதற்கு 18 மாத கால அவகாசம் உள்ளது. தேவைப்பட்டால், ஏதேனும் ஒரு விவகாரம் குறித்து இடைக்கால அறிக்கையையும் இக்குழு சமர்ப்பிக்கலாம்.

மேலும் படிக்க | ஓய்வூதிய விதிகளில் மாற்றம்: OFB ஊழியர்களுக்கு மத்திய அரசின் நிவாரணம்

காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்கள்

8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் பெருமளவிலான மத்திய அரசு ஊழியர்களை நேரடியாகப் பாதிக்கும். இக்குழு அவர்களின் ஊதிய அமைப்பு, படிகள் மற்றும் பிற பணி நிபந்தனைகளை மறுஆய்வு செய்யும்.

ஓய்வூதியதாரர்களுக்கும் முக்கிய தருணம்

8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் பணியில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களையும் உள்ளடக்கியிருக்கும். பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களைத் தவிர்த்து, டிசம்பர் 31, 2025 நிலவரப்படி சுமார் 33.76 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இருந்ததாக அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

ஊதியம் எவ்வளவு உயரும்

8வது ஊதியக் குழு அமலுக்கு வந்தவுடன் "ஊதியம் எவ்வளவு உயரும்?" என்பதுதான் அனைவருக்கும் உள்ள முக்கிய கேள்வியாக உள்ளது. ஆனால், அரசு இதுவரை அதிகாரப்பூர்வமான 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (fitment factor) அல்லது இறுதி ஊதிய உயர்வுத் தொகையை அறிவிக்கவில்லை. எனவே, இப்போதைக்கு ஊதிய உயர்வு குறித்த குறிப்பிட்ட எண்களை ஊகிப்பது கடினமே.

மேலும் படிக்க | கலைஞர் கருணாநிதி மீது 54 குற்றச்சாட்டுகள்! சர்க்காரியா கமிஷன் உண்மையும், வதந்தியும்.. நடந்தது என்ன? -Explained

அடிப்படை ஊதியத்தை மாற்றி அமைப்பது மட்டுமே இக்குழுவின் பணி அல்ல. ஊதிய அமைப்பு, பல்வேறு படிகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணி நிபந்தனைகள் என அனைத்தையும் இது மறுஆய்வு செய்கிறது. ஊழியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கருத்துகளும் இச்செயல்முறையின் முக்கியப் பகுதியாகும்.

சென்னை மற்றும் புதுச்சேரிக்குப் பிறகு, இக்குழு நாடு முழுவதும் தனது கலந்தாய்வு நடவடிக்கைகளைத் தொடரும். ஊழியர் சங்கங்கள், பணிச் சங்கங்கள், ஓய்வூதியதாரர் குழுக்கள் மற்றும் பாதுகாப்பு மற்றும் ரயில்வே துறைகளின் பிரதிநிதிகளிடமிருந்து கோரிக்கைகள் மற்றும் குறைகளை அவர்கள் கேட்டறிந்து வருகின்றனர்.

அமைக்கப்பட்ட நாளிலிருந்து 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க இந்தக் குழுவுக்கு அவகாசம் உள்ளது. இதன்படி, 2027-ஆம் ஆண்டு மே-ஜூன் மாதவாக்கில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், மத்திய அரசு இதற்கான அமலாக்கத் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. எனவே, அக்குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஊழியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உற்றுநோக்கி வருகின்றனர்.

மேலும் படிக்க | மத்திய அரசு பெண்களுக்கு வழங்கும் ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை விதிகள் மாற்றம்! explained
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES