SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

8வது ஊதியக் குழு: சம்பள உயர்வு, 67% ஓய்வூதியம், 40% HRA... அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்

8th Pay Commission: ஊழியர் சங்கங்கள் பல, 8வது ஊதியக் குழுவிடம் தங்கள் ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளன. அந்த வகையில், தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவும் (NC-JCM), 8-வது ஊதியக் குழுவிடம் பல முக்கியமான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது.

Written By Sripriya Sambathkumar
Published: Nov 07, 2026, 08:21 AM IST | Updated: Nov 07, 2026, 08:27 AM IST
Image Credit: Representative / 8th Pay Commission Latest Update
Join

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் 8வது ஊதியக் குழுவின் அடுத்த கட்ட அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஊதியக் குழு உறுப்பினர்கள் நடத்திய பல கட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பரிந்துரைகளை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர் சங்கங்கள் பல, 8வது ஊதியக் குழுவிடம் தங்கள் ஆலோசனைகளையும், கோரிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளன. அந்த வகையில், தேசிய கூட்டு ஆலோசனைக் குழுவும் (NC-JCM), 8-வது ஊதியக் குழுவிடம் பல முக்கியமான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளது. இதில் பின்வரும் முக்கிய கோரிக்கைகளும் அடங்கும்:

இவற்றில் முக்கிய சில கோரிக்கைகள் மற்றும் அவை நிறைவேற்றப்பட்டால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Salary Hike: குறைந்தபட்ச ஊதியத்தை ₹69,000-ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவு

தற்போதைய குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை ₹18,000-லிருந்து ₹69,000-ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது. இதை அடைவதற்கு, 'ஃபிட்மென்ட் ஃபாக்டரை’ (Fitment factor) 3.833 என நிர்ணயிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Pension Hike: ஓய்வூதியத்தை 67 சதவீதமாக நிர்ணயிப்பதற்கான கோரிக்கை

தற்போது, ​​ஓய்வூதியம் என்பது பணியாளர் இறுதியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதமாக உள்ளது. இதை 67 சதவீதமாக உயர்த்தவும், அதேபோல் குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: அமலாக்கம், ஊதிய திருத்தம், அரியர்... அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்

Pay Level Merger: ஊதிய நிலைகளை ஒன்றிணைப்பதற்கான கோரிக்கை

ஊதிய நிலைகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட ஊதிய அளவுகோல்களின்படி, தற்போதைய 'நிலை 1' (Level 1) ஊதிய மேட்ரிக்ஸை (₹18,000–₹56,900) உயர்த்தி, அதன் தொடக்க அளவை ₹69,000-ஆக மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், 'நிலை 2' (Level 2) மற்றும் 'நிலை 3' (Level 3) ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரே ஊதிய அளவுகோலாக (Pay Scale-2) மாற்றவும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நிலைகளுக்கான தற்போதைய ஊதிய மேட்ரிக்ஸ் ₹21,700 முதல் ₹69,100 வரை உள்ளது. இந்த முன்மொழிவின்படி, குறைந்தபட்ச ஊதியம் ₹83,200 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலை (Level) 4 மற்றும் 5 ஆகியவற்றை ஒன்றிணைத்து, ₹1,12,000-ஐ குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாகக் கொண்ட 'ஊதிய அளவுகோல் 3' (Pay Scale 3) உருவாக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது. 'ஊதிய அளவுகோல் 4'-ஐப் பொறுத்தவரை, நிலை 6-ஐ அதனுடன் இணைத்து, அடிப்படை ஊதியத்தை ₹1,35,700 என நிர்ணயிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நிலை 7 மற்றும் 8-ஐ ஒன்றிணைப்பதன் மூலம் 'ஊதிய அளவுகோல் 5' உருவாக்கப்பட வேண்டும் என்றும், அதில் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ₹1,82,500 ஆக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிலை 9 மற்றும் 10-ஐ ஒன்றிணைத்து 'ஊதிய அளவுகோல் 6'-ஐ உருவாக்குவதும், நிலை 11 முதல் 17 வரையிலான நிலைகளை 'ஊதிய அளவுகோல் 7 முதல் 13' வரை ஒருங்கிணைப்பதும் இந்த முன்மொழிவில் அடங்கும்.

Annual Increment: ஆண்டு ஊதிய உயர்வை 6%-ஆக உயர்த்துவதற்கான கோரிக்கை

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 3% ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இதனை 6%-ஆக உயர்த்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2026 முதல் அரியர்.... எவ்வளவு கிடைக்கும் தெரியுமா?

HRA: வீட்டு வாடகைப்படியை 40%-ஆக உயர்த்துவதற்கான கோரிக்கை

Leave Encashment: ஓய்வுபெறும்போது 600 நாட்களுக்கான விடுப்பு ஊதியத்தைப் பெறுதல்

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும்போது, ​​அவர்கள் பயன்படுத்தாத விடுப்பு நாட்களுக்கு ஈடாகப் பெறும் ஊதியத்தின் (Leave Encashment) உச்சவரம்பை, தற்போதைய 300 நாட்களிலிருந்து 600 நாட்களாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2026 முதல் அமல்படுத்தக் கோரிக்கை

இந்த முன்மொழிவுகளை 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று NC-JCM கோரியுள்ளது. இருப்பினும், இவை தற்போது ஊழியர் அமைப்புகளால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் மட்டுமே. ₹69,000 குறைந்தபட்ச ஊதியம், 67% ஓய்வூதியம் அல்லது புதிய வீட்டு வாடகைப்படி (HRA) விகிதங்கள் எதையும் அரசாங்கம் இன்னும் அங்கீகரிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் பிறகு அரசாங்கம் எடுக்கும் முடிவுக்குப் பின்னரே, இவை குறித்த இறுதி முடிவு தெரியவரும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: 1 ஆண்டு நிறைவு... அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டேட் என்ன? அமலாக்கம் எப்போது?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES