SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு... எகிறும் எதிர்பார்ப்புகள்: அக்டோபர் 22, 23 8வது ஊதியக் குழுவின் முக்கிய கூட்டம்

8th Pay Commission: அக்டோபர் 22-23 ஆகிய தேதிகளில் மும்பையில் 8வது ஊதியக் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை, ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 20, 2026, 09:30 AM IST | Updated: Oct 20, 2026, 09:38 AM IST
Join

8th Pay Commission: 8வது ஊதியக் குழுவின் அமலாக்கத்திற்காகவும், ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய உயர்வின் அறிவிப்புக்காகவும் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 8வது ஊதியக் குழு உறுப்பினர்கள் நாடு முழுவதும் ஊழியர் சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் பல கட்ட கூட்டங்களை நடத்தி வருகின்றன.

8வது ஊதியக் குழு கூட்டம்

அக்டோபர் 22-23 ஆகிய தேதிகளில் மும்பையில் 8வது ஊதியக் குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தை, ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இது 8-வது ஊதியக் குழுவின் செயல்பாட்டில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

இந்தக் கூட்டத்தில், ஊதியங்கள், படிகள், ஓய்வூதியங்கள் மற்றும் பணி நிபந்தனைகள் தொடர்பான சிக்கல்கள் குறித்து ஊழியர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பிரதிநிதிகளுடன் ஊதியக் குழு ஆலோசனை நடத்தவுள்ளது.

ஊதியக் குழு கூட்டத்தின் முக்கிய அம்சங்கள்

கூட்டத்தில் பங்கேற்பதற்கான நிபந்தனைகள் என்ன?

ஊதியக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மும்பையில் குழுவைச் சந்திக்க விரும்பும் அமைப்புகள் அக்டோபர் 10, 2026-க்குள் சந்திப்பிற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, ஊதியக் குழுவிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பிக்கும்போது வழங்கப்படும் 'மெமோ ஐடி' (memo ID)-ஐ அவர்கள் குறிப்பிட வேண்டியிருந்தது. கூட்டத்திற்கான இடம் மற்றும் விரிவான கால அட்டவணை பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு தற்போது முடிந்துவிட்டது.

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: அகவிலைப்படி இணைப்பு, ஊதிய மறுஆய்வு... அரசு ஊழியர்களுக்கு புத்தம் புது அப்டேட்

ஊதிய உயர்வு, ஓய்வூதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?

8வது ஊதியக் குழுவின் மூலம் தங்கள் ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களில் திருத்தம் செய்யப்படும் என்று மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்க்கின்றனர். ஊழியர் அமைப்புகள் 'ஃபிட்மென்ட் ஃபேக்டர்' (fitment factor), குறைந்தபட்ச அடிப்படை ஊதியம், அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியங்கள் தொடர்பாக பல்வேறு முன்மொழிவுகளை முன்வைக்கின்றன. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, இந்த அமைப்புகள் 3.0 முதல் 3.25 வரையிலான ஃபிட்மென்ட் ஃபேக்டரைப் பரிந்துரைத்துள்ளன. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் கணிசமான உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | Explainer: 8வது ஊதியக் குழு... அரசு ஊழியர்களுக்கு அரியர் எவ்வளவு கிடைக்கும்? ஜனவரி 2026 முதல் கிடைக்குமா?

ஃபிட்மென்ட் ஃபேக்டர் என்றால் என்ன?

புதிய அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்க ஃபிட்மென்ட் ஃபேக்டர் ஒரு பெருக்கல் காரணியாக பயன்படுத்தப்படுகின்றது. தற்போதைய அடிப்படை ஊதியம் புதிய ஃபிட்மெண்ர் ஃபாக்டரால் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது. இது, விலை உயர்வால் ஏற்படும் வருமான இழப்பை ஈடுகட்டவும், அதே வேளையில் ஊதியத்தில் உண்மையான உயர்வை வழங்கவும் உதவும் அகவிலைப்படியின் (DA) தாக்கத்தையும் கணக்கில் கொள்கிறது.

8வது ஊதியக் குழுவின் அறிக்கை எப்போது சமர்ப்பிக்கப்படும்?

எட்டாவது மத்திய ஊதியக் குழு நவம்பர் 3, 2025 அன்று அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க 18 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மே 2027-ன் தொடக்கமாகும்.

இந்த அறிக்கையில் அளிக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில், ஊதியங்கள், படிகள் மற்றும் ஓய்வூதியங்களில் மாற்றங்கள் செய்வது குறித்து மத்திய அரசு இறுதி முடிவை எடுக்கும். எனவே, அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் தற்போது ஆணையத்தின் கூட்டங்கள், பல்வேறு அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கைகள் மற்றும் வரவிருக்கும் பரிந்துரைகள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

இதற்கிடையில், மும்பை கூட்டங்களுக்கு முன்னர் சில முக்கிய கோரிக்கைகள் 8வது ஊதியக் குழுவிடம் வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு ஊழியர்களுக்கான கோரிக்கை

ஓய்வூதியதாரர்களுக்கான கோரிக்கை

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: எகிறப்போகும் சம்பளம், ஓய்வூதியம்... அரசு ஊழியர்களுக்கு மொத்தமாய் மாறப்போகும் அமைப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES