• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /டீப் ஃபேக், மார்பிங்! பெண்களை அச்சுறுத்தும் ஏஐ.. 2 மடங்கு அதிகரித்த சைபர் குற்றங்கள்.. ஷாக் ரிப்போர்ட்

டீப் ஃபேக், மார்பிங்! பெண்களை அச்சுறுத்தும் ஏஐ.. 2 மடங்கு அதிகரித்த சைபர் குற்றங்கள்.. ஷாக் ரிப்போர்ட்

Cyber Bullying Explained: இந்தியாவில் இணையவழி சார்ந்த பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருப்பதாகவும், ஏஐ டீப் ஃபேக், ஆபாசமான பேச்சுகள், மார்பிங் புகைப்படங்களை அனுப்பி பணம் பறித்தல் போன்ற குற்றங்களால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் கடந்த ஓராண்டில் மட்டும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக NCRP தெரிவித்துள்ளது.

Written ByUmabarkavi K
Published: Nov 29, 2026, 13:05 IST|Updated: Nov 29, 2026, 13:46 IST
joinshare
டீப் ஃபேக், மார்பிங்! பெண்களை அச்சுறுத்தும் ஏஐ.. 2 மடங்கு அதிகரித்த சைபர் குற்றங்கள்.. ஷாக் ரிப்போர்ட்
Image Credit: Image Source: Chatgpt

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
குரு பெயர்ச்சி பலன்கள்: 2027-இல் 3 முறை மாறும் குரு... 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு

குரு பெயர்ச்சி பலன்கள்: 2027-இல் 3 முறை மாறும் குரு... 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண வரவு

2

டிசம்பர் முதல் வெளுக்கப்போகும் கனமழை.. தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. வானிலை அப்டேட்

3

Gerrymandering என்றால் என்ன? எதிர்க்கட்சிகள் அச்சப்படுவது ஏன்? Explained

4

”எட்டப்பன்கள் இல்லை-கட்டபொம்மன்கள்” ராகுலுக்கு ஸ்டாலின் கொடுத்த தக் ரிப்ளை! அர்த்தம் இதுதான்..?

5

புதுச்சேரி: கடல் அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள்... போராடி மீட்ட லைப்கார்டு வீரர்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Cyber Bullying Explained: உலக நாடுகளில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஏஐ வந்த பிறகு நாம் யோசிக்காத பல விஷயங்கள் கூட இப்போது எளிதாக இருக்கிறது. இதனால், பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் கூட, மோசடிகள் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சிலர் மோசமான செயல்கள், மோசடிகளுக்கு இந்த ஏஐ டூல்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடத்தப்படும் மோசடிகள் தற்போது தீயாய் பரவி வருகின்றனர். 

மேலும், பெண்களை டீப் ஃபேக்  மூலம் மோசமாக சித்தரித்தி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும்,  நின்றபாடில்லை. இந்த நிலையில், தொழில்நுட்பம் சார்ந்த பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக ரிப்போர்ட் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரித்த இணையவழி குற்றங்கள்

இணையவழி சார்ந்த பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் இதுபோன்ற வழக்குகள்  இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும்  டெல்லி காவல்துறை புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் உறவில் இருந்தவர்கள் அந்தரங்கப் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுவது முதல், அடையாளம் தெரியாத சமூக ஊடகக் கணக்குகள் மூலம் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) 'டீப்ஃபேக்' காட்சிகளைக் கொண்டு பெண்களைக் குறிவைப்பது வரை, இணையவழித் துன்புறுத்தல்கள் மிகவும் தொடர்ச்சியானதாகவும் சிக்கலானதாகவும் மாறி வருவதை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.

தேசிய சைபர் குற்றப் புகார் தளத்தில் (NCRP) புள்ளிவிவரங்களுடன் உறுதிப்படுத்துகின்றன.  2020ஆம் ஆண்டில் 22,188ஆக இருந்த பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள், 2024ஆம் ஆண்டில் 48,475 ஆக உயர்ந்துள்ளது. கிட்டதட்ட 118.4 சதவீதம் பெண்களுக்கு எதிராக இணைவழி குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: டெங்கு தடுப்பு அதிரடி: கொசு ஒழிப்பை தீவிரப்படுத்திய தமிழ்நாடு அரசு

இணையதளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் நான்கு வகையான முக்கியக் குற்றங்களில் இந்த உயர்வு பதிவாகி உள்ளது. அதாவது, குழந்தைகள் ஆபாசமாக சித்தரிப்பது,  பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வீடியோக்கள் பதிவிடுவது, ஆபாசமான செயல்களை காட்டுவது, ஆபாச படங்கள் அல்லது தகவல்களை பரப்புவது போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளது. மேலும், ஒருவரை இணையத்தில் தொடர்ந்து கண்காணித்துத் தொல்லை கொடுப்பது (Cyberstalking) மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பழிவாங்கும் குற்றங்கள் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சைபர் குற்றங்களில் மும்பை முதலிடம்

இணையவழித் துன்புறுத்தல்கள் மற்றும் சைபர் மிரட்டல்களால் பாதிக்கப்படுபவர்களுக்காக மும்பையைச் சேர்ந்த  ராத்தி அறக்கட்டளை நடத்தி வரும் மேரி டிரஸ்ட்லைன் என்ற உதவி மையம் சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பதிவு செய்துள்ளது. வெளியான தரவுகளின்படி, ஆகஸ்ட் 2024 முதல் ஜூலை 2025 வரை இந்த உதவி மையத்திற்கு 626 அழைப்புகள் வந்துள்ளதாகவும், அவற்றில் 130 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்குகளில் மொத்தம் 253 வகையான இணையவழி குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1,137 ஆபத்தான இணைப்புகள் மற்றும் கணக்குகள் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத் தளங்கள் குறித்து புகாரளிக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டின் எண்ணிக்கையான 537-ஐ விட 112 சதவீதம் அதிகமாகும். இவற்றில் 981 இணைப்புகள் மற்றும் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 130 பேரில் 68% பேர் பெண்கள், 26% பேர் ஆண்கள், மீதமுள்ள 6% பேர் தங்களது பாலினத்தை வெளிப்படுத்தவில்லை என அந்த நிறுவனம் கூறியுள்ளது.

  • சைபர் குற்ற வழக்குகளில் மகாராஷ்டிரா மாநிலம்  24.6 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
  • மேற்கு வங்க மாநிலைம் சைபர் குற்ற வழக்குகளில் 12.3 சதவீதத்துடன் இரண்டாமிடத்தில் உள்ளது.
  • சைபர் குற்ற வழக்குகளில் 9.2 சதவீதத்துடன் டெல்லி மூன்றாம் இடத்தில் உள்ளது.

இதைத்தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 7 சதவீத வழக்குகளும், ஹரியானாவில் 4 சதவீதமும், ராஜஸ்தானில் 3 சதவீதமும், பஞ்சாபில் 2 சதவீதமும், சண்டிகரில் 2 சதவீதமும், இமாச்சலப் பிரதேசத்தில் 1 சதவீதமும் வழக்குகளும் பதிவாகி இருக்கின்றன.

மேலும் படிக்க: Explained: உடல்நலக்குறைவு, மகப்பேறு... இனி விண்ணப்பிக்காமலேயே பணம் கிடைக்கும்!! ESIC புதிய விதிகள்

டீப் ஃபேக்கில் அதிகம் சிக்கும் பெண்கள்

இந்த அறிக்கையின்படி, மொத்தமுள்ள 130 குற்றவாளிகளில் 91 பேர் (70%) பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 39 பேர் (30%) பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த குற்றவாளிகளில் 36 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது உரையாடல்களை முன்பே அணுகும் வாய்ப்பு பெற்ற இவர்கள், உறவில் ஏற்படும் முறிவு, உறவில் இருந்து பிரிந்த பிறகும் அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முயற்சியாகவே இத்தகைய துன்புறுத்தல்களில் ஈடுபடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, அறிமுகமில்லாத குற்றவாளிகள் ஈடுபடும் வழக்குகள் பெரும்பாலும் ஆபாசப் படங்களைக் காட்டிப் பணம் பறித்தல், டீப் ஃபேக் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். இத்தகைய சைபர் குற்றவாளி போலி கணக்குகள் மூலம் செயல்படுகின்றனர். ஒரு கணக்கு முடக்கப்பட்டால், உடனே வேறு  போலி கணக்குகளை உருவாக்கி, தொடர்ந்து பெண்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வழக்குகளில், பாதிக்கப்பட்டவருக்குத் தெரிந்த ஒருவரே முதலில் டீப் ஃபேக் படங்களை இணையத்தில் கசியவிடுகின்றனர். அதன் பிறகு, சமூக வலைத்தளங்களில் பார்வையாளர்களை ஈர்க்கவும், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அல்லது பணம் சம்பாதிக்கவும் மற்றவர்கள் அந்தப் படங்களை மீண்டும் பதிவிடுவது, மாற்றியமைப்பது அல்லது தொகுத்து வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என கூறப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்கள் அதிகரிக்க காரணம்?

சைபர் குற்றங்கள் அதிகரிக்க முக்கிய காரணங்களில் ஒன்று எளிதாக புகைப்படங்களை திருத்தும் செயலிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் அனைவருக்கும் எளிதாக கிடைப்பதாகும். இது தொர்பாக டெல்லி காவல்துறை கூறுகையில், ஒரு காலத்தில் சிறந்த தொழில்நுட்பத் திறன் கொண்டவர்களால் மட்டுமே செய்ய முடிந்த காரியங்களை, இப்போது சாதாரணமாகக் கிடைக்கும் செயலிகள் மூலமே செய்து விட முடிகிறது. இதனால், பெரிய அளவில் தொழில்நுட்பம் திறன் இல்லாதவர்கள் கூட பேலியான படங்கள், செயற்கைக் குரல் பதிவுகள் மற்றும் ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட வீடியோக்களை எளிதாக உருவாக்குகின்றனர்" என தெரிவித்தனர். 

மேலும் படிக்க: இனி டிவிலையும் ரீல்ஸ் பாக்கலாம்! விரைவில் இந்தியாவில் அறிமுகம்..மெட்டா அறிவிப்பு
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer