SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர்களுக்கு அக்டோபர் 28 வருகிறதா அறிவிப்பு? முக்கிய அப்டேட்

DA Hike: மோடி அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவைக் கூட்டம் வரும் புதன்கிழமை (அக்டோபர் 28) நடக்கவுள்ளது. இந்த நாளில், அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிப்புக்கான அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Written By Sripriya Sambathkumar
Published: Oct 25, 2026, 09:53 AM IST | Updated: Oct 25, 2026, 10:05 AM IST
Join

DA Hike: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஜூலை முதல் அமலுக்கு வரவுள்ள அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்வுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுவரை அரசு தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இது சுமார் ஒரு கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடையே ஒருவித அதிருப்தியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அகவிலைப்படி அதிகரிப்பு

திங்களன்று (அக்டோபர் 26) இது குறித்து அரசு ஒரு முடிவை எடுக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவைக் கூட்டம் வரும் புதன்கிழமை (அக்டோபர் 28) நடக்கவுள்ளது. இந்த நாளில், அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிப்புக்கான அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுவாக, அகவிலைப்படி குறித்த முடிவுகளை அமைச்சரவைக் கூட்டங்கள் நடைபெறும் நாளிலேயே அரசு அறிவிப்பது வழக்கம். இது எழுதப்படாத விதியாக இருந்தாலும், முக்கியமான கொள்கை முடிவுகள் பெரும்பாலும் இத்தகைய கூட்டங்களுக்குப் பின்னரே வெளியிடப்படுகின்றன. எனவே, அனைவரது பார்வையும் அக்டோபர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தின் மீது திரும்பியுள்ளது.

டிஏ உயர்வு அறிவிப்பில் தாமதம்

அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலேயே டிஏ உயர்வு (DA Hike) குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்தனர். அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்ற மாதத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், அகவிலைப்படி குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. அதேபோல், அக்டோபர் 14-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திலும் இது குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. அந்தச் சமயத்தில், ரயில்வே ஊழியர்களுக்கான செயல்திறன் சார்ந்த போனஸ் (performance-linked bonus) குறித்த அறிவிப்பு மட்டுமே வெளியானது.

அகவிலைப்படி எவ்வளவு உயரக்கூடும்?

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசின் சூப்பர் பரிசு: முன் பணம் பெறும் விதிமுறைகளில் முக்கிய மாற்றம்

சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

அகவிலைப்படி 63% ஆக அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? சில உதாரணங்கள் மூலம் இதை புரிந்துகொள்ளலாம்.

அடிப்படை ஊதியம்அகவிலைப்படி தொகை (60%)அகவிலைப்படி தொகை (63%)மாத அதிகரிப்பு
ரூ.18,000ரூ.10,800ரூ.11,340 ரூ. 540 
ரூ.25,000ரூ.15,000ரூ.15,750ரூ.15,750

மேலும் படிக்க | 8வது ஊதியக் குழு: தீபாவளிக்கு முன் முக்கிய அறிவிப்பு!! காத்திருக்கும் அரசு ஊழியர்கள்

டிஏ அரியர் கிடைக்குமா?

ஆம்!! இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்பதால், ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையும் (DA arrears) கிடைக்கும்.  அகவிலைப்படி அதிகரிப்புக்கு அரசின் ஒப்புதல் தாமதமாகி, அக்டோபர் அல்லது நவம்பர் மாத சம்பளத்துடன் இந்தத் தொகை வழங்கப்பட்டால், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான டிஏ அரியர் தொகையை ஊழியர்கள் மொத்தமாகப் பெறுவார்கள்.

அதாவது, அறிவிப்பில் தாமதம் ஏற்படால், ஊழியர்கள் நடப்பு மாதத்திற்கான உயர்த்தப்பட்ட அகவிலைப்படியுடன், ஜூலை முதலான முந்தைய மாதங்களுக்கான நிலுவைத் தொகையையும் சேர்த்துப் பெறுவார்கள். தற்போது, ​​அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இந்த அறிவிப்பு வெளியானால், அவர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் உயர்வு ஏற்படும்.

மேலும் படிக்க | Explainer: தீபாவளி போனஸ் யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும்? விதிகள் என்ன?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ஸ்ரீப்ரியா சம்பத், 6 ஆண்டுகளுக்கும் மேல் மீடியாவில் பணியாற்றி வருகிறார். இவர், வணிகம் மற்றும் தனிநபர் நிதி (Personal Finance) சார்ந்த கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றவர். மத்திய பட்ஜெட்டுகள், வங்கித் துறை, வருமான வரி, பங்குச் சந்தைகள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மத்திய அரசு ஊழியர்கள், ஊதியக் குழுக்கள் (Pay Commissions), ஓய்வூதியத் திட்டங்கள், ஓய்வூதியதாரர்கள், அரசின் முக்கியக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.எழுத்தை வாசகர்களோடு இணைவதற்கான ஒரு சிறந்த பாலமாகக் கருதும் இவர், அவர்களின் தேவைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறார். வாசகர்களுடன் இயல்பான, உண்மையான மற்றும் நேர்மையான தொடர்பைக் கொண்டிருப்பதே இவரின் முதன்மை இலக்காகும். பணி நேரத்தைத் தாண்டி, புத்தகங்கள் வாசிப்பது, புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது மற்றும் அறிவுசார் விவாதங்களில் பங்கேற்பது இவருக்கு மிகவும் பிடித்தமானவை.

ZEENEWS TRENDING STORIES