அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
Diwali Bonus Calculation: கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் தீபாவளி போனசுக்கான உத்தரவு முன்கூட்டியே, அதாவது 2025 செப்டம்பர் 29 அன்று வெளியிடப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு அக்டோபர் 10 அன்று வெளியிடப்பட்டது. இந்த ஆண்டுக்கான உத்தரவு எப்போது வெளியாகும் என்பது குறித்த தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Central Government Employees Diwali Bonus: மத்திய அரசு ஊழியர்களுக்கான 2025-26-ஆம் ஆண்டிற்கான தற்காலிக போனஸ் (ad-hoc bonus) குறித்த உத்தரவை இன்னும், செலவினத் துறை (Department of Expenditure) வெளியிடவில்லை. ரயில்வே ஊழியர்களுக்கான போனஸிற்கு மத்திய அமைச்சரவை நேற்று ( அக்டோபர் 14-ஆம் தேதி) ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் தீபாவளி போனசுக்கான உத்தரவு முன்கூட்டியே, அதாவது 2025 செப்டம்பர் 29 அன்று வெளியிடப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு அக்டோபர் 10 அன்று வெளியிடப்பட்டது. இந்த ஆண்டுக்கான உத்தரவு எப்போது வெளியாகும் என்பது குறித்த தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
2025-இல் போனஸ் எவ்வளவு கிடைத்தது?
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பாணையின்படி, 2024-25-ஆம் ஆண்டிற்கு, 30 நாட்களுக்கான ஊதியம் 'அட்-ஹாக் போனஸ்' எனப்படும் உற்பத்தித்திறன் சாராத போனஸாக (Non-Productivity Linked Bonus) வழங்கப்பட்டது.
தீபாவளி போனஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
இந்த போனஸ் உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படாமல், மாதத்திற்கு ₹7,000 என்ற உச்ச வரம்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அந்த குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கீட்டின்படி:
₹7,000 × 30 ÷ 30.4 = ₹6,907.89; இது முழு எண்ணாக மாற்றப்படும்போது ₹6,908 என அமைகிறது.
ஆகையால், இதன் கீழ் எழுத்தர் (clerk) பதவியில் இருக்கும் ஒரு ஊழியரும், மூத்த உதவியாளராக (senior assistant) இருக்கும் ஒரு ஊழியரும் ஒரே அளவிலான தொகையையே பெறுகின்றனர்.
கணக்கீட்டை இப்படி புரிந்துகொள்ளலாம்
மத்திய அரசு ஊழியர்களுக்கான தீபாவளி போனஸ் (தற்காலிக போனஸ் அல்லது உற்பத்தித்திறன் சாராத போனஸ்) அவர்களின் முழுமையான ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதில்லை. மாறாக இது ஒரு உச்சாவரம்பின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. அரசு இந்த உச்சவரம்பை ரூ.7,000 ஆக நிர்ணயித்துள்ளது.
போனஸ் கணக்கீட்டு சூத்திரம்:
(கணக்கீட்டு உச்சவரம்பான ₹7,000) × (போனஸ் வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை, உதாரணமாக 30 நாட்கள்) ÷ 30.4
வழக்கமான போனஸ் தொகை:
'குரூப் சி' (Group C) மற்றும் கெஜட் அல்லாத 'குரூப் பி' (Group B) ஊழியர்களுக்கு 30 நாட்களுக்கான தற்காலிக போனஸ் தொகை பொதுவாக ₹6,908 ஆக இருக்கிறது.
உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (PLB):
ரயில்வே போன்ற குறிப்பிட்ட துறைகளில், உச்சவரம்பு ரூ.7,000 ஆகவே இருக்கிறது. ஆனால், இது 78 நாட்களுக்குக் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் போனஸ் தொகை ₹17,951 ஆக அமைகிறது.
யாருக்கெல்லாம் போனஸ் கிடைக்கும்?
கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, பின்வரும் பணியாளர்களுக்கு இந்த போனஸ் வழங்கப்பட்டது:
- உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (Productivity Linked Bonus) திட்டத்தின் கீழ் வராத 'குரூப் சி' (Group C) பணியாளர்கள் மற்றும் 'குரூப் பி' (Group B) பிரிவைச் சேர்ந்த கெஜட்டட் அல்லாத (non-gazetted) அனைத்து பணியாளர்கள்.
- மத்திய ஆயுதக் காவல் படைகள் (Central Armed Police Forces) மற்றும் முப்படைகளில் (Armed Forces) பணிபுரியும் தகுதியுள்ள பணியாளர்கள்.
- மத்திய அரசு ஊதிய முறையைப் பின்பற்றும் யூனியன் பிரதேச ஊழியர்கள் (வேறு எந்த போனஸ் திட்டமும் இல்லாதவர்கள்).
- ரயில்வே, அஞ்சல் துறை மற்றும் சில குறிப்பிட்ட துறைகளில் பணிபுரிபவர்களுக்கு, உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் வழங்கப்படுகிறது.
அக்டோபர் 14 அன்று, ரயில்வே ஊழியர்களுக்கான போனஸிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி, 78 நாட்களுக்கான ஊதியத்திற்கு இணையான தொகை, அதிகபட்சமாக ₹17,951 வரை வழங்கப்படுகிறது.
ஓராண்டுக்கும் குறைவான பணி காலம் உள்ள ஊழியர்கள்
போனஸுக்கு தகுதி பெற ஒரு பணியாளர் மார்ச் 31, 2025 அன்று பணியில் இருந்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும். ஆறு முதல் பதினொரு மாதங்கள் வரை பணியாற்றியவர்களுக்கு, முழு மாதங்களின் அடிப்படையில் போனஸ் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு விகிதத்தின்படி கணக்கிட்டால், போனஸ் தொகை இப்படி இருக்கும்:
6 மாத பணிக்காலம்: போனஸ் தொகை - ரூ.3,454
9 மாத பணிக்காலம்: போனஸ் தொகை - ரூ.5,181
கடந்த ஆண்டு, குறிப்பிட்ட கால அளவு பணியாற்றிய தற்காலிக ஊழியர்களுக்கு (casual labour) ₹1,184 வழங்கப்பட்டது. இது ₹1,200 என்ற உச்ச வரம்பின் அடிப்படையில் கணக்கிடப்பட்டதாக அந்த அலுவலக குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போனஸ் கணக்கீட்டு உச்சவரம்பை அதிகரிக்க கோரிக்கை
இந்த ஆண்டுக்கான போனஸைக் கணக்கிடுவதற்கான உச்ச வரம்பை ₹7,000-லிருந்து ₹21,000-ஆக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. எனினும், இது குறித்த எந்த முடிவும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. போனஸ் தொகையை பெற ஊழியர்கள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.
மேலும் படிக்க | தீபாவளி போனஸ் அறிவிப்பு... 11 லட்சம் ஊழியர்களுக்கு குட் நியூஸ் - அமைச்சரவை ஒப்புதல்