SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஜியோ யூசர்ஸ்க்கு இரட்டை அதிர்ச்சி! சலுகையை நீக்கிய நிறுவனம் Incoming Call-க்கும் ஆபத்து?

Big Update for Jio Customers: ஜியோ தனது ரீசார்ஜ் திட்டங்களுடன் வழங்கப்பட்ட Google Al Pro சலுகையை நிறுத்தியுள்ளது. இனி அதற்கு சேவை பதிலாக Canva Pro Lite கிடைக்கும். மேலும், ரீசார்ஜ் முடிந்த பிறகு நீண்ட காலம் சிம் செயல்படாமல் இருந்தால் இன்கமிங் கால் சேவைகள் பாதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கையும் வெளியாகியுள்ளது. இதனால் ஜியோ பயனர்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

Written By Shiva Murugesan
Published: Nov 19, 2026, 14:27 IST | Updated: Nov 19, 2026, 14:32 IST
Image Credit: Ai | Jio Removes Google AI Pro Offer, Introduces Canva Pro Lite for Subscribers
Join

Jio News In Tamil: :இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில முக்கிய சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக Google Al Pro சந்தா சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. ரீசார்ஜ் முடிந்த பிறகு வரும் இன்கமிங் கால்கள் தொடர்பாக புதிய எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இதனால் ஜியோ பயனர்கள் மத்தியில் கவனம் அதிகரித்துள்ளது. அதன் விவரங்களை பார்ப்போம்.

Google Al Pro சலுகையை நிறுத்திய ஜியோ

கடந்த ஆண்டு ஜியோ தனது சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரீசார்ஜ் திட்டங்களுடன் கூகுள் ஏஐ ப்ரோ (Google Al Pro) சந்தாவை இலவசமாக வழங்கியது. இந்த சலுகையின் மதிப்பு சுமார் ₹35,100 எனக் கூறப்பட்டுள்ளது. AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் ஈர்ப்பாக இருந்தது.

ஆனால் தற்போது அந்த சலுகையை ஜியோ அமைதியாக நீக்கியுள்ளது. இனி புதிய ரீசார்ஜ் திட்டங்களில் Google Al Pro சலுகையை காண முடியாது. இதனால் புதிய பயனர்கள் அந்த வசதியை பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

Google AI Pro-க்கு மாற்றாக Canva Pro Lite

கூகுள் ஏஐ ப் (Google Al Pro) சலுகைக்கு பதிலாக தற்போது கேன்வா ப்ரோ லைட் (Canva Pro Lite) சேவையை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. கிராபிக் டிசைன், சமூக ஊடகப் பதிவுகள், பிரெசென்டேஷன்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் கேன்வாவின் இந்த சேவை, குறிப்பிட்ட ஜியோ திட்டங்களுடன் இலவசமாக வழங்கப்படுகிறது.

குறைந்தபட்சமாக ₹349 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்பவர்கள் Canva Pro Lite வசதியை ஒரு வருடம் வரை பயன்படுத்த முடியும். ஜியோவின் பக்கத்திலும் இந்த மாற்றம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - UPI MDR கட்டணம்: மீண்டும் தள்ளிப்போகும் அமலாக்கம்... சட்டமன்ற தேர்தல்கள் காரணமா?

ஏற்கனவே Google Al Pro பெற்றவர்கள் என்ன செய்ய வேண்டும்?

கூகுள் ஏஐ ப் (Google Al Pro) சலுகையை ஏற்கனவே பெற்ற பயனர்களின் தற்போதைய சந்தா காலம் முடியும் வரை சேவை தொடர வாய்ப்புள்ளது. ஆனால் புதியதாக அந்த சலுகையை பெற நினைப்பவர்களுக்கு இனி அந்த வாய்ப்பு கிடைக்காது. அதற்கு பதிலாக கேன்வா ப்ரோ லைட் (Canva Pro Lite) மட்டுமே வழங்கப்படும்.

எனவே ஜியோவின் கூடுதல் டிஜிட்டல் சலுகைகளை எதிர்பார்த்து ரீசார்ஜ் செய்பவர்கள், புதிய திட்ட விவரங்களை முன்கூட்டியே சரிபார்ப்பது அவசியமாகியுள்ளது.

ரீசார்ஜ் முடிந்தால் இன்கமிங் கால்களுக்கும் ஆபத்து?

ஜியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட தகவல் ஒன்றும் தற்போது கவனம் பெற்றுள்ளது. ஜியோ பயனர்கள் ரீசார்ஜ் திட்டம் முடிந்த பிறகு நீண்ட நாட்கள் சிம்மை பயன்படுத்தாமல் இருந்தால், இன்கமிங் கால் சேவையும் பாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஜியோ, ரீசார்ஜ் காலாவதியான பிறகு சில மாதங்கள் வரை இன்கமிங் கால்களுக்கு அனுமதி வழங்கியதாக பல பயனர்கள் தெரிவித்தனர். ஆனால் தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் இருக்கலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ஜியோ பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஜியோ சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் காலம் முடிவடைவதற்கு முன்பே புதிய திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது பாதுகாப்பானது. குறிப்பாக ஒரே எண்ணை வேலை, வங்கி சேவைகள், UPI மற்றும் OTP பயன்பாடுகளைப் பயன்படுத்துபவர்கள் சிம் இயக்கத்தைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்.

ரீசார்ஜ் செய்யாமல் நீண்ட காலம் வைத்திருப்பது சேவை தடங்கல்களுக்கு வழிவகுக்கலாம். எனவே திட்டம் முடிந்தவுடன் புதிய ரீசார்ஜை மேற்கொள்வது நல்லது.

ஜியோ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அப்டேட்

கூகுள் ஏஐ ப்ரோ போன்ற உயர்மதிப்புள்ள சலுகையை ஜியோ நீக்கியிருப்பது பல பயனர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. அதே நேரத்தில் கேன்வா ப்ரோ லை (Canva Pro Lite) போன்ற புதிய வசதிகளை நிறுவனம் மாற்றாக வழங்குகிறது. மேலும் ரீசார்ஜ் காலாவதியான பிறகு இன்கமிங் கால் சேவைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதால். ஜியோ பயனர்கள் தங்களது திட்டங்களை சரிபார்த்து பயன்படுத்துவது மிகவும் அவசியமாகியுள்ளது.

மேலும் படிக்க - மாத வருமானம் ரூ.1 கோடியா...! இன்ஸ்டாவில் பணத்தை குவிக்கும் கேரள பெண் - எப்படி?

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

ZEENEWS TRENDING STORIES