சமூக வலைதளங்கள் இன்று பொழுதுபோக்குக்கான தளங்கள் மட்டுமில்லை. பலருக்கும் வருமானத்தை கொடுக்கும் தளங்களாக மாறியிருக்கிறது.
யூ-ட்யூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு தற்போது பலரும் பல்வேறு வழிகளில் டிஜிட்டல் கிரியேட்டர்களாக வருமானம் பார்க்கிறார்கள். யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக்கில் அவரவர் பதிவின் வியூஸ் பொருத்து வருமானம் வரும்.
ஆனால், இன்ஸ்டாகிராமில் நீங்கள் அப்படி கிடையாது. சப்ஸ்கிரிப்ஷன் (சந்தா) மூலமாக மட்டுமே வருமானம் ஈட்ட முடியும். சப்ஸ்கிரிப்ஷன் பெற 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோயர்களை வைத்திருக்க வேண்டும்.
இந்தியாவில் அதன் கட்டணம் மாதத்திற்கு ரூ.49 முதல் ரூ.399 வரை நிர்ணயித்துக்கொள்ளலாம். அது ஒருவரது தனிப்பட்ட தேர்வு. அதாவது உங்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 10 ஆயிரத்திற்கும் மேல் பாலோயர்கள் இருந்தால், உங்களின் சிறப்பு வாய்ந்த கன்டென்ட்களை சந்தா செலுத்திதான் பார்க்க முடியும் என நிர்ணயிக்கலாம்.

பார்வையாளர் எவ்வளவு சந்தா செலுத்த வேண்டும் என்பதை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம். மாதத்திற்கு ரூ.49 முதல் ரூ.399 வரை சந்தா கோரலாம். இதன் மூலம் நீங்கள் வருமானம் ஈட்டலாம். அப்படியிருக்க, இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மட்டும் ரூ.1 கோடி வரை வருமானம் ஈட்டியிருக்கிறார் என அவரே சொல்லியிருக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த அஸ்வானி A, என்ற பெண் சமூக வலைதளங்களில் Purple Halcyon என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறார். ஆரம்பக் கட்டத்தில் வெளிநாட்டில் இருந்தபோது பயணம் தொடர்பான வீடியோக்கள் பதிவிட்டு வந்தனர்.
அதன் பின் இந்தியாவுக்கு திரும்பி அவரது டிஜிட்டல் தளத்தை விரிவுப்படுத்தியிருக்கிறார். ஃபேஷன், லைஃப்ஸ்டைல் போன்ற புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்து வருகிறார். கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அஸ்வானி இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் வருமானம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றை அவர் அளித்திருந்தார். சில மாதங்களில் மாத வருமானம் ரூ.1 கோடியை எட்டக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ஒவ்வொரு மாதமும் ஒரே அளவிலான வருமானம் கிடைப்பதில்லை என்றும் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும் ரூ.51.5 லட்சம் வருமான வரி செலுத்தியதாகவும், 2026ஆம் ஆண்டில் இதுவரை செலுத்திய வரி அதைவிட அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் செலுத்தும் பயனர்களுக்கு மட்டுமே பிரத்யேக பதிவுகள், ஸ்டோரிகள், ரீல்ஸ் உள்ளிட்ட உள்ளடக்கங்களை பார்க்க முடியும். இதன்மூலம், இவர் தங்களது பின்தொடர்பவர்களிடம் இருந்து நேரடியாக வருமானம் ஈட்டுகிறார்.
இதுவரை சப்ஸ்கிரிப்ஷன் செய்த பயனர்களுக்கு மட்டும் 324 ஸ்டோரிகள், 4 பதிவுகள், 6 ரீல்ஸ்களை பதிவிட்டு வருகிறார். தற்சமயம் அவருக்கு இதுவரை 21 ஆயிரத்து 700 பேர் சந்தா செலுத்தி உள்ளனர். ஒருவருக்கு மாதம் ரூ.390 கட்டணமாகும். இதை வைத்து மட்டும் கணக்கிட்டால் அவருக்கு மாதம் ரூ.84 லட்சத்து 63 ஆயிரம் வருவாயாக வருகிறது.

இருப்பினும் இதுபோன்று அனைவருக்கும் மாத வருமானம் வரும் என நினைப்பது சரியாக இருக்காது. இதில் நிலையான வருமானமும் வராது என்பது கவனிக்கத்தக்கது.