• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /வீடு வாங்கியவர்களுக்கு இனி ஜெயில் பயம் இல்லை: RERA சட்ட விதியில் தமிழக அரசு அதிரடி திருத்தம்!

வீடு வாங்கியவர்களுக்கு இனி ஜெயில் பயம் இல்லை: RERA சட்ட விதியில் தமிழக அரசு அதிரடி திருத்தம்!

Tamil Nadu real estate news : ரியல் எஸ்டேட் விதிகளில் முக்கிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. வீடு வாங்குபவர்களுக்கான சிறை தண்டனை விதி நீக்கப்பட்டு, அது அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

Written ByKarthikeyan Sekar
Published: Nov 27, 2026, 14:32 IST|Updated: Nov 27, 2026, 14:38 IST
joinshare
வீடு வாங்கியவர்களுக்கு இனி ஜெயில் பயம் இல்லை: RERA சட்ட விதியில் தமிழக அரசு அதிரடி திருத்தம்!
Image Credit: Tamil Nadu real estate news

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
வீடு வாங்கியவர்களுக்கு இனி ஜெயில் பயம் இல்லை: RERA சட்ட விதியில் தமிழக அரசு அதிரடி திருத்தம்!

வீடு வாங்கியவர்களுக்கு இனி ஜெயில் பயம் இல்லை: RERA சட்ட விதியில் தமிழக அரசு அதிரடி திருத்தம்!

2

TN Rain Alert: நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

3

எந்த தர்ஹாவும் இல்லை... தீபமேற்ற மாட்டீர்கள்... அஸ்வினி வைஷ்ணவ் பேச்சுக்கு சு.வெ. பதிலடி

4

இராமாயணா ஓடிடி ரிலீஸ் எப்போது? சந்தா வைத்திருந்தாலும் பார்க்க முடியாது - அப்புறம் எப்படி?

5

தொகுதி மறுவரையறையில் பாஜகவுக்கு திமுக ஆதரவா? வெளிப்படையாக சொன்ன ஸ்டாலின்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu real estate news : வீடு மற்றும் மனை வாங்கி மாதந்தோறும் EMI கட்டி வரும் சாதாரண மக்களுக்குப் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை விதிகளில் தமிழக அரசு முக்கியத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.

தமிழக அரசிதழில் வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், கடந்த நவம்பர் 5 ஆம் தேதியிட்ட அரசாணை அடிப்படையில் நவம்பர் 6 ஆம் தேதி அன்று சிறப்பு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) விதிகளில் முக்கிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | திருச்சி : பழங்குடியினர், நரிக்குறவர் நல வாரிய உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நீக்கப்பட்ட விதி என்ன?

புதிய திருத்தத்தின்படி, விதி 36(1) அட்டவணையில் இடம்பெற்றிருந்த "பிரிவு 68-ன் கீழ் சிறை தண்டனை - மனை, அடுக்குமாடிக் குடியிருப்பு அல்லது கட்டிடத்தின் மதிப்பீட்டுச் செலவில் 10% வரை" (Imprisonment under section 68 - Upto 10% of the estimated cost of the plot, apartment or building) என்ற வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. முன்னதாக, RERA ஆணையம் அல்லது மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உத்தரவை வீடு வாங்கியவர் மதிக்கத் தவறினால், 1 வருடம் வரை சிறை தண்டனை அல்லது சொத்து மதிப்பில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கும் வகையில் கடுமையான விதி நடைமுறையில் இருந்தது.  

இந்தச் சலுகை பில்டர்களுக்கா? வீடு வாங்கியவர்களுக்கா?

இந்தத் திருத்தம் கட்டுமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை அல்ல, மாறாக, வீடு வாங்கும் சாதாரண மக்களுக்கு  வழங்கப்பட்ட மிகப்பெரிய பாதுகாப்பாகும். கட்டுமான நிறுவனங்கள் ரெரா உத்தரவுகளை மீறினால், அவர்கள் மீது பிரிவு 63, 64 மற்றும் 65 ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்கும் தண்டனை விதிகள் எவ்வித மாற்றமும் இன்றித் தொடர்ந்து அமலில் இருக்கும். வீடு வாங்கியவர்கள் மீது இருந்த சிறை தண்டனை அச்சுறுத்தல் மட்டுமே தற்போது நீக்கப்பட்டுள்ளது.

வீடு வாங்கியவர்களுக்குக் கிடைக்கும் முக்கியப் பயன்கள்

சிறை தண்டனை அச்சம் நீக்கம்: ரெரா ஆணையத்தில் புகார் அளிக்கும்போதோ அல்லது வழக்கு நடத்தும்போதோ ஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டால், வீடு வாங்கியவரையே சிறைக்கு அனுப்பிவிடுவார்களோ என்ற அச்சம் இனி தேவையில்லை.

நியாயத்திற்காகப் போராடும் துணிச்சல்: கட்டுமான நிறுவனங்களுக்கு எதிராக வீடு வாங்கியவர்கள் எவ்விதத் தயக்கமுமின்றித் தங்களது உரிமைகளுக்காகச் சட்டப் போராட்டம் நடத்த முடியும்.

மனிதாபிமான அணுகுமுறை: கடன் வாங்கி வீடு கட்டும் சாதாரண குடிமக்களைக் குற்றவாளிகளைப் போல நடத்தும் கடுமையான நடைமுறை நீக்கப்பட்டு, சிவில் ரீதியான தீர்வுகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu