• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /பயனுள்ள தகவல்கள்
  • /இந்த அப்டேட்கள் இன்னும் செய்யவில்லையா? சீனியர் சிட்டிசன்கள் - ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கல்!

இந்த அப்டேட்கள் இன்னும் செய்யவில்லையா? சீனியர் சிட்டிசன்கள் - ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கல்!

Senior Citizens and Pensioners News: சீனியர் சிட்டிசன்கள் மற்றும் பென்ஷனர்கள் தங்களின் வங்கி கணக்கில் உள்ள அனைத்து முக்கிய தகவல்களையும் சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும். குறிப்பாக KYC, நாமினி, PAN இணைப்பு, மொபைல் எண் மற்றும் லைஃப் சர்டிபிகேட் சமர்ப்பிப்பு போன்றவை சரியாக இல்லையெனில் நிதி தொடர்பான பல சிக்கல்கள் உருவாகலாம்.

Written ByShiva Murugesan
Published: Nov 05, 2026, 01:37 PM IST|Updated: Nov 05, 2026, 01:44 PM IST
joinshare
இந்த அப்டேட்கள் இன்னும் செய்யவில்லையா? சீனியர் சிட்டிசன்கள் - ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கல்!
Image Credit: Ai Generator | Don't Let Your Bank Account Get Frozen: Important Update for Senior Citizens

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை

2

சிஎஸ்கே கலீல் அகமது, எல்லிஸை கழட்டிவிட்டது சரியா? லிவிங்ஸ்டன் தேவையா?

3

இந்தியா விசா விதிகளில் பெரிய மாற்றம்: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்

4

Explained : 28 ஆண்டுகள் நடந்தே உலகை சுற்றிய நபர்! ஒரு வழியாக வீடு திரும்பியது எப்படி?

5

திருமணத்திற்கு ரெடியாவது எப்படி? கல்லூரியில் புதிய Course அறிமுகம்.. மாநில அரசு அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்கள் உடனடியாக தங்களின் வங்கி கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பெயர், முகவரி, மொபைல் எண், KYC, நாமினி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் பென்ஷன் தாமதம், அரசு நிதியுதவி வராதது, வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கப்படுவது போன்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. SBI, Punjab National Bank, Bank of India , HDFC Bank, ICICI Bank போன்ற தனியார் வங்கிகளிலும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த நடைமுறைகள் பொருந்தும்.

ஏன் சீனியர் சிட்டிசன்கள் வங்கி கணக்கு விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்?

பலர் ஆண்டுகளுக்கு முன்பு வங்கி கணக்கைத் தொடங்கி வைத்திருப்பார்கள். பின்னர் வீடு, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற தகவல்கள் மாறியிருந்தாலும் வங்கி பதிவுகளில் அதை புதுப்பிக்காமல் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட தகவல் முரண்பாடுகள் ஏற்பட்டால் பென்ஷன் வரவு தாமதமாகலாம், அரசு மானியங்கள் தடைப்படலாம், பெரிய தொகை பண பரிவர்த்தனைகளில் சிக்கல் ஏற்படலாம், KYC சரிபார்ப்பு தோல்வியடையலாம், கணக்கு தற்காலிகமாக முடக்கப்படலாம்

எனவே வங்கி கணக்கில் உள்ள அனைத்து விவரங்களும் தற்போதைய நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்வது அவசியம்.

கட்டாயமாக சரிபார்க்க வேண்டிய தனிப்பட்ட விவரங்கள் என்னென்ன?

பெயர் மற்றும் பிறந்த தேதி

ஆதார், PAN, வங்கி கணக்கு ஆகியவற்றில் பெயர் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

பெயரில் எழுத்துப் பிழை அல்லது மாற்றம் இருந்தால் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும்.

குறிப்பாக பிறந்த தேதி தவறாக இருந்தால், சீனியர் சிட்டிசன் சலுகைகள் கிடைக்காமல் போகலாம்.

சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கிகள் வழங்கும் கூடுதல் வட்டி விகித பலன்களையும் இழக்க நேரிடலாம்.

முகவரி விவரம்

வேறு நகரம் அல்லது மாநிலத்திற்கு குடிபெயர்ந்திருந்தால் புதிய முகவரியை வங்கியில் பதிவு செய்ய வேண்டும்.

புதிய ஆதார் அல்லது முகவரி சான்றை சமர்ப்பித்து முகவரியை எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல்

வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் தற்போது பயன்பாட்டில் இருப்பது மிகவும் முக்கியம்.

இதன் மூலம் பண பரிவர்த்தனை SMS தகவல்கள் கிடைக்கும், மோசடி நடவடிக்கைகளை உடனடியாக கண்டறிய முடியும். OTP மற்றும் பாதுகாப்பு தகவல்களை பெறலாம். பழைய எண்ணே வங்கியில் பதிவு செய்யப்பட்டிருந்தால் உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க - அகவிலைப்படி 7% உயர்வு: தீபாவளிக்கு முன் தமிழக ஓய்வூதியர்களுக்கு அரசின் சூப்பர் பரிசு!

PAN கார்டை வங்கி கணக்குடன் இணைத்துள்ளீர்களா?

PAN விவரம் வங்கி கணக்குடன் இணைக்கப்படுவது தற்போது மிகவும் முக்கியமானதாக உள்ளது.

குறிப்பாக அதிக தொகை டெபாசிட் செய்யும்போது, ரூ.20 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும்போது, பெரிய அளவு பணம் எடுக்கும்போது PAN விவரங்கள் இல்லையெனில் கூடுதல் வரி பிடித்தம் அல்லது பரிவர்த்தனை சிக்கல்கள் உருவாகலாம்.

நாமினி பதிவு ஏன் அவசியம்?

ஒரு வங்கி கணக்குதாரர் அல்லது Fixed Deposit வைத்திருப்பவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால், அவருடைய சேமிப்புத் தொகை சட்டப்படி யாருக்கு செல்ல வேண்டும் என்பதை நாமினி விவரம் தீர்மானிக்கிறது.

நாமினி பதிவு செய்யப்படவில்லையெனில் குடும்பத்தினர்: சட்ட நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக பணத்தை பெற மாதங்கள் ஆகலாம் எனவே நாமினி விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்ப்பது அவசியம்.

ஒரே கணக்கில் பல நாமினிகளை சேர்க்கலாம்

தற்போதைய விதிகளின்படி ஒரே வங்கி கணக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட நாமினிகளை சேர்க்க முடியும்.

உதாரணமாக மனைவி, மகன் மகள் மற்றும் மற்றொரு குடும்ப உறுப்பினர் என அதிகபட்சமாக பலரை நாமினிகளாக சேர்க்கலாம். அதேபோல் யாருக்கு எவ்வளவு சதவீதம் தொகை செல்ல வேண்டும் என்பதையும் முன்கூட்டியே குறிப்பிட முடியும்.

KYC அப்டேட் செய்யாதால் என்ன நடக்கும்?

KYC (Know Your Customer) புதுப்பிப்பு செய்யப்படாமல் இருந்தால் வங்கி கணக்கு முடக்கப்படலாம், பண பரிவர்த்தனை தடைப்படலாம், பென்ஷன் வரவு தாமதமாகலாம் அரசு உதவித்தொகைகள் கிடைக்காமல் போகலாம். எனவே KYC நிலை சரியாக உள்ளதா என்பதை வங்கி கிளையில் அல்லது இணையவழி சேவைகளில் சரிபார்க்க வேண்டும்.

சீனியர் சிட்டிசன்களுக்கு Doorstep Banking வசதி

மூத்த குடிமக்கள் வங்கிக்கு நேரில் செல்ல முடியாத சூழ்நிலையில் Doorstep Banking சேவையை பயன்படுத்தலாம்.

இந்த சேவையின் மூலம் KYC புதுப்பிப்பு, ஆவண சரிபார்ப்பு, ஆயுள் சான்றிதழ் ஆகியவற்றை வீட்டிலிருந்தபடியே மேற்கொள்ள முடியும்.

பென்ஷனர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய Annual Life Certificate

ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடந்தோறும் Life Certificate சமர்ப்பிக்க வேண்டும்.

அதை வங்கி கிளையில் நேரடியாகவோ அல்லது Jeevan Pramaan Portal மூலம் டிஜிட்டலாகவும்,  Doorstep Banking சேவை மூலம் சமர்ப்பிக்கலாம். Life Certificate சமர்ப்பிக்க தவறினால் பென்ஷன் தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

வங்கி கணக்கு முடக்கப்பட்டால் எப்படி மீண்டும் செயல்படுத்துவது?

KYC இல்லாமை அல்லது தகவல் புதுப்பிப்பு செய்யாத காரணங்களால் வங்கி கணக்கு முடக்கப்பட்டிருந்தால்:

  1. அருகிலுள்ள கிளைக்கு செல்ல வேண்டும்.
  2. ஆதார், PAN மம் முகவரி சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
  3. புகைப்படம் மற்றும் விண்ணப்பப் படிவத்தை வழங்க வேண்டும்.
  4. Unfreeze Request கோரிக்கை அளிக்க வேண்டும்.
  5. சரிபார்ப்பு முடிந்த பிறகு கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும்.

பென்ஷன் வாங்குபவர்களே கவனம்

சீனியர் சிட்டிசன்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் வங்கி கணக்கில் உள்ள பெயர், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், PAN, KYC மற்றும் நாமினி விவரங்களை உடனடியாக சரிபார்த்து புதுப்பித்துக் கொள்வது மிகவும் அவசியம். இந்த சிறிய நடவடிக்கை, எதிர்காலத்தில் பென்ஷன் தாமதம், கணக்கு முடக்கம் மற்றும் நிதி சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.

மேலும் படிக்க - அடல் ஓய்வூதியத் திட்டம்: மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெற, 35 வயதிலிருந்து எவ்வளவு பங்களிப்பு செலுத்த வேண்டும்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Pension