SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ரயில் பயணிகளே அலர்ட்! RAC முறை ரத்தாகிறதா? இந்தியன் ரயில்வே எடுத்த முடிவு

Indian Railway RAC: இந்தியன் ரயில்வே ஆர்ஏசி டிக்கெட் முறையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்ஏசி டிக்கெட் முறையில் பாதிப் படுக்கைக்கு முழுக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகளிடையே புகார் எழுந்ததை அடுத்து, இந்த நடவடிக்கையை ரயில்வே வாரியம் எடுத்துள்ளது.

Written By Umabarkavi K
Published: Nov 13, 2026, 04:13 PM IST | Updated: Nov 13, 2026, 04:22 PM IST
Join

Indian Railway RAC: இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. இந்தியாவில் தினமும் 15,000க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ஆனால், ரயில்களில் டிக்கெட் கிடைப்பது என்பது  பெரும் சவாலானதாக இருக்கிறது. அதுவும் பண்டிகை நாட்களில் சொல்லவே வேண்டாம். அந்த நேரங்களில் ரயில் டிக்கெட் கிடைப்பது குதிரை கோபமாக இருக்கிறது. 

இதனால், இருக்கை கிடைக்குமா, பயணம் ரத்து செய்யப்படுமா என்ற கவலைப்படத் தொடங்குகிறீர்கள்.  அந்த நிலையில் தான், ஆர்ஏசி, காத்திருப்பு பட்டியல் பயண அனுபவத்தை தீர்மானிக்கின்றன.  இந்த நிலையில் தான், ஆர்ஏசி நடைமுறையில் ரயில்வே வாரியம் சில மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்ஏசி முறை என்றால் என்ன?

இந்திய ரயில்வேயில் RAC என்பது Reservation Against Cancellation (ரத்து செய்வதற்கான முன்பதிவு) என்பதாகும். உங்களிடம் RAC டிக்கெட் இருந்தால், நீங்கள் தைரியமாக ரயிலில் ஏறிப் பயணம் செய்யலாம். முன்பதிவு பெட்டிகளில் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு, ஆர்ஏசி முறையில் டிக்கெட்டுகள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன.

ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்யும் பட்சத்தில், காலியாக படுக்கையை மற்ற பயணிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் முறையாக ஆர்ஏசி செயல்படுகிறது. ஆர்ஏசி டிக்கெட் மூலம் ஒரு படுக்கையை இரண்டு பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. குறிப்பாக, இது சைட் லோயர் கீழ் பெர்த் ஆர்ஏசி டிக்கெட்டுகளுக்கு ஒதுக்கப்படும். கீழ்படுக்கையின் ஒரு பகுதியில் இருவரும் அமர்ந்து பயணிக்கும் வகையில் பிரித்து வழங்கப்படுகிறது. ஆனால், படுத்து உறங்க முடியாது. ஆனாலும் முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  

மேலும் படிக்க: Term Insurance எடுக்குறீங்களா? கிளைம் ரிஜெக்ட் ஆகக் கூடாதுன்னா.. இந்த ரூல்ஸை மறக்காதீங்க!

ஆர்ஏசி டிக்கெட் முறையில் என்ன பிரச்னை?

முழு டிக்கெட் கட்டணம் செலுத்தியும், பாதிப் படுக்கை வசதியும் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாக பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். ஒரு படுக்கை இரண்டு பயணிகளால் பகிரப்பட்டாலும், இருவரிடமும் முழு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. RAC அமைப்பில் இரண்டு பயணிகள் ஒரு படுக்கையைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படும்போது, ​​பெண்கள் அடிக்கடி சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும்போது, ​​அது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக பயணிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். நீண்ட தூரப் பயணங்களின் போது படுக்கைகளைப் பகிர்ந்துகொள்வது, பயணிகள் சரியாகத் தூங்குவதையும் ஓய்வெடுப்பதையும் கடினமாக்குகிறது.

மேலும் படிக்க: ரேஷன் கடைகளில் இனி பொருட்கள் கிடைக்காதா? புதிய e-RUPI வவுச்சர் முறை Explained

ஆர்ஏசி டிக்கெட்டுகளுக்கு அதிக தேவை

அதிக பயணிகளுக்கு இடமளிக்க ரயில்வே RAC முறையைப் பயன்படுத்துகிறது. உதாரணமாக, சத் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது, ​​நாடு முழுவதும் உள்ள ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், RAC பயணச்சீட்டுகளைச் சார்ந்திருக்கும் நிலை அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், எந்த விலை கொடுத்தாவது பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள பயணிகளுக்கு RAC முறை ஒரு உயிர்நாடியாகச் செயல்படுகிறது. ஆர்ஏசி முறையில் ஒரு பக்கம் தேவை இருந்தாலும்,  அதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும், அதனை அரசு சரி செய்ய வேண்டும் என பயணிகளிடையே கோரிக்கை எழுந்து வருகிறது.

ஆர்ஏசி முறை ரத்தாகிறதா?

இதனை கருத்தில் கொண்டு ஆர்ஏசி முறையில் சில மாற்றங்களை செய்ய ரயில்வே வாரியம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆர்ஏசி முறையை ரத்து செய்வது குறித்து ரயில்வே பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. RAC பயணச்சீட்டுகளுக்கு முழு இடங்களையும் ஒதுக்குவது அல்லது பகுதியளவு பணத்தைத் திரும்ப அளிப்பது, இட ஒதுக்கீட்டை மேம்படுத்த மாற்று ஏற்பாடுகளைச் செய்வது தொடர்பாக ரயில்வே ஆலோசனை செய்து வருகிறது. 

இது தொடர்பாக ரயில்வே தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இது முன்மொழிவு நிலையில் மட்டுமே உள்ளது என்று சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஒரு நாடாளுமன்றக் குழு ஏற்கனவே RAC முறையை மறுஆய்வு செய்யப் பரிந்துரைத்துள்ளது. இந்திய ரயில்வே வாரியம் தற்போது பயணிகளின் வசதி மற்றும் நலன்களைக் கருத்தில் கொண்டு, தற்போதைய முறையை ஆய்வு செய்து வருகிறது.  இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னரே, பயணிகளுக்கான வசதிகள் மற்றும் கட்டணங்கள் மீது குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: 8வது ஊதியக் குழு: அடுத்த 10 ஆண்களில் அதிரடியாய் உயரும் அரசு ஊழியர்களின் சம்பளம்... கணக்கீடு இதோ
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES